Monday, December 18, 2006

<<>>ரினோ....5...!<<>> - கனிஷ்கா


ரிஷி ஒரு நிமிஷம்”என்று
ஆனந்த் அழைத்ததும் ரிஷி திரும்பி‘என்ன?’ என்பது போல்
பார்த்தான்.“ ரிஷி.
வத்ஸாசர் யார்?”
என்று கேட்டார்‘ஓ.. காவல்
துறையல்லவா!
கடமையை நன்றாகத்தான் செய்கிறது.
இப்பத்தான் புரியுது.
இவர் ஏன்
காசியையும் ஜானையும் சந்திக்கிறதுக்கு
உடனே சம்மதிச்சார்னு. சரி.ஏதாவது சொல்லி
சமாளிக்க வேண்டியதுதான.’ என்று மனதில் நினைத்தபடி
“வத்ஸாசர் யாருன்னு எனக்குத் தெரியாது.
ஒருமுறை அவங்கரெண்டுபேரும் பேசினதைக் கேட்டிருக்கேன். அதை வச்சுத்தான் உண்மையை வரவழைக்கிறதற்காக வத்ஸாசரை தெரிந்தவன் மாதிரி அவங்ககிட்ட காட்டிக்கிட்டேன். அதுமட்டுமல்ல ரினோவைப் பற்றியும் அவங்க பேசினாங்க.” என்று மருத்துவ மனையில் நடந்ததைச் சொன்னான் ரிஷி.

‘ரிஷியை நம்புவதா வேண்டாமா. ஆனால் இவங்கிட்ட ஏதோ ரகசியம்இருக்கிறமாதிரி தெரியுதே. எங்கிட்ட எதுவுமே சொல்லாதவங்க இவங்கிட்ட எப்படிச்சொன்னாங்க?’ என்று அவரது மனம் சிந்தித்தது.“நான் இப்ப போகலாமா அங்கிள்.?” என்று ரிஷி கேட்டதும்.

“சரி இரு நானே உன்னை வீட்டில் விட்டு
விடுகிறேன்”என்றுசொல்லிவிட்டு அவரும் கிளம்பினார்.சென்னை நகரில் ராக்போ வந்து விடுவானோ என்ற பயத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவே பயப்பட்டனர். விஞ்ஞானிகள் பலர் ராக்போ ரினோ இவர்களின் வருகையை எதிபார்த்துக் கொண்டிருந்தனர்.ஆனால். நீண்ட நேரமாகியும் ராக்போவோ ரினோவோ யாருமே வரவில்லை. ராக்போ சென்னைக்கு வந்தானா? அல்லது வேறு எங்காவதுசென்று விட்டானா? இல்லை இனி வரவே மாடட்டானா?

வந்தான்.. ராக்போ வந்தது சென்னைக்கல்ல மதுரை நகருக்கு.
ராக்போ வருகையை எதிர்பார்த்திருக்காத மதுரை நகர மக்கள் அவனைக் கண்டதும் தலைதெறிக்க சிதறி ஓடினார்கள். சிலரோ ரினோவின்வருகையை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

“ஓடுங்கள்...ஓடுங்கள்....ராக்போ வந்துவிட்டான்”என்ற சத்தம் நகரெங்கும் கேட்டது. ராக்போ உயரமான ஒரு கட்டிடத்தின் மேல் நின்று கொண்டு கர்ஜித்தான்.

‘ஏய்ஸமுட்டாள்களே எங்கே ஓடுகிறீர்கள். நில்லுங்கள். நின்றுஎன்னை வணங்குங்குள். நான்தான் உங்கள் கடவுள் வந்திருக்கிறேன்.”மக்கள் ஓடுவதைப் பார்த்து கோபத்துடன்“எனக்குப் பணியாதஉங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்..” என்று கத்திக் கொண்டேவேகமாக கீழ்நோக்கி பறந்து வந்தான். அவன் பறந்து வந்த வேகம் ஒரு புயல் வீசியதைப் போன்றிருந்தது. பலர் கீழே விழுந்து எழும்பி ஓடினார்கள். கையில் அகப்பட்டவர்களைக்கொத்தாக அள்ளி வீசினான்.

அனைவரும் “ரினோ. எங்களைக் காப்பாற்று” என்று கூச்சலிட்டனர். ரினோ என்ற பெயரைக் கேட்டதும் ராக்போவிற்கு கோபத்தை மேலும் தூண்டியது.“அந்தப் பொடிப்பயல்கள் வரமாட்டார்கள். வந்தால் இன்றோடு ஒழிந்தார்கள்.” என்று சொல்லியவன் வேகமாகச் சென்று அங்கு ஓரிடத்தில் ஒரு சிறுவனைப்பிடித்து தலைக்கு மேலே தூக்கிக்கொண்டு

“ ஏய்சிறுவனே ‘ராக்போ வாழ்க’ ன்னு சொல்” என்றுஅதட்டினான்.ஆனால் அந்த சிறுவன் அழுதுகொண்டே “சொல்லமாட்டேன் ரினோ வாழ்கன்னுதான் சொல்வேன் அவங்களைத்தான் எனக்குப் பிடிக்கும். நீபார்க்கவே அசிங்கமா இருக்கே. உன்னைப் பிடிக்கல” என்றான்.

அதைக்கேட்டு ராக்போவிற்கு ஆத்திரம் ஏற்பட்டது. உடனே“ தொலைந்து போ! இப்பொழுது அந்த ரினோ உன்னை எப்படிக்காப்பாற்றுகிறான்னு பார்க்கிறேன்”என்று சொல்லிக் கொண்டே அந்தசிறுவனை மேல்நோக்கி வீசி எறிந்தான். சிறுவனின் பெற்றோர் “ஐயோ! என் மகனை யாராவது காப்பாற்றுங்களேன்.” என்று கதறினர். அப்பொழுது மனதை வருடும் அந்த இனிய இசை கேட்டது. “ரினோ வந்துவிட்டான் ரினோ வந்துவிட்டான். ” என்று மக்கள் சந்தோஷக் கூச்லிட்டனர். ரோடாஸில் இருந்த ரினோ ரிஷியிடம் “சிறுவன் கீழே விழும் முன்பு அவனைக் காப்பாற்றவேண்டும். நீ பாய்ந்துசென்று அவனைப் பிடி. உடனே செல் அவனைக் காப்பாற்று.” என்றது.

ரிஷி பாய்ந்து சென்று அந்த சிறுவனைக் காப்பாற்றி அவனதுபெற்றோரிடம் ஒப்படைத்தான். ரினோவைக் கண்டதும் ‘இனி பயமில்லைஎன்று நினைத்து ராக்போவுக்குப் பயந்து ஓடியவர்கள் நின்றுவிட்டார்கள்.வீட்டிற்குள் இருந்தவர்கள் ரினோவைப் பார்பப்பதற்காக வெளியேவந்தார்கள்.

“ரினோஸ.ராக்போவை அழித்துவிடு. ராக்போ ஒழிகஸ” என்று சத்தமிட்டார்கள். ரினோவைப் பார்த்தவுடன் ராக்போவிற்கு மேலும் மேலும்கோபம் அதிகரித்தது. ராக்போவால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பத்தைப்பார்த்து ரிஷிக்கும் ரினோவிற்கும் ஆத்திரம் ஏற்பட்டது. ரோடாஸைமின்னல் வேகத்தில் செலுத்தி ராக்போமீது மோதினான்.இந்த திடீர் தாக்குதலால் ராக்போ சற்று தடுமாறினாலும் உடனேசுதாரித்துக் கொண்டு வேகமாக ரோடாஸ் மீது பாய்ந்து ஒரு கையால்ரிஷியை அப்படியே தூக்கி ஒரு மரத்தை நோக்கி வீசினான்.

மரத்தில்மோதுவதுபோல் வேகமாக போன ரிஷி அதே வேகத்தில் ராக்போவைநோக்கித் திரும்பி பறந்து வந்தான்.அதற்குள் ரினோ ரோடாஸை ராக்போ மீது செலுத்தி அவனை ஒருகட்டிடத்தில் மோதச் செய்தது. இருவராலும் மேலும் மேலும் ராக்போ தாக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது. அதைக்கண்டு வெறுப்புற்ற ராக்போ “டேய்ஸரினோ ஜெயிச்சுட்டதா நினைக்காதீங்க. மீண்டும் வருவேன். உங்களையும் உங்களைப் பாராட்டும்இந்த மக்களையும் அழிப்பேன்.”என்று கர்ஜித்து விட்டு பறந்து சென்றுவிட்டான்.

அவனைப் பின் தொடர நினைத்த ரிஷியையும் ரினோவையும் மக்களின் குரல் தடுத்தது.“ரினோ ஒரு ஆட்டோகிராப் ப்ளீஸ். ரினோ. ஒரு போட்டோ ப்ளீஸ்.” என்று பல திசைகளிலிருந்து பல குரல்கள் வந்தாலும் ரிஷியைத்தடுத்து நிறுத்திய குரல் ரீனாவுடையதுதான்.

ரீனா, ரிஷியைப் பார்த்துக் கைகளை ஆட்டிக்கொண்டே“ ரினோ!என் பெயர் ரீனா. நீ ரொம்ப அழகாயிருக்கே. நீ என்ன ஸ்கை மேனா?
இந்தா இந்த பூங்கொத்து உனக்குத்தான் வாங்கிக்க. உன்னால் எனக்கொரு உதவி ஆகவேண்டும். நான் உன்னை சந்திக்க வேண்டும்.எங்கே எப்படி சந்திக்கலாம்.” என்று கத்தியபடி பூங்கொத்தை நீட்டினாள்.

“ரினோ! ரீனாவுடைய குரல் மட்டும் வித்தியாசமானதா இருப்பதைக் கவனிச்சியா? அவள் நம்மிடம் ஏதோ உதவி கேட்கிறாளே என்னவாக இருக்கும்? ” என்று ரிஷி ரினோவிடம் கேட்டான். உடனே ரினோ,
“வேற என்ன. ‘நான் என் பெற்றோரிடமிருந்து தொலைந்து விட்டேன் என்னை அவர்களிடம் சேர்த்துவிடு’ என்று சொல்வாள்”என்றது.

“அவள் கேட்கப் போகும் உதவி சாதாரணமானதா இருப்பதுபோல்தெரியல. இது அவள் குரலிலேயே தெரியுது ரினோ.”“சரி முதலில் ராக்போவின் கதையை முடிப்போம். அதன் பின்பு ரீனாகிட்ட அவளுக்கு என்ன உதவி செய்யணும்னு கேட்கலாம்.” என்றுரினோ சொன்னதும் ரிஷி கண் இமைக்கும் நேரத்தில் ரீனா கையிலிருந்த பூங்கொத்தை வாங்கிக் கொண்டு ரோடாஸி;ல் பறந்து விட்டான். அதற்குள் ராக்போ மறைந்து விட்டதால் அன்றும் அவர்களால்
அவனைத் தொடரமுடியவில்லை. “ரினோ. இன்றும் ராக்போ தப்பிவிட்டானே.” என்ற ரிஷியிடம்

“ரிஷி நீ ஒன்றைக் கவனிச்சியா? நாம் எவ்வளவுதான் தாக்கினாலும் அவனுக்கு சிறிய காயம்கூட ஏற்படலியே” என்றது.“ஆமாம் ரினோஸஅவனை அழிக்கணும்னா முதல்ல அவன் யார்னுகண்டு பிடிக்கணும்” என்றான் ரிஷி. ரினோ என்ற பெயர் மக்களிடம் ஏற்கனவே பிரபலமாகியிருந்தது. இப்பொழுது ரினோவை நேரில் பார்த்துவிட்டதால் ரினோ என்ற பெயர்அனைவரையும் கவர்ந்து பல பொருட்களுக்கு ‘ரினோ’ என்று பெயர்வைக்கும் அளவுக்கு மாறிவிட்டது. அவர்கள் அணிந்திருந்த கண்ணாடி தொப்பி போன்று கடைகளில் ரினோ தொப்பி ரினோ கண்ணாடிஎன்று விற்க ஆரம்பித்தார்கள்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரினோவால் கவரப்பட்டு எங்கும்ரினோவைப்பற்றிய பேச்சே அதிகமாக இருந்தது.வேறு பெயரில் இருந்த டிவி சேனலைகூட ஒருவர் ‘ரினோ டிவி’என்று மாற்றிவிட்டார். ரினோ என்ற பெயர் ஹீரோவாக மக்கள் மனதில் பதிந்தது..ராக்போவும் ரினோவும் சென்னைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்துஏமாந்த விஞ்ஞானிகள் மறுநாள் அவர்கள் எங்கு வந்தாலும் செல்வதற்குத் தயாராக இருந்தனர்.முதல் நாள் அடிபட்டுச் சென்ற ராக்போ மறுநாள் ஒரு பாறாங்கல்லைஇரு கைகளாலும் உயரே தூக்கிப் பிடித்துக் கொண்டு மீண்டும்சென்னையை நோக்கிப் பறந்து வந்தான்.

