“இது நட்புத்துரோகம் இல்லையா? சுதர்சனனுக்குத் தெரிஞ்சா என்னஆகும்?”
“ஒன்றும் ஆகாது. நாம் ஃபார்முலாவை
எடுத்துக்கொண்டு தேசிகன்கிட்ட செல்வோம்.
அவங்கிட்ட பணத்தை வாங்கிட்டு யாருக்கும்
தெரியாத இடத்துக்குப் போய் நம்முடைய
வேலையைத் தொடங்குவோம்.”
“ராம்நாம் அவசரப்பட வேண்டாம். கொஞ்ச
நாள் காத்திருப்போம்.சுதர்சனனிடம் திரும்பவும் பேசுவோம்.
அவன் ஒத்துக்கொள்ளலைன்னா நீ சொல்வதுபோல செய்யலாம்.”முகுந்தனின் யோசனையை அரைமனதோடு ஒத்துக்கொண்ட ராம்“சரி பார்க்கலாம்” என்றான்.
ஆனால் பலமுறை வற்புறுத்தியும் சுதர்சனன் அவர்களது
விருப்பத்திற்கு உடன்படவில்லை. அதனால் ராமும் முகுந்தனும் தேசிகனைசந்தித்து தங்களது விருப்பத்தை அவனிடம் தெரிவித்தனர்.ஆனால் தேசிகன் சுதர்சனனும் வந்தால்தான்
அவர்கள் கேட்கும்உதவியைச் செய்யமுடியும் என்றான்.
காரணம் அவர்கள் மூவரில்சுதர்சனன் மிகவும் சாமர்த்தியம் நிறைந்தவன் மட்டுமல்ல நேர்மையானவனும்கூட.கல்லூரியில் படிக்கும்பொழுது சுதர்சனன் தேசிகனை கண்டுகொள்ளவே
மாட்டான். தேசிகன் ஏதாவது தொந்தரவு கொடுத்தாலும் அதையும் அலட்சியப்படுத்தி விடுவான்.
அதையெல்லாம் மனதில் வைத்திருந்ததேசிகன் சுதர்சனனை எபபடியாவது தன்னிடம் உதவிபெற வைக்கவேண்டும் என்று எண்ணினான்.அதனால் ராம்முகுந்தனிடம் “சுதர்சனனை அழைத்து வாருங்கள்.நீங்கள் கேட்ட உதவி உடனே கிடைக்கும்.” என்றான்.
“சுதர்சனன் இதற்கு ஒருபோதும் சம்மதிக்கமாட்டான். அதனால்அவனுக்கே தெரியாமல் இந்த ஆராய்ச்சியைத்
தொடங்க நாங்க முடிவுபண்ணியிருக்கிறோம்.” என்று ராம் சொன்னதும்“இல்லை. அவனுக்குத் தெரியவேண்டும். அவனுடைய ஆசைஎன்னோட உதவியால்தான் நிறைவேறப் போகுதுன்னு அவன் தெரிஞ்சுக்கணும்.” என்று தேசிகன் சொன்னது அவனுடைய பழி வாங்கும்குணத்தை வெளிப்படுத்தியது.
ராமும் முகுந்தனும் ‘தேசிகனின் பழைய குணம் மாறவில்லை.
அவன் நேரத்திற்கு தகுந்தாற் போல் வேஷமிட்டுக் கொண்டிருக்கிறான்.இவனிடம் உதவி கேட்டிருக்க வேண்டாமோ அவசரப்பட்டுவிட்டோமோ’என்று எண்ணினார்கள்.
அவர்களின் எண்ணம் அறிந்தவன்போல் தேசிகன் அவர்களிடம்“கவலைப்படாதீங்க உங்களோட ஆசை நிச்சயம் நிறைவேறும். என்னைநம்பி வந்திட்டிங்கல்ல. ஆனால்.. அதற்கு
முன்பு நான் நிறைவேற்றவேண்டிய முக்கியமான காரியம்
ஒண்ணு இருக்கு. அதை முதல்லமுடிச்சிக்கிறேன்.
அப்பொழுதுதான் உங்களோட ஆராய்ச்சிக்கு எந்த
இடையூறும் ஏற்படாது.” என்று சொல்லிவிட்டு முகுந்தனின் செல்போனை பிடுங்கி சுதர்சனனை அழைத்தான்.
“ஹலோ தோழா என்ன உன் நல்ல குணங்களெல்லாம்
இன்னும்மாறல போலிருக்கு. இந்த காலத்தில இப்படியெல்லாம் இருந்தால்பிழைக்கிறது கஷ்டம் தெரியுமா?” என்று சற்று நக்கலுடன் கேட்டான்.
“ஏய்நீ யார்? இது முகுந்தன் மொபைல் நம்பராச்சே.” என்று
சுதர்சனன் மறுமுனையில் கோபமுடன் பேசினான்.
“சுதர்சனா இப்பவே கோபப்பட்டா எப்படி. நான் சொல்லப்போறதைக்கேட்டு நீ நிறைய.கோபப்பட வேண்டியிருக்கும்.
உன் உயிர்த்தோழர்கள் அதுதான் ராம்முகுந்தன் இருவரும் இப்போ எங்கே இருக்காங்கதெரியுமா?” தேசிகனின் பேச்சில் வில்லத்தனம் வெளிச்சம் காட்டியது.
ராம்முகுந்தன் இருவருக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என்ற பயத்தில் சுதர்சனன் தேசிகனிடம் “டேய் முதலில் நீ யார்என்று சொல். அவர்கள் இருவருக்கும் என்ன ஆச்சு?” என்று கோபம்தெரிக்க கேட்டான்.
“அமைதி நண்பா அமைதி. ஓ.. .. நான் யாருன்னு சொல்லல இல்ல. தேசிகன் உன் அலட்சியத்திற்குரிய தேசிகன். உன் நண்பர்களுக்கு
ஒன்றும் ஆகலை அவங்க பிழைக்கத் தெரிஞ்சவங்க. புத்திசாலித்தனமாஎன்கிட்ட வந்து சேர்ந்துட்டாங்க. ஆனால்.. உனக்குத்தான் ஏதோகெடுதல் ஆகப்போவதாக என் மனசு சொல்கிறது.”“தேசிகா நீ செய்யும் அநியாயத்திற்கு முதல்ல உனக்குத்தான்கெடுதல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. என் நண்பர்களுக்கு உன்னால்ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்
நான் உன்னை சும்மா விடமாட்டேன்”
“சுதர்சனா! எதிரியான என் குணத்தைப் புரிந்துகொண்ட அளவுக்கு
உன் அருகிலேயே இருந்த உன் நண்பர்களின் குணத்தை நீ
அறியலியே.. உன்னை நினைச்சா எனக்குப் பாவமா இருக்கு.”
“என்ன உளர்றே.”“உளறல் இல்லை நண்பா உண்மை. அந்த உண்மை உனக்குத்தெரியுமா?. மனசை கொஞ்சம் திடமா வைச்சிக்கோ. இது உன்னுடையஉயிருக்கே உலை வைக்கிற உண்மை. உனது உயிர் நண்பர்கள் என்று நினைச்சிட்டிருக்கியே அவங்க ரெண்டுபேரும் இப்பொழுதுஇங்குதான் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லை உங்கள் கண்டுபிடிப்புக்கான ஃபார்முலாவும் இப்பொழுது என்கையில்.”
“டேய். நீ அவங்களைக் கடத்தி வந்துட்டியா?”
“அதற்கு அவசியமே இல்லாமல் செய்துட்டாங்க. அவங்களே
என்கிட்ட உதவிகேட்டு வந்துட்டாங்க. இன்னொன்று உனக்குத் தெரியுமா?உனக்குத் தெரியாமலே அவங்க ரெண்டுபேரும் ஆராய்ச்சியைத் தொடங்கப் போறாங்களாம். உன்னை நினைச்சா எனக்குப் பாவமாக இருக்கு.”
“நிச்சயமாக அவங்க அப்படி செய்யமாட்டாங்க. நீதான் ஏதோ சதிசெய்கிறாய். இப்பொழுதே போலீஸில் சொல்லி நீ செய்த அக்கிரமங்களுக்கெல்லாம் உனக்குத் தண்டனை பெறச்செய்யிறேன்.” என்று சுதர்சனன் சொல்லி முடிக்கும் முன்பு“சுதர்சன எங்களை மன்னிச்சிடு” என்று ராமின் குரல் கேட்டது.
சுதர்சனனுக்கு இதயத்தில் நெருப்பை அள்ளி வீசியது போலிருந்தது.“ராம் தேசிகன் சொல்றது உண்மையா?” என்று கேட்டான்.
“சுதர்சனா சேதிகனின் சுயரூபம் தெரியாமல் உனக்குத் துரோகம்செய்துட்டோம்.” என்று ராம் சொல்லிக்கொண்டிருக்கும்
போதே தேசிகன்அவனிடமிருந்து மொபைலை பிடுங்கினான்.
“என்ன சுதர்சனா! இப்பொழுது புரிகிறதா பணம் எதையும் செய்யும்
என்று. இப்பொழுதும் ஒன்றும் ஆகிவிடலை. நீ மட்டும் சரின்னு சொல்.உனக்காக நான் எத்தனை கோடி வேண்டுமானாலும்
தருகிறேன். உன்ஆராய்ச்சியைத் தொடங்கு. நீங்கள்
கண்டுபிடித்திருக்கும் இந்த ஃபார்முலா என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.”