அங்குஒரு கட்டிடத்தின் மேல்நின்று கொண்டு “முட்டாள் மக்கள்ஸஎன்னை மதிக்காத உங்களைஅழித்தே தீருவேன்” என்று கூச்சலிட்டான். ராக்போ கையில் பாறாங்கல்லைப் பார்த்த மக்கள் பயந்து ஓடினார்கள்.அவன் மட்டும் அதை கீழே போட்டால் என்ன ஆகும் என்று நினைத்தாலே அனைவருக்கும் கைகால் நடுங்கியது. ஆனால் அதற்குள் அங்குரோடாஸ் வந்துவிட்டது.

ராக்போவைப் பார்த்த ரினோவும் ரிஷியும் அதிர்ச்சியுற்றனர். “ரிஷி..முதலில் ராக்போவின் கவனத்தை நம் பக்கம் திருப்பி அவனை நகருக்கு வெளியே அழைத்துச்சிட்டுப் போகணும்.” என்றது.உடனே ரிஷி ரோடாஸிலிருந்து வெளியில் வந்து நின்று கொண்டு“ஏய் ராக்போஸ. உன்னால் முடிந்தால் முதலில் என்னிடம் மோதிப்பார்.வா.... வந்து மோது..” என்று ராக்கோவிற்கு சவால் விட்டான்.

“என் கை பட்டாலே நசுங்கி விடுவாய். நீயா எனக்கு சவால் விடுகிறாய். இதோ வருகிறேன். இன்று நீ தொலைந்தாய்”என்று கொலைவெறியோடு ரிஷி மீது பாறாங்கல்லைப் போடுவதற்காக அவனை நோக்கிப் பாய்ந்தான். ஆனால் ரிஷி அதற்குள் ரோடாஸிற்குள் தாவி“ராக்போஸவாஸஉன்னால் முடிந்தால் எங்கள் மீது போட்டுப்பார்”என்று சொல்லியபடி ரோடாஸை செலுத்தினான்.

ராக்போ அவர்களைப்பின்தொடர்ந்தான். நகரைவிட்டு வெளியே
வந்ததும் ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில் ரோடாஸின் வேகத்தைக் குறைத்து ராக்போவிற்குமிக அருகில் வந்து நின்றார்கள்.ராக்போ “ஒழிந்து போங்கள்”என்று சொல்லிக் கொண்டே பாறாங்கல்லை ரோடாஸை நோக்கி எறிந்தான். அது அவர்களை வந்தடையும் முன் ரிஷி ரோடாஸை வேகமாக செலுத்தி உயரே கொண்டுபோய் விட்டான். அதற்குள் அங்கு ஒரு விஞ்ஞானிகள் கூட்டம் ஹெலிஹாப்டரில் வந்து இறங்கியது.

“ஏய் ராக்போ ரினோ. நீங்களெல்லாம் யார்? எங்கேயிருந்து வந்திருக்கீங்க? சொல்லுங்க. உங்களைப் பற்றி நாங்கள் ஆராய்ச்சி செய்யவந்திருக்கிறோம். பயப்படாமல் சொல்லுங்க. நாங்க உங்களுக்குப் பாதுகாப்பு தர்றோம்” என்று அவர்களில் ஒருவர் சொன்னதும்இரிஷி “முதலில் உங்களுக்குப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளுங்க.”என்றான்.

“கொஞ்சம் கீழே இறங்கி வாங்க. உங்களோட ரத்தத்தை சோதித்து அது மனித ரத்தத்தோடு ஒத்துவருகிறதா? என்று பார்க்க விரும்புகிறோம்.” என்று மற்றொருவர் சொன்னதும் ராக்போ பறந்துசென்று அவரைப்பிடித்துத் தூக்கி“ஒழுங்கா திரும்பிப் போ! இல்லாவிட்டால் உன் உடம்பில் ரத்தம்இருக்காது” என்று சொல்லி அவரை கீழே போட்டுவிட்டு பறந்து விட்டான்.

ரோடாஸ் அவனைப் பின் தொடர்ந்தது. புயலாய்ப் பறந்த ராக்போஇறுதியில் ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் இருந்த ஒரு கட்டிடத்திற்குள் சென்றுவிட்டான். ரிஷிக்கும் ரினோவுக்கும் ஆச்சர்யமாகஇருந்தது. ‘இவன் ஏன் அங்கே செல்கிறான்? வேறு யாரும் அங்குஇருப்பார்களோ?’ என்று சந்தேகப்பட்டனர்.“ரினோ நாமும் உள்ளே செல்வோமா?” என்று ரிஷி ரினோவிடம்கேட்டான்.“வேண்டாம் ரிஷி
ஒரு வேளை அங்கு வேறு யாரேனும் இருக்கலாம். நம்மைப் பார்த்ததும் ராக்போவுக்கு கோபம் வரும்.

அதனால்அங்கிருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம். மேலும் ராக்போ இல்லாதநேரம் நாம் சென்றால்தான் உள்ளே என்ன நடக்கிறது. இவன் ஏன்அங்கு சென்றான் என்பதையெல்லாம் கண்டுபிடிக்க முடியும்.” என்றுரினோசொன்னதும் ரிஷிக்கு சரியென்று பட்டது. உடனே ரோடாஸைத்திருப்பிவிட்டான்.மறுநாள் சீக்கிரமாகவே இருவரும் ராக்போ சென்ற கட்டிடத்திற்குச்சென்றனர்.

ஒரு இடத்தில் மறைவாக நின்று கொண்டு ராக்போவின்வருகைக்காகக் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் ராக்போ வெளியில்பறந்தான். அவனைத் தொடர்ந்து ஒரு ஜீப் வெளியில் வந்தது. அதில்அடியாட்கள் போல் சில தடியர்கள் இருந்தார்கள்.அவர்கள் சென்றதும் ரிஷியும் ரினோவும் உள்ளே நுழைந்தனர்.அங்கேயும் சில தடியர்கள் நின்றிருந்தார்கள். இவர்கள் உள்ளே நுழைந்ததும் இவர்களைத் தாக்குவதற்காக ஓடிவந்தனர். உடனே ரினோ “ரிஷி...இவர்களை நான் பார்த்துக்கொள்கிறேன். கட்டிடம் ரொம்ப பெரிசா இருக்குது. அதனால நீ உள்ளே போய் அங்கே வேற யாரும் இருக்காங்களான்னு பார்.” என்றது.

ரிஷி ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தான். ரினோவிடம்மாட்டிய தடியர்கள் படாதபாடு பட்டார்கள். “டேய் தடியர்களாஸ. இங்கவாங்கடா” என்ற ரினோ. அவர்கள் தாக்குவதற்காக அருகில் வந்தவுடன் மேலெழும்பி பறந்து விடும். அவர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு ரினோவை அடிக்க வைத்திருந்த ஆயுதங்களால் அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டார்கள். ரினோ அதைப் பார்த்து கைகொட்டி சிரித்தது. மீண்டும் கீழே வேகமாக பறந்து வந்து அவர்களில் ஒருவனைஅலக்காக தூக்கியது. அவன் கைகால்களை உதறிக் கொண்டு “ஐயோஅம்மா டேய் காப்பாத்துங்கடா” என்று கத்தினான். ரினோ அவனை மற்றதடியர்கள் மேல் வீசி எறிந்தது.

அனைவரும் கீழே விழுந்து ‘ஆ...அம்மா.... அப்பா..’ என்று கத்தினார்கள். ரினோ அவர்களை மீண்டும்எழும்பி விடாதபடி வாலால் விளாசியது. அவர்களுக்கு அது சாட்டையால் அடிப்பதுபோல் இருந்தது. அதன்பின்பு யாராலும் அசையக்கூடமுடியவில்லை.பின்பு ரினோ ரிஷியைத் தேடி உள்ளே சென்றது. ரிஷி ஒரு பெரியஅறையில் நின்றிருந்தான்.

அங்கு சென்ற ரினோ அந்த அறையைப்பார்த்ததும் வியப்புற்றது. அந்த அறை ஒரு ஆராய்ச்சிக்கூடமாக இருந்தது. அங்கு பெரிய பெரிய இயந்திரங்கள் கம்ப்யூட்டர்கள் கண்ணாடிக் குடுவைகள் என்று இவர்களுக்குப் புரியாத பலவும் இருந்தன. அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டே வந்தவர்கள் ஒரு அறையில்இருவர் அடைக்கப் பட்டிருப்பதைக் கண்டார்கள். வேகமாகச் சென்றுபூட்டை உடைத்து அவர்களை நெருங்கிய ரிஷி அப்படியே அதிர்ச்சியடைந்தான்.

‘இவர்கள் ராம் முகுந்தன் அல்லவா. பாவிகள் என் பெற்றோர் மரணத்திற்கு காரணமானவர்கள் இவர்களை முதலில் அழிக்கவேண்டும்’என்று கோபத்தோடு அவர்கள் அருகில் சென்றவன் பின்னர்‘தேசிகன்கிடைக்கும் வரை பொருத்திருப்போம்’ என்று நினைத்துக் கொண்டுஅவர்களிடம் “நீங்க ரெண்டுபேரும் யார்?” என்று கேட்டான்.

“நான் ராம் இவன் முகுந்தன்.”என்று ராம் பதில் சொன்னான்.
“நீங்க எப்படி இங்கு வந்தீங்க? அந்த ராக்போ யார்?” என்று ரினோகேட்டது.“முதல்ல எங்களை இங்கேயிருந்து காப்பாற்றுங்க. அப்புறம் நாங்கஎல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்றோம்.” என்றார்கள் இருவரும். ரிஷி ஏதோ யோசித்ததை அறிந்த ரினோ “ ரிஷி என்ன யோசிக்கிறே.?” என்றது.“ரினோஸ இப்போ ராக்போ எங்கேபோய் யாரையெல்லாம் துன்பப்படுத்திக்கிட்டு இருக்கிறானோ தெரியல அவர்களையும் காப்பாற்றணும்.

இவங்க ரெண்டுபேரையும் ரகசியமா பாதுகாப்பான இடத்தில் வைக்கணும். அதுதான் என்ன செய்றதுன்னு யோசிக்கிறேன். இவர்களை ரோடாஸில் ஏற்றி நம்ம வீட்டிலேயே
அடைச்சிவைப்போமா?”

“பாவிகளுக்கு கல்பாவின் ரோடாஸில் இடமில்லை. ரிஷி. இந்தா செல்போன். இன்ஸ்பெக்டர் ஆனந்துக்கு போன் பண்ணு.” என்று ரினோ செல்போனை நீட்டியது.“ஏய் உனக்கு ஏதுடா செல்போன்?.”“அதோ அந்த தடியன் வச்சிருந்தான். அவசரத்துக்குப் பயன்படுமேன்னு எடுத்து வச்சேன்.”

“அடுத்தவங்க பொருளை எடுக்கிறது தப்புடா.”