“டேய்நிறுத்துடாஸயாருக்கு வேணும் உன் பணம். துரோகிகள்
உன்னுடன் சேர்த்து அவங்களையும் ஜெயிலுக்கு அனுப்புறேன்.” என்றுசொல்லிவிட்டு மொபைலை நிறுத்தினான்.
பல ஆண்டுகள் சகோதரர்கள் போல் இருந்த நண்பர்கள் செய்ததுரோகம் சுதர்சனனின் உள்ளத்தில் ஆயிரம் தேள்கள் கொட்டுவதுபோல்இருந்தது. பல இரவும் பகலும் கஷ்டப்பட்டு எழுதிய ஃபார்முலா.இப்பொழுது ஒரு கொடூரன் கையில். நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சில் வேதனை குடிகொண்டது.
‘அந்த துரோகிகளை சும்மா விடக்கூடாது’ என்று நினைத்தவன்காவல் நிலையம் செல்ல புறப்பட்டான். அப்பொழுது அவன் மனைவி“என்னங்க வெளில எங்காவது போறீங்களா? கொஞ்சம் போற வழியில் கோயில்ல என்னை இறக்கிவிட்டுட்டு போயிடுங்க” என்று அவன்பதிலுக்கு காத்திராமல் காரில் ஏறி உட்கார்ந்துவிட்டாள். சுதர்சனன்இருந்த மனநிலையில் அவளை எதுவும் சொல்ல முடியவில்லை.
சுதர்சனனின் அமைதியையும் இருக்கமான முகத்தையும் பார்த்தஅவனது மனைவி “ என்னஸ ஒருமாதிரி இருக்கீங்க. ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.“ஒன்றுமில்லை” என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான்.அதே நேரம் அவர்களுக்கு எதிரில் எமன் போல வந்து கொண்டிருந்தது ஒரு லாரி. சுதர்சனனை அழிக்க தேசிகன் அனுப்பிய எமன்தான் அந்த லாரி என்பது யாருக்கும் தெரியாது. கண் இமைக்கும்நேரத்திற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.சுதர்சனனின் மனைவி அதே இடத்திலேயே உயிர் துறந்தாள்.சுதர்சனன் தன் தந்தைக்காக உயிரைப்பிடித்திருந்தான் போலும். மருத்துவ
மனையில் சேர்க்கப்பட்ட சுதர்சனன் உயிருக்குப் போராடிய
நிலையிலும் தந்தையிடம் ராம்முகுந்தன் இருவரும் செய்த துரோகத்தையும்தேசிகனின் கொடூர எண்ணத்தையும் நடந்தது விபத்தல்ல நண்பர்களின் துரோகத்தால் ஏற்பட்ட கொலை. என்று சொல்லிவிட்டு உயிர்துறந்தான்.
ஆனால் காவல்துறை அதை விபத்து என்று பைலையே
மூடிவிட்டனர். தேசிகனின் அரசியல் செல்வாக்கை மீறி அவனை எதுவும் செய்யமுடியாது. அப்படி அவனை எதிர்த்தாலும் ரிஷிக்கும் எங்களுக்கும்ஆபத்து என்பதால் ரிஷியின் பெற்றோர் இறந்தவுடன் அங்குள்ள வீடுநிலம் அனைத்தையும் வித்துட்டு இங்கே வந்துட்டோம்.உயிர் நண்பர்களின் பேராசையே என் மகனையும் மருமகளையும் அழித்துவிட்டது. இன்று அந்த துரோகிகள் தேசிகனின் பிடியில்சிக்கியிருக்காங்க. தேசிகனால் அவங்க அழியப்போறது உறுதி.
அனைத்தையும் சொல்லிமுடித்திருக்கையில் பாட்டியின் கண்களில்கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.
பாட்டி மட்டுமாஸரிஷியும் தனது பெற்றோருக்கு ஏற்பட்ட கதியைக்கேட்டு அழுதான். ஆனந்தும் மிகுந்த வேதனையுற்றார். இருந்தாலும்பாட்டிஇ ரிஷி இருவரையும் சகஜ நிலைக்குத்திருப்ப நினைத்தார்.“சரி. நடந்ததை இப்போ விட்டு விடுவோம். நடக்கப் போறதைப்பார்ப்போம். இப்பொழுது தேசிகன் அவர்கள் இருவரையும் எங்கே வைத்திருப்பான். முதலில் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.” என்றார்.“ அவன் அவர்களை எங்கு வைத்திருந்தால் என்ன. அவர்கள்அழிந்தால் போதும்” என்று வெறுப்புடன் கூறினாள் பாட்டி.
அதற்கு ரிஷி “ இல்லை பாட்டி அவர்களை நிச்சயம் கண்டுபிடிக்கணும். அந்த தேசிகனையும் அழிக்கணும்”என்று ஏதோ சபதம் எடுப்பவன்போல் கூறினான். ரிஷி கூறியதைக் கேட்ட பாட்டிக்கு மனதில் கவலை ஏற்பட்டது.“ ரிஷி.வேண்டாம் தேசிகன் கொடூரமானவன். அவங்கிட்ட மோதவேண்டாம். உன்னையும் இழந்துவிட நான் விரும்பல. இதையெல்லாம்மறந்துட்டு உன்னோட படிப்பில் மட்டும் கவனம் செலுத்து” என்று ரிஷியிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
“ஆமாம் ரிஷி. அவங்க சொல்றதுதான் சரி. நீ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாதே. இவங்களைக் கண்டுபிடிச்சு அழிப்பதுதான் இனிஎன் முதல் வேலை.” என்று ஆனந்த் கூறினார்.
“அங்கிள். காசி ஜான் என்று ரெண்டு கிரிமினல்களை பிடிச்சுவைச்சிருக்கீங்களேஸ அவங்ககிட்ட விசாரிச்சாகூட தேசிகன் எங்கிருக்கான்னு தெரிஞ்சிக்கலாம். ஏன்னா அவங்க தேசிகனோட கையாட்கள்.”என்று ரிஷி சொன்னவுடன்
“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் ரிஷி?” என்று கேட்டார்.
“முதல்ல அவங்களை விசாரிங்க. அப்புறம் எல்லாம் சொல்றேன்.”
“சரி.நீங்க எதுக்கும் கவலைப்படாம இருங்க. நான் எல்லாம் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு ஆனந்த் கிளம்பினார்.பாட்டி சொன்னவற்றை உள்ளேயிருந்து கேட்டுக்கொண்டிருந்தரினோ ஆனந்த் சென்ற அடுத்த செகண்ட் கண்களில் கண்ணீர் வடியபாட்டி ரிஷி இருவரிடமும் ஓடி வந்தது.
அதே நேரம் தொலைபேசி ஒலித்தது.பாட்டிஎடுத்துபேசினாள்.பேசிமுடித்தவள்
ரிஷி ரினோ இருவரையும் பார்த்தாள். இருவருக்கும்ஒன்றும் புரியவில்லை.“என்ன பாட்டி என்ன விஷயம்?” என்று ரிஷி கேட்டான்.
“ஊர்ல உன் அத்தைக்கு ஏதோ ஆபரேஷனாம். அதனால ஒருமாதம் அங்கே வந்து இருக்கணுமாம். அதுதான் என்ன செய்றதுன்னுதெரியல.”
“இதுல யோசிக்கறதுக்கு என்ன இருக்கு பாட்டி. நீங்கதானே
அவங்களுக்கு உதவிசெய்யணும். அதனால உடனே கிளம்புங்க.” என்றுரிஷி கூறினான்.
“ஆமாம் பாட்டி அத்தை பாவம் அவங்களுக்கு உதவி செய்யவேற யார் இருக்காங்க.” என்று ரினோ கூறியதும்“டேய்என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா. உங்களைவிட்டுட்டு நான் எப்படிப் போகமுடியும்?. அதனால ரிஷிக்கு பரீட்சைமுடியட்டும். எல்லாரும் போகலாம். இன்னும் ரெண்டு நாள்தானே.சமாளிச்சுக்கச் சொல்லிடலாம்.” என்று சொல்லிவிட்டு பாட்டி உள்ளேசென்றுவிட்டாள்.
ரினோ ரிஷியின் அருகில் வந்து அவனிடம் மெதுவாக “ரிஷி! இதுதான் நல்ல சந்தர்ப்பம். உனக்குப் பரீட்சை முடிந்தவுடன் பாட்டியை எப்படியாவது ஊருக்கு அனுப்பிடணும். அப்படினாத்தான் நாம தேசிகனைக்கண்டுபிடிக்க முடியும்.”என்றது.
“நிச்சயமா அவனையும் அந்த துரோகிகளையும் கண்டுபிடிச்சுஅழிப்பதுதான் என் முதல் வேலை” என்று பேசினான்.அன்று இரவு ரிஷிக்கு தூக்கமே வரவில்லை.
“ரினோ” என்று மெல்லிய குரலில் அழைத்தான்“என்ன ரிஷி நீ இன்னும் தூங்கலியா?”என்று கேட்டது ரினோ.
“தூக்கம் வரல ரினோ. ரினோ நீ யார்? அந்த பறக்கும் தட்டு எப்படிஇங்கு வந்தது. அது தேசிகனை அழிக்கப் பயன்படுமா? உனக்கு மட்டும் எப்படி பறக்கும் சக்தி கிடைத்தது? என்னால் பறக்க முடியுமா? ரினோ நான் அந்த பாவிகளை அழிக்கணும். எனக்கு ஏதாவது உதவிசெய்யேன்.”
“ரிஷி! இன்னும் ரெண்டு நாள் பொறுத்திரு. உனக்குள் இருக்கும்சக்தியை நீயே அறிவாய். நீ இப்பொழுது எதைப்பற்றியும் கவலைப்படாதே. தேசிகனுடைய அழிவு நிச்சயம் உன் கையால்தான்”ரினோவின் வார்த்தைகள் ரிஷிக்கு தைரியத்தை ஊட்டியது.
மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டான் ரிஷி. ரினோ வழக்கம்போல் எங்கோ சென்றிருந்தது. ரிஷி பாட்டியை அழைத்தான். ஆனால்பாட்டியிடமிருந்து பதில் இல்லை.பாட்டியின் அறைக்குச் சென்று பார்த்தான். தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடும் பாட்டி அன்று ஏனோ எழுந்திருக்கவில்லை. நன்றாகப் போர்த்தி படுத்திருந்தாள்.பயந்துபோன ரிஷி பாட்டியின் அருகில் சென்று “பாட்டிஸ” என்றுஅழைத்தான் அப்பொழுதும் பதிலில்லை. ரிஷி அழுதேவிட்டான். பாட்டிபோர்த்தியிருந்த போர்வையை விலக்கி பாட்டியைத் தொட்டுப்பார்த்தவன்அதிர்ந்தே போனான்.பாட்டியின் உடம்பு அனலாகக் கொதித்தது. ரிஷி தொட்டவுடன்பாட்டி முனங்கினாள்.
அப்பொழுது உள்ளே நுழைந்த ரினோ“ரிஷி பாட்டிக்கு என்ன ஆச்சு?” என்று பதறியபடி ஓடி வந்தது.“ரினோ பாட்டிக்கு காய்ச்சல். உடம்பு ரொம்பச் சுடுது. எனக்குப்பயமா இருக்கு ரினோ.” என்று அழுதான் ரிஷி.
“ரிஷி! அழாதே முதலில் டாக்டருக்கு போன் பண்ணி வரச்சொல்லலாம்” என்று சொல்லிக்கொண்டே டைரியை எடுத்து அதில் எழுதிவைத்திருந்த டாக்டர் கிருஷ்ணனின் நம்பருக்கு டயல் செய்தது ரினோ.டாக்டர் கிருஷ்ணன் அவர்களது குடும்ப நண்பர்.“ஹலோ” என்றது ரினோ.ரிஷி ஓடி வந்து ரிசீவரைப் பிடுங்கிக் கொண்டான்.
“உன் குரலைக்கேட்டா வெட்னரி டாக்டர்தான் வருவார். நானேபேசுறேன்.” என்றான் ரிஷி.போன் பண்ணிய சிறிது நேரத்தில் டாக்டர் வந்தார். பயப்பட ஒன்றுமில்லை அதிகமான வேலைப்பழுதான் காய்ச்சலுக்குக் காரணம். ஒருஊசி போடுகிறேன் எல்லாம் சரியாகிவிடும்.” என்று சொல்லிவிட்டு ஊசிஎடுத்து போடப்போனார்.டாக்டர் வந்ததும் பாட்டியின் கட்டிலுக்கடியில் ஒளிந்திருந்த ரினோ ஊசி என்றதும் ‘ஸ்’என்று சத்தம் எழுப்பியது.
ரிஷி டாக்டருக்குத்தெரியாமல் ரினோவை ஒரு உதை விட்டான்.
“ரிஷி அது என்னப்பா சத்தம்?” என்று ஊசி போட்டுக்கொண்டேடாக்டர் கேட்டார்.
“ஒன்றுமில்லை அங்கிள் அங்கே வேற ஏதோ சத்தம்.” என்று சமாளித்துவிட்டு “ பாட்டிக்கு மாத்திரை ஏதாவது கொடுக்கணுமா அங்கிள்?” என்று கேட்டான்.
“ ஆமா ரிஷி இந்தா இந்த மாத்திரையைக் கொடு. நான் சாய்ந்திரம்
வந்து பார்க்கிறேன். பாட்டியை நல்லா ரெஸட் எடுக்கச்சொல்.” என்றுசொல்லிவிட்டுக் கிளம்பினார்.சிறிது நேரத்தில. பாட்டி மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். ரினோவும் ரிஷியும் அருகிலேயே அமர்ந்திருந்தனர்.வாடிய முகத்துடன் அமர்ந்திருந்த இருவரையும் பார்த்து “டேய் எனக்கு ஒன்றுமில்ல. லேசா காய்ச்சல்தானே. சரியாயிடும். வாங்க முதலில்உங்களுக்குச் சாப்பிட ஏதாவது செஞ்சுதர்றேன்”என்று எழுந்திருக்கமுயன்றாள். ஆனால் உடம்பு அசதியாக இருந்தது. முடியவில்லை.உடனே ரிஷி “பாட்டி! நீ ரெஸட் எடு நானே பார்த்துக்கொள்கிறேன்.உனக்கு முதலில் டீ போட்டுத் தருகிறேன். பிரெட் சாப்பிட்டு மாத்திரையைப் போட்டுட்டுத் தூங்கு.” என்று சொல்லிக்கொண்டே சமையலறையை நோக்கிச் சென்றான்.
“ரிஷி நான் உனக்கு உதவி செய்றேன்”என்று ரினோ அவன் பின்னாடியே ஓடியது. ரிஷி டீ போடுவதற்காக டீத்தூள் டப்பாவைத் தேடினான். அப்பொழுது மிளகாய்ப்பொடி டப்பா அவன் கண்ணில் பட்டது. அதை எடுத்து “ரினோ இந்தா இதைச் சாப்பிடு டேஸ்டா இருக்கும்.” என்றுரினோவிடம் கொடுத்தான்.ரினோவும் ஏதோ சாப்பிடத்தான் தருகிறான் என்று நினைத்து டப்பாவிலிருந்து கொஞ்சம் தட்டி வாயில் போட்டது. காரம் நாக்கை எரித்தது. ஆனால் ரிஷியிடம் காட்டிக்கொள்ளாமல் சிறிது தண்ணீர்எடுத்துக் குடித்து விட்டு
“ரிஷி இது என்னது? நிஜமாவே ரொம்ப டேஸ்டா இருக்கு.” என்றது. ரிஷிக்கு குழப்பம். ‘வேறு எதையாவது மாற்றிக்கொடுத்து விட்டோமோ’ என்று சந்தேகப்பட்டு ரினோவிடமிருந்து டப்பாவை வாங்கிஅதில் சிறிது எடுத்து நாக்கில் வைத்துப்பார்த்தான்.
“ஆ.... எரியுதே” என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் எடுத்துக்குடித்தான். ரினோ கைகொட்டி சிரித்தது.“டேய் வாலா சிரிச்சது போதும் நிறுத்துடா” என்று ரிஷி அதட்டினான்.“ ரிஷி அங்க பாரு மாஷா டீச்சரோட பாட்டுச்சத்தம். உனக்குகேக்குதா?”“இப்படிக் கத்தினா ஊருக்கே கேக்கும். சே! இவங்களுக்கு மெதுவாகவே பாடத்தெரியாதா. முதல்ல இதுக்கு ஒரு வழி பண்ணனும்.”“ரிஷி நீ சாப்பாடு ரெடி பண்ணிட்டிரு நான் இதோ வந்திடுறேன்.”என்று சொல்லிவிட்டு ரினோ மறைந்தது.
‘இவன் திடீர்னு எங்க போறான்? ஏதாவது வம்பு செய்துட்டுவரக்கூடாதே’ என்று எண்ணினான் ரிஷி.மாஷா டீச்சர் தன்னை மறந்து கண்களை மூடிக்கொண்டு ‘ஆ....ஆ என்று ராகம் இழுத்து பாடிக்கொண்டிருந்தாள். அதேநேரம் அங்கு சென்ற ரினோ கையில் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை மாஷாவின் வாயில் கொட்டிவிட்டு மறைந்துவிட்டது.
“ஐயோ.... அம்மா.எரியுதே ஏய் யாரது” வாயில் ஏற்பட்ட எரிச்சல் தாங்காமல் கத்தினாள் மாஷா டீச்சர்.மாஷா டீச்சரின் அலறல் கேட்ட ரிஷி ‘என்ன ஆச்சு இந்த டீச்சருக்கு. ஏன் திடீர்னு கத்துறாங்க? ஏய் ரினோ நீ போய் ஏதாவதுசெஞ்சியா?’ என்று அருகில் வந்து நின்ற ரினோவிடம் கேட்டான்.
“சே! சே! நான் ஏன் அங்க போகப்போறேன். அவங்க கண்ணைமூடிட்டுப் பாடியிருப்பாங்க அப்போ தேள் ஏதாவது கொட்டியிருக்குமோஎன்னவோ” ரினோ இப்படிச் சொன்னாலும் ரிஷிக்கு அதன் மீதுசந்தேகம்தான்.