“தப்பு செய்தவர்களைத் தண்டிப்பதற்காக ஒரு சிறு தப்பு செய்தால்அதில் தப்பில்லை.”
ரிஷி ரினோவிடம் மொபைலை வாங்கி ஆனந்துக்கு போன் செய்து“மிஸ்டர் ஆனந்த் நான்தான் ரினோ பேசுறேன். நீங்கள் உடனே நான்சொல்ற இடத்துக்குத் தனியா காரில் வாங்க.” என்று கட்டளையிட்டான்.
‘ரினோ’ என்றதும் ஆனந்துக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ‘ராக்போவை எதிர்க்கும் ரினோ நம்மிடம் பேசுகிறானே!என்னவாக இருக்கும்’என்று யோசித்தவர் சிறிதும் தாமதிக்காமல் ரிஷிசொன்ன இடத்திற்குச் சென்றார்.ரிஷி அவரிடம் ராம் முகுந்தன் இருவரையும் காட்டி “இவங்க ராக்போவைப்பற்றிய ரகசியங்கள் தெரிஞ்சவங்க. இவங்களப் பாதுகாப்பாஉங்க வீட்டில் வைச்சிருக்கணும். நாங்க அங்கே வர்ற வரைக்கும்நீங்க இவங்கக்கிட்ட எதுவும் கேட்கக்கூடாது. இவங்களைப் பற்றி யாரிடமும் சொல்லவும் கூடாது.” என்றான்.

அவரும் “சரி..சரி..... நீங்க சொல்றதுபோலவே செய்கிறேன்.”என்றார்.

“மிஸ்டர் ஆனந்த்ஸராக்போ இப்போ எங்கேயிருக்கிறான்?” என்றுரினோ கேட்டது.
“அவன் இப்போ திருச்சியில் இருக்கும் தேசிகனோட வீட்டைத்
துவம்சம் செய்துகிட்டிருக்கிறான்.” என்று அவர் சொன்னதும்
‘இவன் ஏன் தேசிகன் வீட்டுக்குப் போனான்’ என்று ரிஷியும் ரினோவும்யோசித்தார்கள். அப்பொழுது ராம் ஏதோ ரிஷியிடம் சொல்ல வந்தான். ஆனால்அதற்குள் ரோடாஸ் தேசிகன் வீட்டை நோக்கிப் பறந்துவிட்டது. ‘மக்கள் யாரும் தனது பேச்சை கேட்டுத் தனக்குப் பணியவில்லையே’ என்று கோபவெறியோடு பறந்த ராக்போ வழியில் தேசிகனின் பிரமாண்டமான வீட்டைப் பார்த்ததும் அங்கே சென்றான். அங்கே காவலுக்கு நின்றவர்கள் ராக்போவைப் பார்த்ததும் துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்தார்கள். ராக்போ அவர்களின் துப்பாக்கிகளைப் பிடிங்கி நொறுக்கி எறிந்தான். அவர்கள் அனைவரையும் எலியைத் தூக்கி எறிவது போல் எறிந்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

அங்கிருந்த அனைவரும் அவனைப் பார்த்ததும் அலறி ஓடினார்கள். ராக்போ தேசிகனின் மனைவி மகன் இருவரையும் பார்த்து இரண்டு கைகளையும் அசைத்து “வாருங்கள் வாருங்கள். ஓடாதீர்கள்.”என்றான். ஆனால் யாரும் அவனது பேச்சைக் கேட்பதாக இல்லை.
அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து ஓடி ஒளிந்தார்கள். அதனால் வெறியேறிய ராக்போ கண்ணில் கண்ட பொருட்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தான். வீட்டையே நாசம் செய்துவிட்டு உர்... உர்....என்று உறுமிக் கொண்டே வெளியே வந்தான். அங்கு நின்ற கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் காலால்மிதித்து நசுக்கினான். அதற்குள் அந்த வீட்டைச் சுற்றி போலீஸ் படைகுவிக்கப்பட்டது. ஆனால் அவர்களால் ராக்போவை ஒன்றும் செய்யமுடியவில்லை. அவர்களைத்தான் ராக்போ தாக்கினான்.

அப்பொழுதுஒரு ஹெலிஹாப்டர் அங்கே வந்தது. அதிலிருந்து கம்பியால் பின்னப்பட்ட ஒரு பெரிய வலை ராக்போவை நோக்கி வீசப்பட்டது.இது ராக்போவைப் பிடிக்க காவல்துறை செய்த ஏற்பாடு. ராக்போவலையில் மாட்டினானா?வலையில் சிக்கிய ராக்போ பற்களைக் கடித்துக் கொண்டு உறுமினான். கைகால்களை உதறி கூச்சலிட்டான். ராக்போ வசமாக மாட்டிக்கொண்டான் என்று அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அவனைத்தூக்கி செல்வதற்காக ஒரு பெரிய கிரேன் வந்தது.ஆனால் ராக்போ வலையோடு பறந்துவிட்டான். பறந்து கொண்டேவலையைக் கிழித்து எறிந்தான். எறிந்த வலையின் ஒரு பகுதி ஒருபோலீஸ் ஜீப்பின் மீது விழுந்து ஜீப் தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. மற்றொரு பகுதி மோட்டார் சைக்கிளில் போய்க்கொண்டே செல்போன்பேசியவன் மீது விழுந்தது. மோட்டார் சைக்கிள் ஒரு பள்ளத்தில் போய்விழுந்தது.

கட்டிடத்திற்குத் திரும்பிய ராக்போ அங்கே ரினோவிடம் அடிபட்டுக்கிடந்தவர்களைப் பார்த்தான்.

“டேய் இங்கே என்ன நடந்தது?” என்றுகேட்டான்.ஒருவன் மெதுவாக ‘ரினோ’ என்று சொல்லிவிட்டு ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் ராக்போ கோபமாக அவனை உதைத்துதள்ளிவிட்டு ‘ரினோ நீ இங்கேயும் வந்து விட்டாயா’ என்று கத்திக்கொண்டே ராம் முகுந்தன் அடைக்கப் பட்டிருந்த அறைக்குச் சென்றான். அங்கு அவர்கள் இல்லையென்றதும் அவன் வெறிகொண்டவன்போல் மாறினான்.கைகளில் அகப்பட்ட எல்லா பொருள்களையும் உடைத்தெறிந்தான்.ஆராய்ச்சிக் கூடத்திற்குள் சென்று அங்கிருந்த இயந்திரங்கள் கம்ப்யூட்டர்கள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் அடித்து நொருக்கி தீவைத்துக் கொளுத்தினான்.

பின்பு “டேய்ஸரினோஸஎன்னோட கோபத்தை அதிகரித்து விட்டாய்.உன்னை அழிக்காமல் விடமாட்டேன்.” என்று சொல்லிக் கொண்டுகால்களைத் தரையில் ஓங்கி மிதித்தான். அங்கும் இங்கும் ஓடினான்.பின்பு ஒரு இடத்தில் போய் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தான்.திடீரென்று இரண்டு கைகளாலும் தலைமுடியைப் பிடித்துக்கொண்டு ஓவென்று அழுதான்.

அப்பொழுது ரினோவிடம் அடிவாங்கிக் கிடந்த அடியாட்கள் தேசிகனின் செய்கைகளைப் பார்த்து ‘இவன் நம்மை ஏதும் செய்துவிடுவானோ’ என்று பயந்து மெதுவாக எழும்பி சத்தம் இல்லாமல் அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

இதற்கிடையே ராக்போவைத் தேடி தேசிகன் வீட்டிற்குச் சென்றரிஷியும் ரினோவும் அங்கு அவனால் பொது மக்களுக்கு எதுவும்ஆபத்தில்லை என்றதும் ரோடாஸை ஆனந்த் வீட்டிற்கு திருப்பினர்.ரோடாஸ் ராம் முகுந்தன் இருவரையும் மோதுவது போல் வந்துஅவர்கள் அருகில் நின்றது. ஒரு கணம் அவர்கள் மட்டும் அல்லஅவர்களுக்குக் காவலாக இருந்த சுமோவும் அப்பொழுது அங்குநுழைந்த ஆனந்தும் கூட அதிர்ந்தார். ரோடாஸிலிருந்து இறங்கிய ரினோவும் ரிஷியும் அங்கு சுமோ இருப்பதைப் பார்த்து ‘இவன் எப்படி இங்கு வந்தான்’என்று நினைத்தார்கள்.ஆனால் அவனைத் தெரியாதது போல “ஏய்நீ யார்?” என்று ரிஷிகேட்டான்.‘யப்பா எப்படித் தெரியாதது மாதிரி நடிக்கிறாங்க. புரிஞ்சிக்கிட்டேம்பா’ என்று மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டான். அதற்குள் ஆனந்த்“ரினோ எனக்கு வெளியில் ஒரு முக்கியமான வேலை இருந்ததால் இந்த சுமோவை இவங்களுக்குக் காவலாக வைத்தேன். இவன் ரொம்ப நம்பிக்கையானவன்.” என்றார்.ஆனந்த் ஏதோ திட்டத்துடன் செயல்படுகிறார் என்று ரிஷி நினைத்தான். அவர் திட்டம் என்ன என்று ஆராய்வதற்கு இது நேரமில்லைஎன்பதால் முதலில் ராம் முகுந்தன் இருவரிடமும் ராக்போவைப் பற்றிவிசாரித்தான்.

அவர்கள்“தேசிகன்தான் ராக்போ” என்று சொன்னதும் அனைவருக்கும் அதிர்ச்சியாயிருந்தது.“தேசிகனா! அவன் எப்படி ராக்போவா மாறினான்.?” என்று ரிஷிகேட்டதும் ராம் அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான்.

தேசிகனிடம் அகப்பட்ட எங்கள் இருவராலும் தேசிகனை மீறி எதுவும் செய்ய முடியவில்லை.திருநெல்வேலிக்குப் பக்கத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒருஇடத்தில் தேசிகன் கடத்தல் பொருள்களை பதுக்கி வைப்பதற்காக ஒருபெரிய கட்டிடம் கட்டி வைத்திருந்தான். அங்குதான் அவன் சமூகவிரோதிகளைச் சந்தித்து ரகசிய திட்டங்களையும் தீட்டுவான். ஆனால்எல்லோரும் அந்த கட்டிடத்தை ஏதோ தொழிற்சாலை என்று எண்ணினார்கள்.எங்கள் இருவரையும் அங்குதான் அழைத்துச் சென்றான். எங்கள்ஆராய்ச்சிக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துவிட்டு “ஆரம்பியுங்கள் உங்கள் ஆராய்ச்சியை. இதோ உங்கள் ஃபார்முலா. இதன் விளைவை நான் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கிடைக்கச் செய்கிறேன்.இங்கிருந்து தப்பிக்க மட்டும் நினைக்காதீர்கள். அப்புறம் உங்ககுடும்பத்தில் யாரையும் உயிரோடு பார்க்க முடியாது. சீக்கிரம் உங்களதுஆராய்ச்சியை முடித்தால் உடனே உங்களை இங்கிருந்து அனுப்பிவிடுவேன்.” என்று ஆணையிடுவதுபோல் பேசினான்.‘இவனிடமிருந்து சீக்கிரம் சென்றால் போதும்’ என்று நினைத்துநாங்கள் எங்களது ஆராய்ச்சியைத் தொடங்கினோம். எங்களைத் தப்பிக்கவிடாமல் பார்த்துக்கொள்ள சில அடியாட்களை எங்களுக்குக் காவலாகவைத்தான்.

தேசிகன் அவசரப் படுத்தியதால் இருவரும் இரவு பகலாக ஆராய்ச்சியில் மூழ்கினோம். சில மாதங்களிலே எங்களது ஆராய்ச்சியின் இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். அப்பொழுது எங்களுக்கு ஒரு மனதிடம் நிறைந்த மனிதன் தேவைப்பட்டான்.எங்களது ஆராய்ச்சியைப் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும்தேசிகன் ஏற்கனவே எங்களிடம் ஆரம்பத்திலேயே கேட்டு தெரிந்துவைத்திருந்ததால் தன்னையே அந்த சோதனைக்கு உடபடுத்த விரும்பினான்.
நாங்களும் அவனை சோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றோம். சோதனைக் கூடம் முழுவதும் பெரிய பெரிய இயந்திரங்களும் திரவங்கள் நிறைந்த கண்ணாடிக் குழாய்களும் இருந்தன. எங்குபார்த்தாலும் மின் இணைப்புகள். இவை அனைத்தும் எங்களுக்காகதேசிகன் ஏற்படுத்திக் கொடுத்தது.அங்கு ஒரு பெரிய இயந்திரப் படுக்கையில் அவனைப் படுக்கவைத்து அவனது கைகளையும் கால்களையும் அதோடு பொருத்தினோம்.

இயந்திரப் படுக்கையின் பல பக்கங்களிலும் மின் இணைப்புகளும்திரவக்குழாய்களும் பொருத்தப்பட்டன.
தேசிகன் உடலின் பல இடங்களில் சோதனைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும்பொருத்திவிட்டு. அடுத்து ஒரு பெரிய கண்ணாடியால் செய்யப்பட்டமூடியால் இயந்திரப் படுக்கை மூடப்பட்டது.எங்களது ஆராய்ச்சியின் விளைவு எப்படி அமையப் போகிறதோஎன்று இருவரும் ஆவலுடனும் ஒருவித பயத்துடனும் தேசிகனைக் கவனித்துக் கொண்டிருந்தோம்..தேசிகனின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கியது.

உடல் வளர வளர அவனது உடல் உறுப்புகளில் மாற்றமும் ஏற்பட்டது. உடலெங்கும் உரோமங்கள் முளைத்தன.அதைப் பார்த்த இருவருக்கும் மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது.அவசரத்திலும் பயத்திலும் எங்களது சோதனையில் ஏதோ ஒரு தவறுநடந்துவிட்டதை உணர்ந்தோம்.தேசிகன் உடலில் மாற்றம் ஏற்படும்போது ஒவ்வொரு நொடியும்அவன் மரண வேதனையில் துடித்தான். இருவரும் என்ன செய்வதுஎன்று தெரியாமல் குழம்பி நின்றோம். இதே நிலையில் தேசிகன் எழும்பிவந்தால் அவன் ஒரு கொடூரமானவனாகத் தான் இருப்பான். இதைஎப்படி தடுப்பது என்று யோசித்தோம்.

திடீரென்று முகுந்தன் “ராம் தேசிகன் எழுந்தவுடன் இந்த திரவத்தை அவனோட உடம்பில் செலுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்.”
என்றான்.

“அவன் எழும்பும்வரைக் காத்திருந்தால் அதற்குள் விபரீதம் ஏற்பட்டுவிடும். அதனால் உடனே இதை அவன் உடம்பில் செலுத்தியாகணும்.”என்று சொல்லிவிட்டு நான் இயந்திரப் படுக்கையுடன் பொருத்தப்பட்டகண்ணாடி மூடியைக்கழற்றினேன். பின் முகுந்தன் கொடுத்த திரவத்தைஒரு ஊசியில் எடுத்து அதை தேசிகன் உடம்பில் செலுத்தினேன்.ஆனால் ஊசி அவன் உடலில் செல்லாமுடியாமல் உடைந்து விட்டது.

இருவருக்கும் பயம் அதிகரித்தது. தேசிகன் உடல் இருபது அடியாக ஒரு ராட்சத உருவமாக மாறியது. அவனது முகம் பார்ப்பதற்கு கொடூரமாகத் தெரிந்தது. ஒரு பூதம் போல் இருந்தான்.அதுவரை உடம்பில் ஏற்பட்ட மாற்றத்தால் ரணவேதனை அனுபவித்த தேசிகன் இப்பொழுது எந்த சலனமும் இல்லாமல் பிணம்போல்கிடந்தான். எந்த விபரீதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நினைத்தநான் மீண்டும் வேறொரு பெரிய ஊசியில் திரவத்தை எடுத்து தேசிகனின் உடலில் செலுத்தினேன். ஆனால் துரதிருஷ்டம் மீண்டும் தோல்வியே ஏற்பட்டது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றோம். அப்பொழுது தேசிகனிடமிருந்து ஏதோ சத்தம் வந்தது. திடீரென்று இடி இடிப்பது போன்றபெரும் சத்தத்துடன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு எழுந்தான்.இருபது அடி உயரத்தில் ஒரு மலை அசைந்து வருவதுபோல்நடந்து வந்தான். அவனது குணம் எப்படி மாறியிருக்கும் என்று தெரிந்துகொள்ள விரும்பிய முகுந்தன் தேசிகனிடம்“தேசிகா இப்போ உனது மனநிலை எப்படி உள்ளது?” என்றுகேட்டான்.‘ம்...ம்..’ என்று தேசிகன் கைகால்களை உதறிக் கொண்டு உறுமினான்.“தேசிகா, இப்பொழுது நீ மிகவும் பலமுள்ளவனாக உணர்கிறாயா?உன்னால் பறக்கக்கூட முடியும் முயன்று பார்”என்றேன்.“டேய்ஸயாருடா தேசிகன்?. நான்தான் ‘ராக்போ’ இனி நான்தான்அனைவருக்கும் கடவுள் என்னை முதலில் வணங்குங்கள்.” என்றுசொல்லிவிட்டு ‘ஹா..ஹா..’ என்று கர்ண கடூரமாக சிரித்தான்.
அவனது பேச்சும் செயலும் இருவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. சுதர்சனுக்கு செய்த துரோகத்துக்கு இன்று பெரிய பாவத்தை சம்பாதித்து விட்டதாக வருந்தினோம்.

தேசிகன் என்ற ராக்போ எங்களை நெருங்கி “நீங்கள் இனிமேல்எந்த ஆராய்ச்சியையும் செய்யக்கூடாது.” என்று சொல்லியவன் நாங்கள்வைத்திருந்த ஃபார்முலாவை எடுத்து தீ வைத்து கொளுத்தினான்.அடுத்து அவன் எங்கள் இருவரையும் சிறிது நேரம் முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்தான். ‘இவன் அடுத்து நம்மை என்ன செய்யப்போகிறானோ? இப்படி முறைத்துப் பார்க்கிறானே’ என்று பயத்தில் உடலெல்லாம் நடுங்கிக் கொண்டே நின்றோம்.தேசிகன் எங்கள் அருகில் மெதுவாக வந்தான். இருவரையும்இரண்டு கைகளினால் தூக்கி ‘ஹா...ஹா....நான்தான் கடவுள் என்னையாரும் அழிக்க முடியாது.

அனைவரையும் எனக்கு அடிமையாக்குவேன். என்னை வணங்கச் செய்வேன்.” என்று ஆணவத்தால் கொக்கறித்தான்.“தேசிகா! மக்களுக்கு நல்லது செய்யவே உன்னை உருவாக்கினோம்.உன் உடல் பலத்தாலும் சக்தியாலும் நீ நாட்டுக்கு நன்மை தரக்கூடியவனாய் இரு. இப்பொழுது எங்களை விட்டு விடு. நாங்கள் எங்கள்குடும்பத்தாரிடம் போய்ச்சேர்ந்து விடுகிறோம். இனி எந்த ஆராய்ச்சியிலும்ஈடுபட மாட்டோம்.” என்று இருவரும் தேசிகனிடம் கெஞ்சினோம்.

“நான் தேசிகன் இல்லை ராக்போ” என்று சொல்லி விட்டு இருவரையும் பொத்தென்று கீழே போட்டான். அடுத்து எங்களை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு ம்.. ம்.. என்று சத்தமிட்டுக் கொண்டே வந்தவனைப் பார்த்த அவனது அடியாட்கள் அவனது உருவத்தைப்பார்த்துபயத்தால் அலறி ஓடினார்கள்.அவர்களை ஓடவிடாமல் தடுத்து “டேய் தடியங்களா.. நான்தான்தாண்டா ராக்போ நீங்கள் என் பேச்சைக் கேட்டால் உங்களை ஒன்றும் செய்யமாட்டேன். தப்பி ஓட நினைத்தால் நீங்கள் எங்கிருந்தாலும் உங்களை உயிரோடு சமாதியாக்கி விடுவேன்.” என்று எச்சரித்தான்.
உயிருக்குப் பயந்து அனைவரும் “சரி நீங்கள் சொல்வதைக்கேட்கிறோம். நாங்கள் தப்பி ஓடமாட்டோம்.” என்றனர்.“அப்படியென்றால் அந்த அறையில் இருக்கும் இரண்டு பேரும்தப்பிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். நான் சில நிமிடங்களில் வந்துவிடுகிறேன்”என்று சொல்லிவிட்டு பறந்து விட்டான்.அந்த தேசிகன்தான் இப்பொழுது ராக்போ என்று சொல்லிக்கொண்டிருக்கிறான்.’ என்று ராம் தேசிகன் ராக்போவாக மாறியகதையை சொல்லிமுடித்தான்.

ரிஷிக்கும் ரினோவுக்கும் அவர்கள்மேல் கடும் கோபம் ஏற்பட்டது.“உங்களது ஆராய்ச்சி வெறியால் எத்தனை பேருக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறதுன்னு உங்களுக்குத் தெரியுமா? முதல் பலி உங்களோடநண்பரும் அவரது மனைவியும். இப்போ அங்கே பாருங்க” என்றுசொல்லிவிட்டு ரினோ தனது வலது கையை நீட்டி இரண்டு விரல்களைசுழற்றியது. உடனே முன் அறையில் இருந்த டிவி அந்த அறைக்குவந்தது.அதில் ராக்போ செய்த அட்டாகாசங்களும் ரினோ அவனுடன் மோதியதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதைப் பார்த்துவிட்டு இருவரும் “இல்லை......... நாங்கள் இவனைஉலகிலேயே உயராமான அதிக பலமுள்ளவனாகத்தான் மாற்ற நினைத்தோம். எங்களது ஃபார்முலாவும் அதுதான். ஆனால் ஏதோ தெரியாமல்நடந்த சிறு தவறால் இப்படி ஆகி விட்டது.” என்று அழுதுகொண்டேகூறினார்கள்.

“இது சிறு தவறில்ல. உங்களை உயிர் நண்பர்கள்னு நினைச்சுஏமாந்த சுதர்சனனுக்கு நீங்கள் செய்த துரோகத்துக்குக் கிடைச்ச பரிசு.இப்போ உங்களைக் கொண்டு போய் மக்கள் முன்னாடி நிறுத்தி“இவங்கதான் ராக்போவை உருவாக்கினவங்க” என்று சொன்னால்என்ன நடக்கும் தெரியுமா? கொஞ்சம் நினைச்சுப் பாருங்க. என்ன!உயிரே போய்விடும்னு பயமா இருக்குதா?” என்று ரிஷி வேதனையும்கோபமும் கலந்து பேசினான்.“ரினோ எங்களை மன்னித்துவிடு. ராக்போவின் பலம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகும். உடனே ராக்போவை அழிக்கவேண்டும். தாமதித்தால் அவனை அழிப்பது கடினம். அவன் இந்தநிலைக்கு மாறிய ஏழு நாட்களுக்குள் அழிக்காவிட்டால் அதன்பின்புஅவனை யாராலும் எதுவும் செய்யமுடியாது.

தீயிலிருந்துகூட அவன்வெளியேறிவான். அவனனோட குணம் மேலும் மேலும் கொடூரமானதாகமாறிவிடும்.” ராம் சொல்லியதைக் கேட்ட அனைவருக்கும் பெரும்அதிர்ச்சி ஏற்பட்டது.“அதுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குது?” என்று ஆனந்த்கேட்டார்.

“நாளை ஒருநாள் தான்.”இதைக்கேட்டதும் மீண்டும் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.“ஐயா விஞ்ஞானிகளா.. இப்படி ஒருநாளுதான் இருக்குன்னு என்னவோ பரீட்சை எழுதிட்டு ரிசல்ட்டுக்குக் காத்துக்கிட்டு இருக்கிறமாதிரி சொல்றீங்களே அவனை முதல்லே ஏதாவது விஷத்தைக்கொடுத்தாவது காலி பண்ணியிருக்கலாமில்ல.” அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த சுமோ ஆத்திரமுடன் கேட்டான்.