“நான் போய் என்னன்னு பார்த்துட்டு வந்துடுறேன்”என்று சொல்லிவிட்டு மாஷா டீச்சர் வீட்டை நோக்கி நடந்தான்.மாஷாவிடம் “டீச்சர்ஸஎன்ன ஆச்சு ஏன் கத்துனீங்க?” என்றுகேட்டான்.
“ரிஷி. நான் பாடிட்டு இருக்கும்போது யாரோ வாயில் மிளகாய்ப்பொடியைக் கொட்டிட்டாங்க எரியுது ரிஷி. கொஞ்சம் தண்ணீர் எடுத்துதாயேன்.” என்று சொன்ன மாஷாவின் கண்களில் நீர் வடிந்தது.“டீச்சர் இந்தாங்க முதல்ல தண்ணி குடிங்க. இனி ஒருவாரத்திற்குவாயே திறக்காதீங்க. நான் போய் இந்த வேலையைச் செய்தது யார்னுகண்டுபிடிக்கிறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று சொல்லிவிட்டுவீட்டுக்கு வந்தான் ரிஷி. எதுவுமே தெரியாததுபோல் அமைதியாக இருந்த ரினோவிடம்
“டேய். ஏண்டா அப்படி செஞ்சே?” என்று கேட்டான்.
“அவங்க பாடுறது எனக்குப் பிடிக்கல. பாட்டிக்கும் தொந்தரவாஇருக்கும். அவங்கபாடுறேன்னு சொல்லிட்டு இப்படிக்கத்தினா யாருக்குத்தான் எரிச்சல் வராது.”என்றது ரினோ.
“உன் கர கர குரலைவிட அவங்க குரல் நல்லாத்தான் இருக்கு.”
“ரிஷி நீ என்னை ரொம்ப கிண்டல் பண்ணினே அப்புறம் நானும்பாட ஆரம்பிச்சிடுவேன்.” என்று சொல்லிவிட்டு“அப்படிப்போடு போடு.. மாஷா டீச்சர் வாயில் மிளகாப்பொடியைப் போடு” என்று பாட ஆரம்பித்தது. ரிஷி இரு காதுகளையும் பொத்திக்கொண்டு “டேய் கண்ணா வேண்டாண்டா. உன் குரல் பெஸ்ட் கண்ணா பெஸ்ட். இதோடு நிறுத்திக்கோ. இல்லைன்னா அடுத்து மிளகாப்பொடி இல்ல ஆஸிட்தான் ஊற்றுவேன் உன் வாயில்.” என்றான்.
“சரிஇ ரசிக்கத்தெரியாத உங்கிட்ட நான் பாடலை. பசிக்குது சாப்பாடுரெடியா?”“என்ன ஆனாலும் திங்கிறதில மட்டும் கவனமா இருப்பியே.”ரினோவுக்கு சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு பாட்டிக்கு மாத்திரையைக் கொடுத்தான். மாலையிலும் டாக்டர் வந்து பார்த்துவிட்டு ஒரு ஊசியைப்போட்டுவிட்டு போனதும் பாட்டி சற்று தெம்பானாள். எழும்பி உட்கார்ந்தவள்ரிஷி ரினோ இருவரிடமும்“என்னடா ரெண்டுபேரும் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.“ஆமா பாட்டி. உங்களைவிட ரிஷி நல்லா சமைக்கிறான்” என்றுசொல்லிய ரினோ “பாட்டி டிவி போடட்டுமா?” என்று கேட்டது“ஏற்கனவே டிவியில் கண்ட கண்ட நிகழ்ச்சியைப் பார்த்து வாய்ரொம்ப பேசுற. அதனால இப்ப நியூஸ் மட்டும் கேட்கலாம்.” என்றுசொல்லிவிட்டு ரிஷி டிவியை ஆன் செய்தான்.
“க்கும்.. காலையில சொன்ன செய்தியைத்தான் திரும்பத் திரும்பசொல்லிட்டு இருப்பாங்க.” என்று முணுமுணுத்தது ரினோ.டிவியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்த பெண்மணி ‘மக்களுக்குஒரு முக்கிய அறிவிப்பு’ என்றதும் அனைவரின்
கவனமும் அவள்பக்கம் திரும்பியது.
‘சென்னை நகரில் புதிதாக ஒரு வினோத மனிதன் தோன்றியுள்ளான். அவனை மனிதன் என்பதா? மிருகம் என்பதா? ஒரு பெரியமிருகம் போல்தான் இருக்கிறான். ஆனால் அவனது செய்கைகளும்பேச்சும் அவனை மனிதனாகத்தான் நினைக்கத் தோன்றுகிறது. அவன்இருபது அடி உயரமும் இரும்பு போன்ற உடம்புடனும் மிகவும்பலமுள்ளவனாகவும் காணப்படுகிறான்.
அவன் பறக்கும் சக்தியையும் பெற்றுள்ளான். அவன் மக்களைத்துன்புறுத்த நினைக்கலாம். அதனால் யாரும் வெளியில் அவசியமின்றிநடமாட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து டிவியில் அந்த மனிதனின் உருவம் காட்டப்பட்டது.
‘யார் இவன்? வேற்றுக்கிரகத்து மனிதனா? அல்லது மாயாவியா?அல்லது கதைகளில் வருவதுபோன்ற பூதமா? ஏற்கனவே ரினோஎன்று யாரோ ஒருவன் மாயாவிபோல் அவ்வப்பொழுது வந்துகொண்டிருக்கிறான். இப்பொழுது இந்த ராட்சஸ மனிதன். இவர்களெல்லாம் யார்?’ என்ற கேள்விகளும் எழுத்து வடிவில் டிவியில் ஓடியது. அடுத்து அவன் பேசினான். “ஹா...ஹா.....” அவனது சிரிப்பு இடி இடிப்பது போல் இருந்தது.
“எனதருமை மக்களே! நான்தான்‘ராக்போ’. நான்தான் உங்கள் கடவுள். நீங்கள் இனிமேல் என்னைத்தான்வணங்கவேண்டும். என்னை நன்றாகப் பாருங்கள்.” கர்ணகடூரமாகஇருந்தது அவனது குரல்.அவனைக்கண்டு மக்கள் அலறி ஓடினார்கள்.“ஓடாதீர்கள்.வாருங்கள்.... வந்து என்னை வணங்குங்கள். பயப்படாதீர்கள் நான் உங்கள் கடவுள். நான் இப்பொழுது போகிறேன் மறுபடியும் வருவேன். என்னை வணங்கத் தயாராகுங்கள்”என்று சொல்லிவிட்டு பறந்து காணாமல் போனான்.
டிவியை அணைத்துவிட்டு ரிஷி “ரினோ யாரிவன்?. எங்கிருந்துவந்திருப்பான்.?” என்று கேட்டான்.“தெரியல ரிஷிஸஆனால் கண்டுபிடுச்சுடலாம். அதுக்கு முன்னாடிபாட்டியை ஊருக்கு அனுப்பணும்.” என்று பாட்டிக்கு கேட்காமல் ரிஷியிடம் ரகசியமாக சொன்னது ரினோ.“என்னடா ரகசியம் பேசுறீங்க ரெண்டுபேரும்”பாட்டி கேட்கும்பொழுது போன் அலறியது. ரிஷி எடுத்து பேசினான். அத்தைதான் பாட்டியை வரச்சொல்லி நினைவுபடுத்தினாள்.
“யாருடா போன்ல?”“அத்தைதான் பாட்டி. நீங்க உடனே புறப்பட்டு வரணுமாம்”“உங்களை விட்டுட்டு எப்படிடா போறது?”“பாட்டி கவலைப்படாம போயிட்டு வாங்க. ரிஷி உங்களைவிடசூப்பரா சமைக்கிறான். நாங்க சமாளிச்சுக்குவோம்.” என்றது ரினோ.“ஏண்டா என்னை அனுப்புறதில அப்படி என்ன உனக்குசந்தோஷம். உன்னை நினைச்சாத்தான் கொஞ்சம் பயமா இருக்கு. நீஏதாவது ஏடாகூடமா பண்ணி ரிஷியை தொந்தரவு பண்ணுவியே.”
“ஐயோ! பாட்டிஸஅப்படியெல்லாம் எதுவும் செய்யமாட்டேன். அத்தைபாவம் இல்லியா. அதுதான் உங்களைஅவசரப்படுத்துறேன்.”
“ஆமா பாட்டிஸ அத்தை பாவம் நீங்க காலையில கிளம்புங்க.
ரினோவை நான் பார்த்துக்கிறேன்.” என்று ரிஷி சொன்னதும் பாட்டிஅரைமனதுடன் சம்மதித்தாள.;பாட்டிக்கு இரவு வெகு
நேரமாகியும் தூக்கமே வரவில்லை.எழுந்து ரிஷியின் அறைக்குள் சென்றாள். ரிஷி நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தான். பாட்டி ரினோவின் அருகில் சென்று அதை மெதுவாக எழுப்பினாள். எழும்பிப்பார்த்த ரினோவை சத்தம் போடாமல்வெளியே வா என்று சைகை காட்டினாள்.ரினோ எழுந்து பாட்டி பின்னால் வந்தது. ஹாலில் வந்து பாட்டியுடன் உட்கார்ந்த ரினோ “பாட்டி என்ன விஷயம்?.”என்றது.