அதற்கு முகுந்தன்“எந்த விஷமும் அவனை ஒன்றும் செய்யாது.” என்றான். உடனேசுமோ“அடப் பாவிகளாஸ படிச்ச படிப்புக்கு பாவம் பண்ணிட்டீங்களே.ஏதோ கடவுளா பார்த்து அனுப்பி வச்ச மாதிரி இந்த ரினோ புண்ணியவான்க வந்தாங்க. இல்லைன்னா என்ன ஆகும். யாரு பெத்த புள்ளைகளோ நல்லா இருக்கட்டும். ரினோ கண்ணுங்களா ஒரு நாளைக்குஎங்க வீட்டுக்கு வாங்க உங்க வாய்க்கு ருசியா சமைச்சுப் போடுறேன்”என்றான்.

ரிஷியும் ரினோவும் மனதுக்குள் ‘சுமோ நல்லாத்தான் நடிக்கிறான்’என்று நினைத்து சிரித்துக்கொண்டனர்.“சுமோ நீ இவங்ககூடவே இரு. நாங்க வர்றம்வரை எங்கேயும்போகக்கூடாது. இவங்க இங்கிருக்கிறது யாருக்கும் தெரியக்கூடாது. புரியுதா. மிஸ்டர் ஆனந்த் உங்களையும் தான் சொல்றோம். நாங்க நீங்களும் வெளியே போகக்கூடாது.” என்று சொல்லிவிட்டு ரிஷியும்ரினோவும் ரோடாஸில் பறந்தனர்.

ஆனந்த் ‘ரிஷிதான் ரினோ’ என்று அவர்கள் பேச்சிலிருந்தே கண்டுபிடித்துவிட்டார். இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.

“ரிஷிஸ. நான் சொல்வதைக் கேள். ராக்போவை அழிக்க இதைத்தவிர வேறு வழியே இல்லை.”“இல்லை ரினோ இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். உன் உயிரைப்பணயம் வைச்சுத்தான் ராக்போவை அழிக்கணும்னா அது தேவையேயில்லை.”

“ரிஷிஸ ஒன்றும் ஆகாது. என்னை உருவாக்கிய அந்த வத்ஸாசரும் நமது கல்பா தெய்வமும் நமக்குத் துணையிருந்து நம்மைக்காப்பாற்றுவார்கள். நீ தயங்காதே ராக்போ இப்பொழுது மிகவும் வெறிகொண்டவனாக இருப்பான். இன்று ஒரு நாள்தான் பாக்கியிருக்கிறது.நாம் விரைந்து செயல்படணும்.”ரிஷி எதற்கு தயங்குகிறான்?. ரினோவின் உயிரை ஏன் பணயம்வைக்க வேண்டும்.?

ராக்போ வந்த முதல் தினமே ரினோ “ரிஷி. ராக்போவை எளிதில்அழிப்பதற்கு ஒரு வழியிருக்கிறது.”என்றது.“என்ன வழி?”“ராக்போ மிகவும் பலமுள்ளவனாகத் தெரிகிறான். அதனால் இரண்டுசக்திகள் ஒன்றாக இணைந்தால் அவனை எளிதில் அழிச்சிடலாம்.”“அதற்கு நாம என்ன செய்யணும்?”“என் சக்தியை நான் உனக்குத் தரப்போறேன்.”“நீ என்ன சொல்றே ரினோ?”“ரிஷி ராக்போ போன்ற பலம் நிறைந்த கொடியவனை உன்னால் மட்டும்தான் அழிக்க முடியும். அதுமட்டுமல்ல இது சாதாரண மனிதர்களுக்கிடையே நடக்கும் போராட்டமல்ல.

விஞ்ஞானத்துக்கும் மெய்ஞானத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம். கல்பாவுக்குச் சொந்தக்காரனானநீ உன் பிறப்பால் இப்போ பாதி சக்திதான் பெற்றுள்ளாய். நீ முழு சக்தியையும் பெற்றால்தான் ராக்போவை அழிக்க முடியும்.”“அந்த சக்தியைப்பெற நான் இப்பொழுது என்ன செய்யணும்.”“அதற்காகத்தானே வத்ஸாசர் என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்.நான்தான் உனக்கு அந்த சக்தியைத்தரப் போகிறேன். ”“நீயா? ஓ!.உனக்குத் தெரிந்த மந்திரத்தாலா?”“எனக்கு அந்த அளவுக்கெல்லாம் மந்திரங்கள் தெரியாது. ஆனால்உனக்கு சில மந்திர வார்த்தைகளைச் சொல்லித்தர்றேன். நன்றாக மனதில் பதியவைத்துக்கொள்,”ரினோ சொன்ன மந்திர வார்த்தைகளை ரிஷி மனதில் பதித்துக்கொண்டான்.

“ரிஷிஸ.நீ ராக்போவை எதிர்த்துப் போராடப் புறப்படும்பொழுது என்தலையில் கைவைத்து இந்த மந்திர வார்த்தைகளைச் சொன்னால்உனக்கு முழு சக்தியும் கிடைத்துவிடும். ஆனால்ஸ” என்று ரினோஎதையோ சொல்ல தயங்கிக்கொண்டிருக்கும் பொழுது ரிஷிஇ மந்திரத்தைசோதித்துப் பார்க்க விரும்பினான். ரினோவிடம் சொல்லாமலே அதன்தலையில் கையை வைத்து மந்திரத்தைச் சொல்லிவிட்டான். ரினோஇதை எதிபார்க்காததால் அவனைத் தடுக்கமுடியவில்லை.ரிஷி மந்திரத்தைச் சொன்ன மறுநிமிடம் அங்கு நடந்த விபரீதத்தைப் பார்த்து ரிஷி நடுங்கி விட்டான்.
அப்பொழுதுதான் அவனுக்கு ரினோ அந்த மந்திர வார்த்தைகளைப் பற்றி ஏதோ சொல்ல வந்ததுநினைவுக்கு வந்தது. ஆனால் அது என்னவென்று சொல்லுமுன்பேரிஷி அவசரப்பட்டுவிட்டான்.ரிஷி ரினோவின் தலையில் கைவைத்து மந்திர வார்த்தைகளைச்சொன்னதும் ரினோ அடுத்த வினாடி பிணம் போல் தரையில் விழுந்தது.ரிஷிக்கு எதுவுமே புரியவில்லை.ரினோவின் அருகில் உடகார்ந்து “ரினோ...எழும்பு ரினோ உனக்குஎன்ன ஆச்சு? ஐயோ கடவுளே! இப்பொழுது நான் என்ன செய்வேன்.அந்த மந்திர வார்த்தைகளால் தானே ரினோ இப்படி மாறினான். அதைஇனி நான் ஒருநாளும் சொல்லமாட்டேன்.” என்று வருத்தத்தில் ஏதேதோபுலம்பிக்கொண்டிருந்தான்.சிறிது நேரம் கழித்து கண்களை மூடி பிரார்த்தனை செய்தான்.

“ரினோவை உருவாக்கிய வத்ஸாசரே என் ரினோவைக் காப்பாற்றுங்கள்.” என்றான். அப்பொழுது அவனது கண்களுக்கு முன்பு ஏதோஒளி ஒன்று தெரிவது போல் இருந்தது. கண்களை திறந்து பார்த்தான்.அவன்முன்னே பிரகாசமான ஒரு ஒளி அசைந்து கொண்டிருந்தது.ரிஷியின் காதில்“ரிஷி அந்த மந்திர வார்த்தைகளை மீண்டும் சொல்”என்ற வார்த்தைகள் அவன் காதில் கேட்டது. அவனையறியாது ரினோவின் தலையில் கைவைத்து அந்த மந்திர வார்த்தைகளை உச்சரித்தான்.

உடனே ரினோ மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது.ர்pஷிக்குத் தன் உயிரே போய்விட்டு திரும்பி வந்தது போல் இருந்தது. ரினோவை கட்டிப்பிடித்து “ரினோ ஸாரிடா. நீ சொன்னதைக்கேட்காததால் உன்னையே நான் இழக்கப் பார்த்தேன். ரினோ ஏன் இப்படி நடந்தது?” என்று வருத்தத்துடன் கேட்டான்.

“ரிஷி.நான் அனைத்தையும் சொல்லிமுடிக்கும் முன்பே நீ அவசரப்பட்டுட்டே. நீ என் தலையில் கைவைத்து மந்திர வார்த்தைகளைஉச்சரித்தவுடன் எனது முழு சக்தியும் உன் உடலுக்கு மாறிவிடும்.அதன்பின் என் உடல் சக்தியற்றதாக ஆகிவிடும். மீண்டும் நீ ஆறுமணிநேரத்திற்குள் அதே போல் அந்த மந்திர வார்த்தைகளைச் சொன்னால் நான் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவேன்.ஆனால் ஆறு மணிநேரம் கடந்துவிட்டால் அப்புறம் ஒன்றும்செய்யமுடியாது. நீ முழு சக்தியையும் நிரந்தரமாகப் பெற்று விடுவாய்.எனது ஆயுள் அத்துடன் முடிந்துவிடும்.”இப்படி தன் உயிரைப் பணயம் வைத்துதான் ராக்போவை அழிக்கவேண்டும் என்று ரினோ ரிஷியை ஒவ்வொரு முறையும் வற்புறுத்தியது.

ஆனால் ரிஷி “ரினோஸஇந்த வீபரீதமான செயலெல்லாம் வேண்டாம்.” என்று மறுத்து வந்தான்.ரினோ டிவியை ஆன் செய்தது. அதில் ‘சென்னை நகரில் ராக்போவின் அட்டகாசம் அதிகரிப்பு. வழக்கம்போல் ராக்போவிடமிருந்து மக்களைக்காப்பாற்றும் ரினோ எங்கே? ராக்போவிற்குப் பயந்து ஓடிவிட்டானா?’ என்று சொல்லியதைக் கேட்டதும் ரினோவும் ரிஷியும் அதிர்ச்சியுற்றார்கள். ரிஷி, ரினோ சொன்னதைக் கேட்டானா? ராக்போவை அழித்தானா?ராக்போ நகரத்தில் பெரும் ரகளை பண்ணிக் கொண்டிருந்தான்.கையில் அகப்பட்டவர்களைப் பிடித்து துன்புறுத்தினான். பெரிய பெரியகட்டிடச் சுவர்களை உடைத்து உள்ளே புகுந்தான்.அவனைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் பயந்து அங்கும் இங்கும்ஓடினார்கள். ராக்போ சிலரைத் தூக்கி சன்னல் வழியே வெளியே எறிந்தான்.

அங்கிருந்த மேஜை நாற்காலிகளை உடைத்தான்.இப்படியே அவனது அட்டாகாசம் அதிகரித்துக்கொண்டே போனது.ரினோ வந்து தங்களைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. சிலர் “ரினோ! எங்களைக் காப்பாற்ற வரமாட்டாயா?” என்று கூக்குரலிட்டனர்.

“டேய் முட்டாள்களே! அந்த ரினோ இனிமேல் வரமாட்டான். அவன்பயந்து ஓடிவிட்டான்” என்று ராக்போ கொக்கரித்தான்.“ஹேய் ராக்போ! இந்த ரினோவுக்கு பயம் என்ற உணர்வே ரத்த்தில்கிடையாது. இன்றுதான் உனக்கு இறுதிநாள்.” ரிஷி சொல்லிக்கொண்டேரோடாஸில் பறந்துவந்து ராக்போவின் முன்னால் நின்றான்.ரிஷியுடன் ரினோ வரவில்லை. ஆனால் ரினோவின் சக்தியும் அதன்உயிரும் ரிஷியுடன் சேர்ந்து வந்தது.

அது மட்டுமா! ரிஷி இன்னொருஆபத்தையும் அவனுடன் எடுத்து வந்திருந்தான். அதுதான் வத்ஸாசரின்மூலிகைத் திரவம். கரணம் தப்பினால் மரணம். ரிஷிக்கு மட்டுமல்ல ரினோவுக்கும் சேர்த்துதான். இப்படியொரு ஆபத்தான நிலையில்தான் ரிஷி, ராக்போவை அழிக்க வந்திருந்தான். அவனைப் பார்த்த மக்கள் “ரினோ! ராக்போவை விடாதே அழித்துவிடு” என்று கத்தினார்கள்.ராக்போ கொலைவெறியுடன் ரிஷி மீது பாய்ந்தான். ரிஷி அவனதுகைகளைப்பிடித்து சுழற்றி எறிந்ததில் ராக்போ ஒரு கட்டிடத்தின்மீதுபோய் மோதினான். மீண்டும் “டேய்.” என்று கத்திக்கொண்டே பாய்ந்தான். இருவரும்பயங்கரமாக மோதினார்கள். ஒருவரையொருவர் தாக்கினார்கள். அவர்களின் மோதல் மக்களுக்குப் பயத்தை அளித்தது. ஏனென்றால் ராக்போவழக்கத்தைவிட அதிக பலமுடன் தாக்கினான்.
ரிஷியின் ஆடைக்குள் வைத்திருந்த மூலிகை திரவம் ரிஷி அசையும் பொழுதெல்லாம் அங்கும் இங்கும் குலுங்கிக் கொண்டிருந்தது.திரவப் பாட்டிலின் மூடி சிறிது திறந்தாலும் ஆபத்துதான். இப்படியொரு ஆபத்தான நிலையில் ராக்போவுடன் மோதிக் கொண்டிருந்த ரிஷி“ராக்போவை எப்படியாவது தரையில் சாய்த்துவிட வேண்டும்” என்றநோக்கிலேயே ராக்போவைத் தாக்கிக்கொண்டிருந்தான்.

இந்த நிலையில் திடீரென்று ரிஷியைக் காணவில்லை.அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. “ரினோ பயந்து ஓடிவிட்டானா?” என்று நினைத்தார்கள். ராக்போ வெற்றிக்களிப்பில் ‘ஓடிட்டான்ஸ.. ஓடிட்டான்’என்று சிரித்தான்.“ராக்போஸநான் இங்கிருக்கிறேன்”ஒரு உயரமான கட்டிடத்தின்மேல் நின்று சத்தம் போட்டான் ரிஷி. உடனே ராக்போ அவனைநோக்கிப் பாய்ந்தான்.

ஆனால் அதற்குள் ரிஷி மறைந்து விட்டான்.சிறிது நேரம் ரிஷியின் சத்தம் எங்கும் கேட்கவில்லை.ராக்போ சுற்றிலும் திரும்பி திரும்பி பார்த்தான். ரிஷியைக் காணவில்லை. சின்னப் பயல் பயந்து ஓடிவிட்டான் என்று நினைத்தான்.ஆனால் ராக்போவின் கண்ணுக்குத் தெரியாமல் வேறு இடத்தில் மறைந்திருந்த ரிஷி அவன் எதிர்பாராத வேளையில் திடீரென ரோடாஸை மோதினான்.ராக்போ நிலைதடுமாறி மல்லாந்து கீழ்நோக்கி சாய்ந்தான். ரிஷி அவன்சுதாரித்து விடாதவாறு மேலும் மேலும் மோதி அவனை தரையில்சாய்த்தான். ராக்போ கீழே விழுந்ததும் அங்கு நின்றிருந்த மக்கள் விலகிஓடினர். அடுத்து ரிஷி சிறிதும் தாமதிக்காமல் தனது ஆடைக்குள்வைத்திருந்த மூலிகை திரவத்தை எடுத்து ராக்போ மீது ஊற்றினான்.சில வினாடிகளில் ராக்போ பஸ்பமானான். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ‘இப்படியும் நடக்குமா?’ என்று அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றனார்கள்.

ரிஷிதான் “ஹலோ நண்பர்களே ராக்போ அழிந்துவிட்டான். இனிமேல் உங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை.”என்று சொல்லி அவர்களை அதிர்ச்சியிலிருந்து மீட்டான். உடனே அனைவரும் ராக்போ அழிந்துவிட்ட சந்தோஷத்தில்கூச்சலிட்டார்கள்.

“ரினோ வாழ்க! ரினோ வாழ்க!”

“ரினோ நீ யார்? நீ எங்கிருந்து வந்தாய்?”“ரினோ கல்பான்னா என்ன?”“ரினோ ஒரு ஆட்டோகிராப் பிளீஸ்”“ரினோ இன்று உன் நண்பன் மற்றொரு ரினோ எங்கே?”இப்படி எல்லா திசைகளிலிருந்தும் ரிஷியை நோக்கி குரல்கள் வந்தன.“ரினோ நீ ஏன் ராக்போவை அழித்தாய்? அவனை உயிரோடு எங்களிடம்பிடித்து தந்திருக்கலாமே. அவன் யார்? எங்கிருந்து வந்தான்? என்பதையெல்லாம் கண்டுபிடித்து இருப்போமோ” இதைக் கேட்டவுடன் ரிஷிக்குகோபமாக வந்தது. ‘எந்த முட்டாள் இப்படிச்சொல்வது’ என்று நினைத்துக் கொண்டு குரல் வந்த திசையை நோக்கினான்.

அதே விஞ்ஞானிகள். அவர்களைப் பார்த்து ரிஷிக்கு எரிச்சலாக வந்தது. விஞ்ஞானத்தின் விளைவைத் தானே இதுவரை மக்கள் அனுபவத்தார்கள் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் அப்பொழுதுகடிகார மணியோசை கேட்டது. ரிஷி திடீரென்று ஞாபகம் வந்தவனாகமணியைப் பார்த்தவன் அதிர்ந்தான்.இன்னும் பத்து நிமிடங்கள்தான் பாக்கி. அதற்குள் திரும்பாவிட்டால்நினைத்துப் பார்த்த ரிஷிக்கு உயிரே நின்றுவிடும் போல் இருந்தது.உடனே ரோடாஸைத் திருப்ப யத்தனித்தவனை“ ரினோ,போகாதே எங்களுடன் வா. நாங்கள் உன்னைப்பற்றிதெரிந்து கொள்ளவேண்டும்.” என்று விஞ்ஞானிகளின் குரலும் “ரினோ!இந்தா இதை வாங்கிக்கோ உன்னைக் கண்டிப்பாக நான் சந்திப்பேன்.எனக்கு உதவி செய்யக்காத்திரு” என்ற ரீனாவின் குரலும் தடுத்தது.

ரீனா நீட்டிய பூங்கொத்தை வாங்கிக்கொண்ட ரிஷி நொடியில் காணாமல்போனான்.ராக்போவை அழித்து விட்டு வெற்றியுடன் திரும்பிய ரிஷி ரோடாஸிலிருந்து இறங்கி சில நிமிடங்களே இருக்கும் நிலையில் ரினோ இருக்கும் அறைக்கு ஓடினான். அறையைத் திறந்து சலனமற்ற நிலையில்பிணம்போல் கிடந்த ரினோவின் தலையில் கைவைத்து மந்திர வார்த்தைகளை உச்சரித்தான். சில நொடிகளில் ரினோ எழுந்து சாதாரணநிலைக்கு மாறியது.

ரிஷி ரினோவைக் கட்டிப்பிடித்து “ரினோ ராக்போ அழிந்து விட்டான்.”என்று சந்தோஷமாக் கூறினான்.

“ஆமா ரொம்ப மகிழ்ச்சி. ரிஷி உனது வெற்றிக்குப்பரிசா ரீனா கூடபூங்கொத்து கொடுத்தாளே”

“அது எப்படி உனக்குத் தெரியும்?”“உனக்கு நான் தந்தது என் சக்தியை மட்டுமல்ல. என் உயிரையும்தான்.”

“நீ என்ன சொல்றே ரினோ?”“ என் உயிரை விட்டு சக்தியை தனியாகப் பிரிக்க முடியாது.அதனால் என்உயிரும் உன்னோடு கலந்தே இருந்தது.அதனால் இன்றுநடந்த அனைத்தையும் நான் அறிவேன்.

ரிஷி இப்பொழுது இதையெல்லாம் பேச நேரமில்லை. முதலில் நாம் முகுந்தன்இராம் இருவரையும்போய்ப்பார்க்கணும். புறப்படு” ரிஷிக்கு ரினோவைப்பார்த்து மிகவும் பெருமையாக இருந்தது. இருவரும் ரோடாஸில் ஆனந்த் வீட்டை நோக்கி புறப்பட்டார்கள்.

“மிஸ்டர் ஆனந்த் இவங்க ரெண்டு பேரையும் பத்திரமா அவங்கஊருக்கு அனுப்பி வைங்க.” என்று ரிஷி ஆனந்திடம் சொன்னான்.“இல்லை ரினோஸ.இவங்க சட்டவிரோதமான காரியம் பண்ணியிருக்காங்க அதனால் இவர்கள் மேல் கேஸ் புக் பண்ணணும்.”

“கேஸ் புக் பண்ணி என்ன பண்ண பண்ணப் போறீங்க. இவங்கதான் தேசிகனை ராக்போவா மாற்றினதுன்னு பேப்பரிலும் டிவியிலும் காட்டப் போறீங்களா? அப்படிச் செஞ்சீங்கன்னா அதைவிட முட்டாள்தனம்வேறயில்லை. இந்த அறிவாளிகளின் செயலைப் பார்த்து நாளை வேறு யாராவது இது போன்ற செயலில் ஈடுபட மாட்டாங்க என்பது என்ன நிச்சயம். அதனால் ராக்போ எங்கிருந்தோ வந்தவனாகவே இருக்கட்டும் இவங்களைப்பற்றி யாருக்கும்
தெரிவிக்க வேண்டாம்.”ரிஷியின் சொல்லுக்கு ஆனந்த்
கட்டுப்பட்டார்.

ஆனால் அவர் மனதில் ஓடிய எண்ணங்களை யாரும் அறியவில்லை.ஆனந்த் ரிஷியின் வீட்டிற்கு முதன்முறை சென்றபொழுதே ரினோவைப் பார்த்து விட்டார். ஆனால் அதை உறுதிபடுத்த முடியவில்லை.அப்பொழுதிலிருந்தே ரிஷியின் மேல் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ராக்போவைத் தாக்குவதற்கு ரினோவுடன் சென்றது ரிஷிதான் என்றுஅவர் நம்பினார். ஆனால் ரிஷியின் சக்தி அவரைப் பயமுறுத்தியதால்அவர் ரிஷியிடம் எதுவும் கேட்கவில்லை.காசி ஜான் மூலமாக வத்ஸாசரைப் பற்றியும் அவர் உருவாக்கியதுதான் ரினோ என்பதையும் ராக்போ பற்றியும் தெரிந்து கொண்ட ஆனந்த்‘முதலில் சதாராவை சந்தித்து அனைத்தையும் சொல்லவேண்டும்.’என்றுமுடிவு செய்தார்.
ராமும் முகுந்தனும் ரிஷியிடமும் ரினோவிடமும் மன்னிப்புக் கேட்டுவிட்டு புறப்பட்டார்கள்.“எங்களோட வேலை முடிந்து விட்டது நாங்க புறப்படுகிறோம்”என்று சொல்லிய ரினோவையும் ரிஷியையும் சுமோ தடுத்தான்.

“அதுக்குள்ள போனா எப்படி? இருந்து ஆனந்த் சார் கல்யாணத்தை நடத்திட்டு போங்க” என்று சுமோ சொன்னதும்“கல்யாணமா?” என்று இருவரும் ஆச்சர்யத்துடன் கேட்டனர்.“ஆமா மாஷா டீச்சருக்கும் சாருக்கும் கல்யாணம். நான் இங்கவந்து மாட்டிக்கிட்டதே அந்த மாஷா டீச்சராலதானே.”