“ரினோ! நீ இப்பவாவது உண்மையைச்சொல். நீ யார்?. தினமும்எங்கே போறே? இதெல்லாம் தெரியாம நான் ஊருக்குப்போக மாட்டேன்.இப்பவும் நீ சொல்லலைன்னா ரிஷியையும் என்னோட அழைச்சிட்டுப்போறேன். நீ எங்கேயிருந்து வந்தியோ அங்கேயே போயிடு.” என்றாள்பாட்டி.
“சரி பாட்டி நான் எல்லாத்தையும் சொல்லிடுறேன். சொல்லக் கூடியநேரமும் வந்தாச்சு. ஆனால் உங்கக்கிட்ட மட்டுமில்ல ரிஷிக்கிட்டேயும்சொல்லணும். அதனால் முதல்ல ரிஷியை எழுப்பி அழைச்சிட்டு வர்றேன்.” என்று சொல்லிவிட்டு ரிஷியை எழுப்பச் சென்றது. பல நாட்கள் தெரியாமல் இருந்த ரகசியம் இன்றாவது தெரியப்போகிறதே என்று பாட்டி ஆவலுடன் காத்திருந்தாள்.
“டேய்ஸ.ஏண்டா இப்படி தூக்கத்தில் எழுப்பிக் கூட்டிட்டு வர்றே?.எதுவானாலும் காலையில் பேசிக்கலாண்டா.” என்று ரினோவைத்திட்டிக்கொண்டே எழும்பி வந்த ரிஷி ஹாலில் பாட்டி உட்கார்ந்திருப்பதைப்பார்த்ததும் “பாட்டி இந்த நேரத்தில நீங்க ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க? தூக்கம் வரலியா?” என்று கேட்டான்.
“இல்ல ரிஷி இந்த ரினோ ஏதோ சொல்லப்போறானாம். உட்கார்.என்னன்னு கேட்போம்”டேய் அப்படி என்னடா முக்கியமான விஷயம் இந்த ராத்திரிநேரத்தில?” என்று கேட்ட ரிஷியிடம் ரினோ
“ரிஷி அந்த ரோடாஸை ஓட்டிப்பார்க்கணும்னு ஆசை மனதில்இருக்குதா?” என்று ரினோ கேட்டது.
‘ரோடாஸ்’ என்றதும் ரிஷிக்கு தூக்கம் எல்லாம் பறந்து போனது.
“இப்ப ஓட்டிப்பார்க்கலாமா?” என்று கண்கள் விரிய கேட்டான்.
“அதுக்கு முன்னாடி இந்த கடிதத்தைப் படி”வத்ஸாசர் எழுதிய கடிதத்தை ரிஷியிடம் கொடுத்தது ரினோ.கடிதத்தை வாங்கி முன்னும் பின்னும் திருப்பினான்.
“அதை பிரித்துப்படி” என்றது ரினோ.
கடிதத்தைப் படித்து முடித்த ரிஷி “ரினோ யார் இந்த வத்ஸாசர்?என்னைப் பற்றி அவருக்கு எப்படித் தெரியும்.?” என்று கேட்டான்.
ரினோ ஓடிச்சென்று ஒரு போட்டோ ஆல்பத்தை தூக்கிக் கொண்டுவந்தது.“எதுக்குடா ஆல்பத்தைத் தூக்கிட்டு வர்றே?
”ரினோ ஆல்பத்தை புரட்டி அதில் இருந்த ஒருவரைக்காட்டி
“ரிஷிஇது யார்ன்னு தெரியுதா?”என்று கேட்டது.ரிஷி அவரைப் பார்த்துவிட்டு “இவர் என் பெரிய தாத்தா வசந்தன்என்று தர்மா
தாத்தா சொல்லியிருக்காரே. இவர் காலேஜ் படிக்கும்பொழுது ஏதோ கோபத்தில் வீட்டை விட்டுப் போயிட்டார்னு சொன்னார்.
இப்போ இவரை ஏன் காட்டுறே?” என்று கேட்டான்அவனுக்குப் பதில் சொல்வதற்கு முன்பு ரினோ தான் வரைந்து வைத்திருந்த வத்ஸாசரின் உருவ படத்தைக்காட்டி“இது யார்னு தெரியுதா?” என்று கேட்டது.“ தெரியும். இவரை நான் பார்த்திருக்கிறேன். இவர் சென்னையில்நான் படித்த ஸ்கூலுக்கு வந்திருக்கிறார்.” என்றான் ரிஷி.
“அப்படின்னா. அன்றைக்கு நான் இதை வரைந்து காட்டும்பொழுது நீ எதுவுமே சொல்லலியே ஏன்?”“அப்பொழுது எனக்கு சொல்ணும்னு தோணல”“ரிஷி இதுவரை இதை நீ என்கிட்ட சொல்லவேயில்லையே”என்றாள் பாட்டி.
“அவனுக்கு அது யாரென்றே தெரியாது அப்புறம் எப்படி சொல்வான். இப்பொழுது நான் சொல்கிறேன். இவர் யாரென்று. “இவர்தான் வத்ஸாசர். கடிதத்தில் இருக்கிறதே வசந்தன் என்ற வத்ஸாசர் என்றுஅவர் இவரேதான்.”
“இவரை நாம் பார்க்கலாமா? எங்கிருக்கிறார்?”“இவர் இப்பொழுது உயிருடன் இல்லை.”“உனக்கு எப்படி இவரை தெரியும்?”“என்னை உருவாக்கியவரே இவர்தானே. முதலிலிருந்து எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வத்ஸாசரைப்பற்றி சொல்லஆரம்பித்தது ரினோ.வீட்டைவிட்டுச் செல்லும்பொழுது வசந்தன் ‘இந்த உலகத்தில் இது வரை யாரும் செய்யாத சாதனையை செய்து காட்டவேண்டும்.இந்த உலகத்தையே தன் சாதனையால் வியக்க வைக்க வேண்டும்’என்ற ஒருவித வெறியுடன்தான் சென்றார்.
பல நாள் எங்கெங்கோ சுற்றித்திரிந்தார். ஒரு நாள் இமயமலையில்இருந்து வந்திருந்த ஒரு சந்நியாசிகள் கூட்டத்தைச் சந்தித்தார். அவர்கள் கூடவே பல இடங்களுக்கு சுற்றித்திரிந்தவர் கடைசியில் அவர்களுடனே இமயமலைக்குச் சென்றுவிட்டார்.
சொந்தம் பந்தம் ஆசை அனைத்தையும் துறந்து இமயமலையில்
நாற்பது வருடங்களுக்கு மேல் கடும் தவத்தை மேற்கொண்டார்.
அங்கிருந்த துறவிகள் அனைவரும் அவர்மேல் மிகவும் மரியாதைவைத்திருந்தனர். அதுவே அவருக்கு ஒரு மமதையை ஏற்படுத்தியது.தான் மற்றவர்களைவிட உயர்ந்தவன் என்ற எண்ணம் அவர் மனதில்ஏற்பட்டது.ஒருநாள் முனிவர் ஒருவர் வசந்தனைச் சந்திக்க வந்திருந்தார். இதற்கு முன்பு அந்த முனிவரை யாரும் பார்த்ததில்லை. அவர் யார்என்று யாருக்கும் தெரியவும் இல்லை. அவரிடம் ஒரு ஒளி தெரிந்தது. பார்ப்பதற்கு ‘தேவரிஷி’ போல் இருந்தார். அவர் வசந்தனிடம் வந்தார். வசந்தனின் கண்களை தன் கண்களால்ஊடுருவினார். அவர் வாய்திறந்து எதுவும் பேசவில்லை. ஆனால் மனதில் பேசினார். அது வசந்தனுக்கு மட்டுமே கேட்டது.
“வசந்தா! நீ இனிமேல் வசந்தன் அல்ல வத்ஸாசர். அதுதான் இனிஉன் பெயர். உனது நாற்பது வருட தவத்தின் பலனை நீ அடையலாம்.இங்கிருந்து உடனே பொதிகைமலைக்கு செல். அங்குள்ள அகத்தியர்மலையிலிருந்து நூற்றி எட்டு மைல்கல் வடமேற்கு திசை நோக்கிகாடு மலை ஆறு மேடு பள்ளம் அனைத்தும் கடந்து நடந்து சென்றால் அங்கு சித்தர் மலை இருக்கும். அதில் ஒரு அருவி உண்டு.அந்த அருவியில் குளித்தால் எந்தவிதமான நோய்களும் தீர்ந்துவிடும். அதுமட்டுமல்ல அந்த மலையில் உலகிலேயே எங்கும் காணமுடியாதமூலிகைகள் உண்டு. அந்த மூலிகைகளைக் கொண்டு மண்ணைபொன்னாக்கலாம். பொன்னை சாம்பலாக்கலாம்.
அந்த சித்தர் மலையில்தான் சித்தர்கள் அனைவரும் ஒருசேரஇறைவன் அருளைப் பெற்றனர். அதுமட்டுமல்ல அங்கு ஒரு தேவரகசியம் புதைந்து கிடக்கிறது.நீ அங்கு சென்றால் அதை தெரிந்து கொள்ளலாம். அங்கு ஒருகுறிப்பிட்ட இடத்தில் மட்டும் செடிகொடிகளோ மரங்களோ வளர்ந்திருக்காது. அங்குதான் அந்த ரகசியம் புதைந்திருக்கிறது.
நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடித்தால் வெற்றி
பெறுவாய். கோபமும் அவசரமும் தற்பெருமையும்
கொண்டாயானால் உன்செயலே உன்னை அழித்துவிடும்.
உடனே இங்கிருந்து புறப்படு.”என்று சொல்லிவிட்டு அந்த முனிவர் மறைந்து விட்டார். சிறிது நேரத்தில் வத்ஸாசரும் அங்கிருந்து புறப்பட்டார். யாருக்கும்எதுவும் புரியவில்லை. அவரிடம் எதுவும் கேட்கவும் தோன்றவில்லை. அவர் செல்வதையே தங்களை மறந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இமயமலையில் இருந்து திரும்பிய வத்ஸாசர் அகத்திய மலைக்குப்போகும் முன்பு அவர் பிறந்த ஊருக்குப் போய் பார்த்து வர விரும்பிஅங்கு சென்றார். அங்கு தம்பி தர்மாவின் நண்பரைச் சந்தித்தார். அவர்மூலமாக தனது தம்பியையும் மற்றவர்களைப் பற்றியும் அறிந்து கொண்டார். பின்பு நேராக ரிஷி படிக்கும் பள்ளிக்குச் சென்றார். அங்கு பள்ளியின்தலைமை ஆசிரியர் மூலம் ரிஷியைச் சந்தித்தார். ஆனால் தான் தான் ரிஷியின் பெரிய தாத்தா என்று சொல்லிக்கொள்ளவில்லை. ரிஷியைப்பார்த்து புன்னகைத்து அவன் தலையில் கைவைத்துஆசிர்வாதம் செய்துவிட்டு சென்றுவிட்டார். அங்கிருந்து அகத்திய மலை சென்றவர் அங்கு ஒருநாள் ஓய்வெடுத்தார். மறுநாள் சூரிய உதயத்தின் போது சித்தர் மலைநோக்கிதனது பயணத்தைத் தொடர்ந்தார்.உடம்பிலும் மனதிலும் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது போல்உணர்ந்தார். அவரது நடையின் வேகம் காற்றைக் கிழிப்பது போல்இருந்தது. யாரும் எட்டிப் பிடிக்க முடியாத வேகம். அவரதுவேகத்தைக் கண்ட விலங்குகள்கூட விலகி வழிவிட்டன.பல மைல்கல் நடந்து சென்றிருப்பார்.
அங்கு ஓரிடத்தில் காட்டுமரங்களை வெட்டிக் கொண்டிருந்தது ஒரு கும்பல். அந்த கும்பலின்தலைவன் தில்லைநாயகம் என்ற தில்லை தன் அடியாட்களிடம் “டேய்!ஏதோ சலசலப்பு கேட்குது. யாரோ வர்றாங்க போலிருக்கு. சிறிது நேரம்வேலையை நிறுத்துங்க யார்னு பார்ப்போம்.” என்று சொல்லி விட்டுபையிலிருந்த துப்பாக்கியை கையிலெடுத்து வைத்துக்கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தான்.சிந்தனையெல்லாம் சித்தர் மலையிலிருந்த வத்ஸாசர் தில்லைநாயகத்தையோ அவனது கும்பலையோ கவனிக்கவில்லை. அவரது நடையின்வேகமும் குறையவில்லை. ஆனால் தில்லை ‘வத்ஸாசரால் தங்களுக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோ’ என்று எண்ணி அவரை நோக்கி “ஏய்ஸநீ யார்? இங்கு ஏன்வந்தே? சொல்ஸ.. இல்லைன்னா சுட்டுவிடுவேன்” என்று கோபத்துடன்கத்தினான். வத்ஸாசர் தில்லை பேசியதை காதில் வாங்கிக் கொண்டதாகவேதெரியவில்லை. ‘என்ன எதுவுமே பேசாமா போய்க்கிட்டிருக்கான்.இவன் யாராக இருக்கும்? ஒரு வேளை இவன் பைத்தியமோ! ’என்றுதனக்குள்ளே சொல்லிக் கொண்ட தில்லை வத்ஸாசரை நோக்கி “ஏய் பித்தா” என்று கத்தி அழைத்தான்.இதுவரை அவன் பேசிய வார்த்தைகள் எதுவும் காதில் வாங்காத வத்ஸாசருக்கு ‘பித்தா’ என்ற வார்த்தை மட்டும் இதயத்தில் இடி இறங்கியது போல் கேட்டது. நாற்பது வருடங்களுக்கு முன்னால் தனது தந்தையும் மற்றவர்களும் தன் செயலைக் கண்டு தன்னை ‘பித்தா’என்று அழைத்தது ஒரு வினாடி மனதில் மின்னலென தோன்றி மறைந்தது.
மீண்டும் அதே வார்த்தையைக் கேட்டதும் புயலென திரும்பி
தில்லையை நோக்கினார். அவர் திரும்பிய வேகமே தில்லையை பயமுறுத்தியது. அவர்பார்த்த பார்வை நெருப்பு அம்புகள் தன்னை நோக்கி வருவது போல் இருந்தது. அவ்வளவு தான் தில்லை திரும்பிப் பார்க்காமல் ஓடியேவிட்டான். அவன் பயத்துடன் ஓடிவருவதைப் பார்த்து மற்றவர்கள் “அண்ணேஎன்னாச்சு அவன் யார்?” என்று கேட்டார்கள்.
“அவர் சாதரண மனிதரல்ல. பெரிய முனிவர்போல் தெரிகிறது.நாம்அவருக்குத் தொந்தரவு கொடுக்கக்கூடாது.
அதனால் நாம் உடனேஇங்கேயிருந்து போயிடலாம் வாங்க” என்று தில்லை சொன்னவுடன்அவன் ஆட்களில் ஒருவன்
“ஆனால் வேலை பாதியிலேயே நிற்குதே. எப்படி விட்டுட்டு போகமுடியும்”என்றான்.அதற்கு தில்லை “பரவாயில்லை அதனால் ஒன்றும் நஷ்டம் எற்படப்போவதில்லை. உடனே கிளம்புங்கள்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று தூரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை நோக்கிநடந்தான்.
சூரியன் அஸ்தமனமாகும் பொழுது வத்ஸாசர் சித்தர் மலையைஅடைந்தார். முதலில் அங்குள்ள சித்தர் அருவியில் குளித்தார். புதிதாகபிறந்தது போல் உணர்ந்தார்.பின் முனிவர் சொன்ன இடத்தைத் தேடினார். ‘மரம் செடி கொடிமுளைக்காத இடம் என்றாரே ஆனால் அப்படி எந்த இடமும் இல்லையே’ என்று யோசித்துக்கொண்டே வந்தவர் ஓரிடத்தில் நின்றார்.
சுற்றிலும் பெரிய பெரிய மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்க அவர் நின்றிருந்த இடத்தில் மட்டும் எந்தவொரு மரமும் வளர்ந்திருக்கவில்லை.மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது வத்ஸாசருக்கு. அருகிலிருந்த ஒருமரத்திலிருந்து ஒரு கம்பை ஒடித்து அந்த இடத்திலிருந்த செடிகளைஅகற்றிப்பார்த்தார். பக்கத்தில் வளர்ந்திருந்த செடி கொடிகளே அந்தஇடத்தில் படர்ந்திருந்தது. அனைத்தையும் அகற்றினார்.முனிவர் சொன்னதுபோல் அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டும் எந்தசெடிகளும் முளைத்திருக்கவில்லை. அந்த இடத்திலிருந்த மண்ணும் இதுவரை அவர் பார்த்திராத வித்தியாசமான மண்ணாகவும் இருந்தது. சிறிது கையில் எடுத்துப் பார்த்தார்.
‘இங்குள்ள ரகசியம் என்னவாகஇருக்கும்’என்று யோசித்துக்கொண்டே சுற்றிலும் பார்வையிட்டார்.எதுவுமே அவரால் உணரமுடியவில்லை. அந்த தரையில் அப்படியேபடுத்துவிட்டார். தரையில் படுத்துறங்குவது அவருக்கு ஒன்றும் புதிதல்லவே! விலங்குகள் நிறைந்த அடர்ந்த காடுதான் என்றாலும் பயம்என்ற உணர்வு அவர்மனதில் இருக்கவில்லை. அந்த இடத்திற்கு எந்தவிலங்குகளும் வரவில்லை.ஆளரவமற்ற நடுக்காட்டில் தனிமையில் இருக்கிறோம் என்ற எண்ணம் தோன்றவில்லை. மாறாக அவரைச்சுற்றி நான்குபுறமும் சுற்றுச்சுவரால் சூழப்பட்டது போல் உணர்ந்தார்.
அது எப்படி என்று அவருக்குப் புரியவில்லை. பயணக்களைப்பு கண்ணயர்ந்தார். தூங்கிக் கொண்டிருந்தவருக்குபூகம்பம் வந்தது போல் ‘டமால்’என்று சத்தம் கேட்டது. திடுக்கிட்டுஎழுந்தார். என்ன சத்தம் என்று யோசித்துக்கொண்டே சுற்றிலும் பார்த்தார். அவர் நின்றிருந்த இடம் இரண்டாகப் பிளந்தது.மணல் உள்பக்கமாக சரிந்து விழுந்தது. மணலோடு சேர்ந்து வத்ஸாசரும் உள்ளே விழுந்தார். சரிந்து விழுந்த மண் எங்கே சென்றதுஎன்று தெரியவில்லை. ஆனால் வத்ஸாசர் மட்டும் உள்ளே நின்றிருந்தார். உள்ளே விழுந்தவருக்கு அங்கு அவர்கண்ட காட்சி ஆச்சர்யத்தைஏற்படுத்தியது.‘பூமிக்கடியில் இதென்ன அதிசயம்!. இங்குதான் முனிவர் சொன்னரகசியம் இருக்குமோ’ என்று நினைத்தார்.அப்படி என்ன அதிசயம் இருந்தது அந்த இடத்தில்.அந்த இடத்தில் ஒரு பெரிய விசாலமான அறை இருந்தது.
மிகவும்குளிர்ச்சியான சீதோஷணநிலை அங்கு நிலவியது. இதுவரை உணர்ந்திராத நறுமணம் வீசியது. சில தூண்கள் காணப்பட்டன. ஆனால்அவை கல்லாலோ சிமென்டாலோ கட்டப்பட்டிருக்கவில்லை. அந்ததூண்களுக்கு நடுவில் வட்டவடிவ அமைப்பில் ஓர் சிறு நீர்நிலை காணப்பட்டது. அதில் ஒரு தாமரை மொட்டு கண்ணாடி இழைகளால் செய்யப்பட்டது போல் இருந்தது.
‘இந்த மலர் இயற்கையா? செயற்கையா? அல்லது மாயத்தோற்றமா?ஆனால் என்னைத் தொட்டுப்பார் என்று சொல்வதுபோல் இருக்கிறதே.சரி.என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம்’என்று தனக்குள் சொல்லிக்கொண்ட வத்ஸாசர் அந்த தாமரை மலரின் அருகில் சென்றார்.அருகில் சென்றவர் சிறிது நேரம் அந்த மலரையே பார்த்துக்கொண்டிருந்தார் மெல்ல கையை நீட்டி அதை தொட்டார்.அவ்வளவுதான் அவர் காதுகளை செவிடாக்குவது போன்ற பெரும்சத்தம் ‘படார்ஸ.’ என்று கேட்டது.
வத்ஸாசர் தூக்கி எறியப்பட்டார். சில நொடிகள் நிலை தடுமாறித்தான் போனார். பின்பு நிதானித்துஎழுந்தவர் அந்த மலர் என்ன ஆனது என்று நோக்கினார்.தாமரை மொட்டு இப்பொழுது தாமரை மலராக விரிந்திருந்தது.மலருக்கு நடுவிலே ஏதோ இருப்பதுபோல் தோன்றியது. அருகில்சென்று பார்த்தார். இரண்டு சுவடிகள் இருந்தன.‘இதை எடுக்கலாமா?’ என்று முதலில் யோசித்தவர் பின்பு ‘எடுத்தேஆகவேண்டும்’என்ற முடிவுடன் இரண்டு சுவடிகளையும் மெதுவாகத் தொட்டு எடுத்தார்.
அந்த இரு சுவடிகளும் காகிதத்தால் ஆனதுஅல்ல. ஒரு செடியின் காய்ந்த இலைபோன்ற தன்மையுடனும்இநிறத்துடனும் காணப்பட்டது.சுவடிகளை கையிலெடுத்த வத்ஸாசருக்கு மீண்டும் ஆச்சர்யம்.‘இப்படி ஒரு சுவடிகளா? இவற்றில் என்ன இருக்கும்? இதுதான்ரகசியமா’ என்று நினைத்து, அதில் ஒன்றை முதலில்புரட்டினார்.
அப்படி என்ன சுவடிகள் அவை? அவற்றில் என்ன எழுதியிருந்தது?அந்த சுவடியின் முதல் பக்கத்தில் ‘கல்பாவின் ஜீவ சிருஷ்டை’என்று எழுதியிருந்தது.அடுத்ததை புரட்டினார். அதில் ‘கல்பாவின் மாய சிருஷ்டை’ என்றிருந்தது. இந்த கல்பான்னா என்னவாக இருக்கும்.
இந்த சுவடிகளைஎழுதியவரின் பெயராக இருக்குமோ’ என்று யோசித்தவர் சுவடிகளைமேலும் புரட்டிப் பார்த்தார். யாருக்கும் கிடைக்காத அரிய பொக்கிஷம்தனக்குக் கிடைத்திருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். என்ற ஒரு தீர்க்கமான முடிவுடன் சுற்றிலும் ஒருமுறைபார்த்தார். பின் மண் சரிந்து தான் கீழே விழுந்த இடத்தை நோக்கினார்.
அப்பொழுது மீண்டும் இடிபோன்ற சத்தம் ஏற்பட்டது. இப்nhழுதுவத்ஸாசர் தடுமாறவில்லை. மாறாக அடுத்து என்ன நடக்கப்போகிறதுஎன்று கவனிக்கலானார்.அவர் கவனம் மாறும் முன்பு வத்ஸாசர் பூமியின் மேற்பரப்பில் நின்றிருந்தார். பூமி பிளந்ததற்கான அடையாளம் எதுவுமே இல்லை.அப்பொழுது சூரியன் உதித்திருந்தது.
முதலில் அந்த இடத்தில் ஒரு குடிலை அமைத்தார். தியானம் செய்துவிட்டு இமயமiலையில்சந்தித்த முனிவரை மனதில் நினைத்துக்கொண்டு முதல் சுவடியைஎடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
‘இந்த சுவடியில் உள்ள ஜீவன்கள் கல்பாவில் சிருஷ்டிக்கப்படவேண்டியவை.’ என்று முதல் சுவடியின் முதல் பக்கத்தில் எழுதியிருந்தது.அடுத்த பக்கங்களைப் புரட்டினார். ஒவ்வொரு பக்கங்களிலும் ஒருவினோதமான வடிவத்தில் விலங்குகளின் படம் தத்ரூபமாக காணப்பட்டது. அவற்றை உற்று நோக்கினால் உயிருடன் இருப்பதுபோல்தோன்றிது.மறு பக்கத்தில் அந்த ஜீவன்களை எப்படி படைப்பது என்பதுபற்றியும் சில மந்திரங்களும் எழுதியிருந்தன.வத்ஸாசர் தினமும் தியானம் செய்துவிட்டு அந்த சுவடியைப் படிக்கத்தெடங்கினார். ‘இது இந்த பூலோகத்துக்குரிய சுவடி அல்ல என்பதாலோஅல்லது யாருக்கும் கிடைக்காத தேவலோக ரகசியம் தனக்கு கிடைத்திருக்கிறது இதை யாரும் தன்னிடமிருந்து அபகரித்துக்கொண்டுசென்றுவிடுவார்களோ’ என்ற பதற்றம் ஏற்பட்டதாலோ வத்ஸாசரின் மனம்நிதானத்தை இழந்து வேகமாக செயல்பட்டது.சுவடியில் உள்ளதுபோல் ஒரு ஜீவனை உருவாக்கிவிட வேண்டும்என்று எண்ணினார். அதற்காக சில விலங்குகளின் உயிரணுக்கள்அவருக்குத் தேவைப்பட்டது.
அதற்காக என்ன செய்வதுஎன்றுயோசித்துக்கொண்டிருந்தார்;அப்பொழுது குடிலுக்கு வெளியே யாரோ நடந்து வரும் சத்தம்கேட்டது. யாராக இருக்கும் என்று எண்ணிய வத்ஸாசர் சுவடிகளைமறைத்து வைத்து விட்டு குடிலுக்கு வெளியில் வந்து பார்த்தார்.அங்கு தில்லை வந்து கொண்டிருந்தான்.‘இவன் ஏன் இங்கு வருகிறான்?’ என்று யோசித்தார். வத்ஸாசரைப் பார்த்தவுடன் இரண்டு கைகளை எடுத்து அவரைவணங்கிக் கொண்டே தில்லை அவரை நோக்கி வந்தான். அருகில்வந்தவுடன் “ஐயா என்னை மன்னிச்சிடுங்க. தங்களைச் சந்தித்ததிலிருந்து நான் புது மனிதனாக மாறிட்டேன். எனது தீய குணங்களையும்செயல்களையும் விட்டுவிட்டேன்.இப்பொழுது நான் இங்கு உங்களுக்கு சேவை புரிய விரும்புகிறேன். என்னை உங்களுடன் தங்குவதற்கு அனுமதியுங்கள்”என்று சொல்லிக்கொண்டே வத்ஸாசரின் காலில் விழுந்தான்.