‘ஓ .. கல்யாணம் வரை போய்விட்டதா!’ என்று மனதில் எண்ணிக்கொண்டே “கண்டிப்பா கல்யாணத்துக்கு வர்றோம்” என்று சொல்லிவிட்டு பறந்தார்கள்.ரிஷிக்கு விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே இருந்ததால் பாட்டி ஊரிலிருந்து வந்துவிட்டாள். ரினோ ரிஷி இருவரையும் நினைத்துப் பெருமைப்பட்டாள். சில செயல்களுக்காக வருத்தமும் பட்டாள்.வழக்கம் போல் அதிகாலையில் சித்தர்மலைக்குச் சென்ற ரினோ திரும்பி வரவில்லை. ஒருநாள் இரண்டு நாள் எனப் பல நாட்களாகியும்ரினோ வரவில்லை.பாட்டி ரினோவுக்காக தினமும் பால்பாயசமும் கேக்கும் செய்துவைத்துக் கொண்டு காத்திருந்தாள். ரிஷி ரினோவைக் காணாமல் பள்ளிக்குப்போக மறுத்தான்.ரினோ எதுவுமே சொல்லாமல் எங்கே சென்றது? திரும்பி வந்ததா?‘கல்பா’ ன்னா என்ன?மக்களின் பெரும் கூச்சலுக்கு மத்தியில் ரீனாவின் குரல் மட்டும் ரிஷிக்கு எப்படி கேட்டது.

ரீனா யார்? ரிஷி ரீனாவை மீண்டும் சந்தித்தானா? அவள் அவனிடம் கேட்ட உதவி என்ன? ரீனாவையும் சுவடிகளையும் தேடிக் கண்டுபிடிப்பதற்காக சக்தியைஅனுப்புகிறார் ரோகி.

இந்த ரோகியும் சக்தியும் யார்?. அவர்கள் ஏன் ரீனாவையும் சுவடிகளையும் தேடுகிறார்கள்?ஆனந்த் சந்திக்கப் போகும் ‘சதாரா’ யார்? இவர்கள் மட்டுமா? இன்னொரு முக்கியமான நபர் ஒருவன் வரப்போகிறான். அவன்தான் " த்ரி " இவர்கள் அனைவருடனும் சுமோவும் சேர்ந்து கலக்கப்போகிறான் ரினோவின் இரண்டாம் பாகத்தில்.--------------! - கனிஷ்கா கலா .

kalpa2011@yahoo.com

<<>>ரினோ...4<<>> - கனிஷ்கா

நீ உனது பேராசையால் உண்மையை மறைத்து உனக்குச்
சொல்லப் பட்ட கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டாய்.
நீ ஒரு சித்தனின் மறு பிறப்பு. அதனால்தான் உன்னிடம் இந்த

கடமை ஒப்படைக்கப்பட்டது.

கடமை தவறிய நீ கொடூரமான முறையில்அழிவாய்.”
என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். ஆனால் வத்ஸாசர்
‘இந்தச் சுவடிகள் எனக்குத்தான் சொந்தம். இதிலுள்ள ஜீவன்களைப் படைத்து இந்த உலகையே ஆளச்செய்வேன். அதுதான் இனி என் கடமை. என்னை யாரும் அழிக்க முடியாது.’என்று மமதைகொண்ட வத்ஸாசர் அதன்பின்பு அந்த சுவடியில் உள்ளது போன்ற ஒரு முழுமையான ஜீவனை உருவாக்கினார்.