வத்ஸாசருக்கும் சில வேலைகள் செய்ய ஆள் தேவைப்பட்டதால் தில்லையை அவருடன் தங்குவதற்கு அனுமதித்தார். ஆனால் சில நிபந்தனைகளை விதித்தார்.“நீ இங்கே தங்க வேண்டுமானால் நான் சொல்வதை மட்டும் கேட்கவேண்டும். என்னிடம் எதைப்பற்றியும் கேள்விகள் கேட்கக்கூடாது.எனக்கு தொந்தரவு தருவதுபோல் எந்தவொரு காரியத்தையும் செய்யக்கூடாது.”என்றார்.தில்லையும் அதற்கு சம்மதித்தான். அவருக்குப் பலவிதங்களிலும்உதவி செய்தான். குடிலைப் பெரிதாக்கினான். தனக்காக தனியாக ஒருகுடிலை உருவாக்கிக் பால் தரும் பசுவைக் கொண்டு வந்தான்.பழங்கள் பறித்து வந்தான். அவர் கேட்ட முலிகைகளைக் கொண்டுவந்தான். தில்லை ஆர்வமுடன் செய்த உதவிகள் வத்ஸதசரைக்கவர்ந்தது.
அவனுடைய உதவியும் அவருக்குத் தேவைப்பட்டது.அவர் தியானத்திலும் ஆராய்ச்சியிலும் மட்டுமே கவனமாக இருந்தார்.
அதனால் அவருடைய மற்ற தேவைகள் அனைத்தையும் தில்லையேபார்த்துக் கொண்டான்.ஒருமுறை தில்லையை இரண்டு நாட்களாகக் காணவில்லை.வத்ஸாசரிடம் அவன் எதுவும் சொல்லிவிட்டும் போகவில்லை.இரண்டு நாள் கழித்து திரும்பி வந்தவனிடம் “தில்லை என்னிடம்சொல்லாமல் எங்கு சென்றாய்?” என்று சற்று கோபத்துடனே கேட்டார்.
“ஐயா சொந்த வேலை ஒன்று பாக்கியிருந்தது. அதை முடித்துவிட்டு வருகிறேன். இனி எங்கும் போவதற்கு அவசியம் இருக்காது.”என்றான் தில்லை.வத்ஸாசரும் அவனை நம்பியதாலோ என்னவோ “சரி பரவாயில்லை”என்று விட்டுவிட்டார்.தில்லை எங்கு சென்றான்? எதற்காக சென்றான்?தில்லை அங்கிருந்து நேராக தன் வீட்டுக்குச் சென்றான்.அவனைக்கண்ட அவன் மனைவியும் மகனும் “எங்கே போனீங்கஸஇவ்வளவுநாளும்?.
எங்கே போறேன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருக்கலாமே!. நாங்கள் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா” என்றனர்.“இவ்வளவு நாளும் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடப்போனேன்.நான் நல்ல தந்தையாக இல்லாததினால்தான் என்மகனையும் நல்லவனாக வளர்க்கமுடியல. நான் செய்த தவறுகளுக்காக ரொம்ப வருந்துகிறேன்.”என்று சொல்லிவிட்டு மகனை நோக்கி “தேசிகா” என்று அழைத்தான்.ஆம். அதே தேசிகன்தான் தில்லைநாயகத்தின் மகன்.தில்லையின் பேச்சு வழக்கத்தைவிட வித்தியாசமாக இருப்பதைப்பார்த்த தேசிகனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் அவர்அழைத்தவுடன் “என்ன?” என்று கேட்டான்.
“தேசிகா நான் இதுவரை பல தவறுகள் செய்திருந்தாலும் எந்தகொலையும் செய்ய துணிந்ததில்லை. ஆனால் நீ இப்பொழுதே கொலைசெய்வது போன்ற பெரும் தவறுகள் எல்லாம் செய்கிறாய். அதனால்உன்னை இப்பொழுதே திருத்திக்கொள்.”“அப்பா என்ன இது திடீரென்று ஞானதோயமா? இதை உங்களோடவே வச்சுக்கிடுங்க”
“தேசிகா. நீ தவறு செய்வதற்கு நானும் ஒரு காரணமாயிட்டேன்.அதனால்தான் சொல்றேன். நான் சொல்றதைக் கேள். உன் தீய குணங்களையெல்லாம் விட்டுவிடு.”“விட்டுவிடுகிறேன்.ஆனால் இப்பொழுதல்ல.. உங்களை மாதிரிஅறுபது வயசுக்கு மேல”
“டேய்நீ நான் சொல்றதைக் கேக்கலைன்னா என் சொத்தெல்லாம் அனாதை இல்லங்களுக்கு எழுதிவச்சிடுவேன். இதெல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்சது இல்லை. ஊரையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிச்சேர்த்தது.”“ஹா...ஹா... ”என்று வில்லத்தனமான சிரிப்பு சிரித்தான் தேசிகன்.“ஏண்டா சிரிக்கிறே?”“இங்க பாருங்க.
ஏதோ செய்த பாவத்துக்குப் பரிகாரம் தேடப்போறதா சொன்னீங்களே. அங்கே அம்மாவையும் அழைச்சிட்டுப்போங்க.சொத்துக்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.”“டேய். நான் இவ்வளவு சொல்லியும் நீ கேட்க மாட்டேங்கிறே.இனி உங்கிட்ட பேசிப்பயனில்லை. எனக்கு என்ன செய்யணும்னு தெரியும். உன்னை ஒன்றும் இல்லாதவனாக நடுவீதிக்கு கொண்டுவந்தால்தான் சரி வருவேன்.”
“அப்படி ஒரு நிலைமை எனக்கு நடக்கப்போறதுன்னு தெரிஞ்சாமுதல்ல அப்பான்னுகூட பார்க்கமாட்டேன் உயிரை எடுத்துடுவேன்.”இருவர் பேசியதையும் அதுவரை மௌனமாகவும் ஒருவித பயத்துடனும் பார்த்துக்கொண்டிருந்த தேசிகனின் தாய் தந்தையைக் கொலைசெய்ய தயங்கவும் மாட்டேன் என்று தேசிகன் சொன்னதும் பதறிவிட்டாள்.
“டேய் தேசிகாஅவர் உனக்கு அப்பாடா. அவரைப்போய் இப்படிக்கொலை செய்வேங்கிறியே! . அவர் சொன்னதில் அப்படி என்னடா தப்பு இருக்கு?” என்றாள்.“அவர் சொல்றது எல்லாமே தப்புத்தான்” என்று தேசிகன் சொன்னதும் தில்லைக்கு கோபம் பொங்கியது. துப்பாக்கியை எடுத்து தேசிகனை நோக்கி நீட்டிக்கொண்டே“டேய்.இனியும் உன்னை உயிரோடு விட்டால் அந்த சுதர்சனனைஅழிச்சமாதிரி இன்னும் பலரை அழிச்சிடுவே” என்று தேசிகனை சுடப்போனான். அப்பொழுது அவன் தாய் குறுக்கே புகுந்தாள். தந்தை தன்னைச்சுட வருவதைக்கண்ட தேசிகன் மனதில் வெறித்தனம் குடிகொண்டது. தாயைப் பிடித்து தள்ளி விட்டுவிட்டு தில்லையைத் தாக்கமுனைந்தான்.அதே நேரம் அவன் வேகமாக தள்ளியதால் ஒரு சுவற்று தூணில்மோதி பலத்த அடியுடன் கீழே மயங்கி விழுந்தாள் தேசிகனின் தாய்.
தில்லை ஓடி வந்து அவளைத் தூக்கினான். அவள் மயக்கித்திலிருப்பதைப் பார்த்து பதறி அவளைத் தூக்கி காரில் வைத்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றான்.ஆனால் மூளையில் அடிபட்ட அவள் பிழைக்கவில்லை. ‘தேசிகனேஅவன் தாயின் மரணத்திற்கு காரணமாகிவிட்டான்’என்று எண்ணியதில்லைக்கு தேசிகனைப் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை. முன்புதன் தொழிலுக்கு உதவிய தனது ஆட்கள் காசி ஜான் என்ற இருவரையும் அழைத்துக்கொண்டு காட்டை நோக்கிச் சென்றான்.
அவர்களின் உதவியால் வத்ஸாசர் கேட்ட விலங்குகளை குடிலுக்குக்கொண்டுவந்தான். வத்ஸாசர் தில்லையிடம் அந்த இருவரையும் உடனேஅங்கிருந்து அனுப்பிவிடுமாறு கூறினார்.தில்லையும் அவர்களிடம் தான் இங்கிருப்பது தேசிகனுக்குத் தெரியவேண்டாம் என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டான்.
வத்ஸாசர் தீவிரமாக ஆனால் அவசரமாக தனது ஆராய்ச்சியைத்தொடங்கினார். அவரது அவசரத்தால் ஆரம்பித்த பல முயற்சிகள்தோல்வியில் முடிந்தன. அவர் உருவாக்கிய ஜீவன்கள் முழுமையடையாமல் குறையுள்ளதாகவே இருந்தன. இதனால் அதிருப்தியடைந்தவத்ஸாசர் அவற்றை தான் கண்டுபிடித்த மூலிகைத் திரவத்தால் பஸ்பமாக்கினார்.இந்த நிலையில் ஒருநாள் இமயமலையில் சந்தித்த முனிவர்இவத்ஸாசரின் கனவில் தோன்றி “நீ தேவரகசியங்களைக் காப்பாற்றத் தவறிவிட்டாய்.
கல்பாவில் படைக்கப்பட வேண்டிய பல உயிர்களை
அழித்துவிட்டாய். இனி பிரம்மனே நினைத்தாலும் அவற்றை .
உருவாக்க முடியாது. -கனிஷ்கா கலா
kalpa2011@yahoo.com
No comments:
Post a Comment