அதன்வளர்ச்சி சற்று வேகமாகவே இருந்தது. ஒரு மாதத்திலேயே ஒரு அடி வளர்ந்திருந்தது. பாம்பு போன்றுவழு வழுப்பான உடல் உருண்டையான பெரிய கண்கள். ஒற்றைக்கொம்பு. மேல்நோக்கி வளைந்த வால். குட்டை குட்டையான கைகால்கள். பார்ப்பதற்கு வினோதமாக இருந்தாலும் அழகாக இருந்தது. இது வளர வளர வத்ஸாசருக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. தான் வெற்றிபெற்று விட்டோம் என்று பெருமிதம் கொண்டார்.
தில்லையிடம் அதைக் காட்டி “தில்லை இதைப்பார். இது
சாதாரண மான பிராணிஅல்ல. சிறிது நாளில் இது பேசிவிடும்.
ஏன்! பறக்கக்கூட செய்யும். மனிதனைவிட அதிக சக்திபெற்றதாக இருக்கும்.அப்படி நான் நினைப்பதுபோல் இது இருந்துவிட்டால் இதைப்போல் இன்னும் பலவற்றை உருவாக்கி மனிதனுக்குப் போட்டியாக நடமாடவிடுவேன்.
அதுமட்டுமல்ல இந்த உலகத்தையே ஆளச்செய்வேன்.”என்று கர்வமுடன் பேசினார். தில்லைக்கு அவரது கர்வமான பேச்சு பிடிக்கவில்லை. இருந்தும்எதுவும் பேசவில்லை. ஆனால் அந்த
புது ஜீவன் மட்டும் வத்ஸாசரின் ஒவ்வொரு செய்கையையும்
மிகவும் கூர்மையாகக் கவனித்தது. வத்ஸாசர் அதனிடம் தினமும் பேசினார்.
“இங்கே பார் நான் உருவாக்கிய ஜீவனே! சீக்கிரம்பேசு உன்னால் முடியும். உனக்கு ஒரு பெயர்வைக்கப்போகிறேன் இல்லை நான் வைக்கவில்லை இந்தச் சுவடிலேயே உனக்குரிய பெயர் என்ன வென்று உள்ளது. அது என்ன என்று வாய்திறந்து கேள். பேசு உன்னிடம் சில ரகசியங்கள் சொல்லப் போகிறேன்.”என்று தினமும் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார். இப்படியே மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. வத்ஸாசரின் எதிர்பார்ப்பும் உச்சநிலை அடைந்தது.
மூன்று மாதத்தில் இரண்டடிக்கு மேல்வளர்ந்திருந்தது அந்த விலங்கு. அதனால் பேச முடிந்தது. பறக்கவும் முடிந்தது. ஆனால் வத்ஸாசரிடம் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஒரு நாள் வத்ஸாசர் அதனிடம்வந்து “ எனதருமை கல்பாவின் ஜீவனே! அதோ பார். அது என்னவென்று தெரிகிறதா?” என்று கையை நீட்டிக்கேட்டார். அவர் கைநீட்டிய இடத்தில் ஒரு பறக்கும் தட்டு ஒளி வீசும் பென்னிறத்தில் நின்றிருந்தது.
“பார்த்தாயா அதுதான் ‘கல்பாவின் ரோடாஸ்’ கல்பாவின் வாகனம்.அதுமட்டுல்ல. உன்பெயர் என்ன தெரியுமா? ‘ரினோ’. கல்பாவின் ரினோ. ‘ரினோ’ உனது பெயர் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தாயா!.இப்பொழுதுபார்” என்று சொல்லிவிட்டு ஏதோ மந்திரத்தை உச்சரித்தார். உடனே ஒரு அழகிய ஆடை அவர் கையிலிருந்தது. “இதெல்லாம் கூட கல்பாவின் மாயசிருஷ்டைதான். ரினோ! இதையாருக்காக உருவாக்கினேன் தெரியுமா? ரிஷி... ரிஷிக்காக. அவன் யார்என்று உனக்குத் தெரியாது. அவன் சாதாரணமானவன் அல்ல. அவனுக்கு பிறவியிலேயே ஒரு அசாதாரண சக்தி இருக்கிறது. அது யாருக்கும் இதுவரை தெரியாது. இந்த ரோடாஸ் மூலம் அதை நான் வெளிப்படுத்தப் போகிறேன். உன்னையும் அவனிடம்தான் அனுப்பப் போகிறேன்.”என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதோ மந்திரத்தைச் சொன்னார்.அவர் கையிலிருந்த ஆடை காணாமல் போனது. “என்ன ரினோ! காணாமல் போய்விட்டது என்று ஆச்சர்யப்படுகிறாயா. அது தகுந்த சமயத்தில் ரிஷிக்கு கிடைக்கும்.
இப்பொழுது நீ மட்டும்பேச ஆரம்பித்து விட்டால் அடுத்து நான் உன்னைப்போல் பல நூறுஜீவன்களை உருவாக்குவேன். ரிஷியின் தலைமையில் உங்களை இந்தஉலகையே ஆளச்செய்வேன். அதனால் நீ சீக்கிரம் உனது சக்தியைவெளிப்படுத்து. உன்னால் எல்லாம் முடியும்.” என்றார். ஆனால் ரினோவுக்கு வத்ஸாசர் பேராசைப்படுவதாகத் தோன்றியது. அதனால் அது அவரிடம் தனது சக்தியைக் காட்ட விரும்பவில்லை. ஆனால் அவருடனே இருந்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டது. அவர் படித்த மந்திரங்கள் பலவற்றை மனதில் பதியவைத்துக்கொண்டது. வத்ஸாசர் தான் வீட்டைவிட்டுப் வந்ததுமுதல் ரினோவை உருவாக்கியதுவரை அனைத்தையும் ரினோவிடம் கூறினார். அவருடைய பேச்சில்கர்வம் நிறைந்திருந்தது.
‘இவர் சுவடிகளைத் தவறான வழிக்குப் பயன்படுத்தி விடுவாரோ’ என்று பயந்தது ரினோ. அவரது பேராசை விபரீதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று அஞ்சியது. அதனால் அவரிடம் உள்ள அந்த இரண்டு சுவடிகளையும் எப்படியாவது மறைத்துவிடவேண்டும் என்று நினைத்தது. ஒருநாள் அதிகாலையில் வத்ஸாசர் தியானத்தில் இருந்தார். தில்லையும் வெளியில் சென்றிருந்தான். ரினோ அந்த இரு சுவடிகளையும் தேடஆரம்பித்தது. பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை.‘எங்கு தேடியும் கிடைக்கவில்லையே! ஒரு வேளை மந்திரத்தால்மறைத்து வைத்துவிட்டாரா’ என்று எண்ணிக்கொண்டு நின்றிருந்த ரினோவின் கண்களில் ஒரு கண்ணாடி பேழை தென்பட்டது.
ரினோ அந்த பேழையைத் திறந்து அதற்குள் என்ன இருக்கிறதுஎன்று பார்க்க நினைத்தது. ஆனால் அதால் திறக்க முடியவில்லை.அப்பொழுது ரினோவுக்கு வத்ஸாசர் சொன்ன சில மந்திரங்கள் நினைவுக்கு வந்தது. இதில் ஏதாவது ஒரு மந்திரத்தைச் சொன்னால் பேழை திறக்கிறதா என்று பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டே ரினோ சிலமந்திர வார்த்தைகளை உச்சரித்தது. ஆனால் பேழை திறக்கவில்லை.வத்ஸாசர் தியானம் முடியும் வேளை நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்குள் எப்படியாவது அந்தச் சுவடிகளை எடுத்து மறைத்துவிடவேண்டும் என்று நினைத்து மீண்டும் ஒரு முறை அந்த கண்ணாடிப்பேழையை திறந்து பார்க்கலாம் என்று எண்ணி ரினோ அதில்கைவைத்தது. என்ன ஆச்சர்யம்! பேழை திறந்து கொண்டது.
ரினோ எதிர்பார்த்தது போலவே இரு சுவடிகளும் அதற்குள்தான் இருந்தன. ரினோ அவற்றை எடுத்துக் கொண்டுபோய் தில்லை இருந்த குடிலில் ஒரு இடத்தில் மறைத்து வைத்தது. ஏனென்றால் வத்ஸாசர் தில்லையின் குடில் பக்கம் போவதேயில்லை. வத்ஸாசர் தியானத்திலிருந்து எழும்பும் முன்பு ரினோ அமைதியாகஎதுவுமே நடக்காததுபோல் அவர்முன் வந்து அமர்ந்து விட்டது. அப்பொழுது தில்லையும் வத்ஸாசருக்கும் ரினோவுக்கும் உணவாக பாலும்பழங்களும் கொண்டுவந்து வைத்துவிட்டு வத்ஸாசருக்காக காத்திருந்தான். தியானத்திலிருந்து எழுந்த வத்ஸாசர் உணவருந்திவிட்டு சுவடிகளைஎடுத்துப் படிப்பதற்காக கண்ணாடிப் பேழையை நோக்கிச் சென்றார்.அங்கு பேழை திறந்திருப்பதைப் பார்த்து ஆத்திரமுற்ற வத்ஸாசர் மிகுந்த கோபத்துடன் தரை அதிர தில்லையை நோக்கி நடந்து வந்தார்.
தில்லையிடம் “ஏய் பாதகா அந்த பேழையை எப்படியடா திறந்தாய்? அதில் இருந்த சுவடிகளை எங்கே வைத்திருக்கிறாய்? உண்மையைச்சொல். இல்லாவிட்டால் உன்னை அழித்துவிடுவேன்”என்று வார்த்தைகளில் அனல் தெறிக்க கேட்டார்.
“ஐயா எனக்கு எதுவுமே தெரியாது. என்னை நம்புங்க நான் எதையும் திறக்கவுமில்லை எடுக்கவும் இல்லை.”என்று தில்லை பயத்துடன்கூறினான். “அப்படியென்றால் வேறு யாரும் இங்கு வந்தார்களா? அப்படியே வந்திருந்தாலும் அவர்களால் நிச்சயமாக அதை திறக்க முடியாதே.” “ஐயா நான் பழங்களைப் பறிக்கிறதுக்காக போயிட்டு சற்று முன்னாடிதான் வந்தேன்.” என்று தில்லை சொன்னதும் வத்ஸாசருக்கு ரினோவின் மேல் சந்தேகம் எழுந்தது. “ஏய் ரினோ! உனக்குத் தெரியும் சொல். யார் அந்த சுவடிகளைஎடுத்தது? நீதான் எடுத்தாயா? பேசு வாய் திறந்து இப்பொழுதாவது பேசு.
இல்லையென்றால் உன்னை உருவாக்கியதே வீண் என்றுநினைத்து உன்னை பஸ்பமாக்கிவிடுவேன். சொல் ரினோ சொல்” என்றுகாடே அதிர்வதுபோல் கத்தினார். ரினோ எப்பொழுதும் போல் அமைதியாகவே இருந்தது. அதுவே வத்ஸாசருக்கு மேலும் கோபத்தைத் தூண்டியது. “நீ பேசமாட்டாயா? உன்னை உருவாக்கியது வீண்தானா? இனியும் நீ வாழ்ந்து பயனில்லை. உன்னை என்ன செய்கிறேன் பார்”என்றுகோபத்தோடு சென்றவர் கையில் மூலிகை
திரவத்தோடு திரும்பி வந்தார். ரினோவின் அருகில்
சென்று “உன்னை இப்பொழுதே அழித்து விடுகிறேன்.” என்று சொல்லிவிட்டுதிரவமிருந்த பாட்டிலைத் திறந்தார்.
என்ன நடக்கப்போகிறதோ என்று பயந்து கொண்டு நின்றிருந்ததில்லை “ஐயா வேண்டாம். ரினோ பாவம். அதற்கு எதுவும் தெரிந்திருக்காது. அதை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.” என்று வத்ஸாசரை தடுத்தான். இப்பொழுது வத்ஸாசரின் கோபம் தில்லையிடமும் திரும்பியது.“உங்கள் இருவரையுமே அழித்துவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டே முலிகை திரவத்தை இருவர் மீதும் ஊற்றப்போனார்.
அப்பொழுது தடதட என்று யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது.வத்ஸாசரும் தில்லையும் யாராக இருக்கும் என்று நினைத்து சத்தம் வந்த திசையில் நோக்கினர். அங்கே தேசிகன், காசி, ஜான் மூவரும் உள்ளே நுழைந்தனர். அவர்களைப் பார்த்த தில்லை “டேய் காசி இவனை ஏன் இங்குஅழைச்சிட்டு வந்தே? இவன் கொலைகாரன்.” என்று காசியைப் பார்த்துகோபமுடன் கேட்டான். “மன்னிச்சிடுங்க. நீங்க எங்களைத் திடீர்னு கைவிட்டு விட்டதால் எங்களோட பிழைப்புக்கு வழியில்லை. அதனாலதான் இவர்கிட்ட சேர்ந்திட்டோம்.” என்றான் காசி. ‘துரோகிகள்...’ என்று தில்லை அவர்களைத் திட்டிக்கொண்டிருக்கும்
போதே “டேய் என்னடா பேச்சு. முதல்ல இவங்களைப் போட்டுத்தள்ளுங்க. அப்புறம் இந்தக் கிழவன் என்ன ஆராய்ச்சி பண்ணியிருக்கிறான்னு கண்டுபிடிப்போம்”என்றான் தேசிகன்.
உடனே ஜான் கையில் வைத்திருந்த தடியால் வத்ஸாசரை தாக்கப்போனான். தில்லை அவனைத் தடுத்து “ அவரை ஒன்றும் செய்துவிடாதே” என்று வத்ஸாசரின் முன்னே சென்று அவரை மறைத்துக்கொண்டு நின்றான். அடுத்து ரினோவைப் பார்த்து ‘ரினோ ஓடிவிடு”என்று சொனனான். அப்பொழுது வத்ஸாசர் கையில் வைத்திருந்த அமிலத்தை ஜானைநோக்கி ஊற்றப்போனார். அதற்குள் ஜான் தடியால் அவரது கையில் ஒருபோடு போட்டான். அடுத்து அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி மூவரையும் ரத்தம் உறைய வைத்தது.
ரினோவும் அதிர்ச்சியுடனும் வேதனையுடனும் பார்த்துக்கொண்டிருந்தது. அப்படி என்ன நடந்தது அங்கே?ஜான் கம்பால் வத்ஸாசரின் கையில் தட்டியதும் அவர் கையிலிருந்ததிரவப் பாட்டில் உடைந்து தில்லை வத்ஸாசர் இருவர் மீதும் சிதறித்தெறித்தது. சில நொடியில் இருவரும் பஸ்பமாகினர். பயத்தால் அதிர்ந்திருந்த தேசிகன் “டேய் வாங்கடா ஓடிவிடுவோம். அதோ அங்கு நிக்கிறது என்ன? அதுதான் ரினோவாக இருக்கும். பார்க்கிறதுக்கு வினோதமா இருக்கே! . அதுகிட்ட ஏதோ விசேஷத்தன்மை இருக்கும் போல தெரியுது. அதைத் தூக்கிக்கொண்டு வாங்கடா” என்றான். அதைக்கேட்ட ரினோ ‘கொலைகாரங்க இவங்கக்கிட்ட மாட்டினாநமக்கும் ஆபத்துதான்’ என்று நினைத்து அங்கிருந்து விர்றென்று பறந்தது.
மூன்றுபேரும் அதை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அது எங்கு சென்றது என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.தேசிகனுக்கு எரிச்சல் வந்தது. “சே! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலியே!. காசி ஜான் அது எங்கு சென்றாலும் எப்படியாவது கண்டுபிடிச்சுடணும்.” என்றான்.அங்கிருந்து பறந்து சென்ற ரினோ அவர்கள் சென்றதும் மீண்டும்குடிலுக்கு வந்தது. வத்ஸாசர் பஸ்பமாகிய இடத்தையே சிறிது நேரம்பார்த்துக் கொண்டிருந்தது. பின்பு தில்லையின் குடிலுக்குச் சென்றுமறைத்து வைத்திருந்த சுவடிகளை எடுத்து வந்தது. அவற்றைமீண்டும் கண்ணாடிப் பேழைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு குடிலுக்குவெளியே வந்தது.ரினோ வெளியில் வந்த சில நொடிகளில் ‘டமால்’என்று சத்தம்கேட்டது. ஏதோ நிகழப்போகிறது என்று உணர்ந்த ரினோ உடனேமேலெழும்பி பறந்து சற்று தூரத்தில் சென்று என்ன நடக்கப்போகிறதுஎன்று கவனித்தது.
குடில் இருந்த இடம் இரண்டாகப் பிளந்தது. சிறிது நேரத்தில்அந்த இடத்தில் இருந்த எந்த பொருளுமே இருந்த இடம் தெரியாமல் மறைந்து சம தரையாகக் காணப்பட்டது.ரினோ சிறிது நேரம் அங்கேயே நின்றது. பின்பு அதற்கு ‘உன்னையும் ரிஷியிடம் தான் அனுப்பப்போகிறேன்’என்று வத்ஸாசர் சொன்னதுநினைவுக்கு வந்தது. அடுத்து ‘ரிஷியிடம் எப்படிப் போவது’ என்றுயோசித்து வத்ஸாசரை நினைத்து தியானித்தது. அப்பொழுது ஒரு ஒளிஒன்று ரினோமுன் தோன்றி அப்படியே மேல்நோக்கிச் சென்றது. ரினோவும்அதைத் தொடர்ந்து சென்றது. இறுதியில் ரிஷியின் வீட்டை அடைந்ததும் ஒளி மறைந்துவிட்டது. இப்படித்தான் இந்த ரினோ இங்கே வந்து சேர்ந்தது.
ஒரு கதையைப்போல் அனைத்தையும் ரினோ சொல்லிமுடித்ததும்
ரிஷி அதனிடம்“ரினோ அந்த சுவடிகளும் மறைஞ்சிட்டுதா?” என்று கேட்டான்.“ஆமாம். எல்லாமே மறைஞ்சிருச்சி. இங்கு வந்தபின் தர்மா தாத்தாவைப் பார்த்ததும் வத்ஸாசரைப் பார்ப்பது போல் தோன்றியது. ஆனால்அவரும் மறைந்தவுடன் என்னை உருவாக்கிய வத்ஸாசரின் நினைவே எப்பொழுதும் மனதில் தோன்றிக்கொண்டு இருந்தது. அவரது மரணத்திற்கு நான்கூட ஒரு காரணமாக இருந்துவிட்டேன்.
அதனால் அவரிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டி தியானம் செய்யவேண்டும் என்று நினைத்து தினமும் அதிகாலையில் அந்த
குடில் இருந்த சித்தர் மலைக்கு சென்று வந்தேன். அதுமட்டுமல்ல என்றாவதுஒரு நாள் அந்த சுவடிகள் கிடைத்து விடாதா என்று தினமும்அந்த இடத்தில் சிறிது நேரம் காத்திருப்பேன்.” என்றது ரினோ. அனைத்தையும் சொல்லிவிட்டு பாட்டியிடம் “பாட்டி இப்பவாவது ரிஷியிடம் உள்ள சக்தியை நம்புறீங்களா?” என்று கேட்டது.“ஆனால் ரினோ.. இதனால் ரிஷிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால்..” என்று பாட்டி சிறிது சந்தேகத்துடன் சொன்னதும்“ஒன்றும் ஆகாது.
நீங்க கவலைப்படாமல் காலையில் ஊருக்குப்புறப்படுங்க” என்றது ரினோ.காலையில் பாட்டி புறப்பட ஆயத்தமானாள். தூங்கிக்கொண்டிருந்தரினோவையும் ரிஷியையும்“டேய் எழும்பிவாங்கடா நான் புறப்பட்டாச்சு” என்று அழைத்தாள். இருந்த இருவரும் பாட்டியின் சத்தம்கேட்டதும் மெதுவாக எழும்பி வந்தனர்.“என்ன பாட்டி புறப்பட்டாச்சா” என்று கேட்டுக்கொண்டே வந்தரிஷியும் ரினோவும் அங்கு சுமோ நிற்பதைப்பார்த்து திகைத்தனர். ‘இவன்எப்படி இங்கே வந்தான்?’ என்று எண்ணிக்கொண்டு சுமோவைப் பார்த்தார்கள்.“என்ன ரிஷி அவனைப் புதிசா பார்க்கிற மாதிரி பார்க்கிற. நான்தான்உங்களுக்குத் துணையா இருக்கட்டுமேன்னு வரச்சொன்னேன்.
அவனுக்கென்று யாருமில்லை. அவங்க தாத்தா மட்டும் இருந்தாரு. அவரும்சமீபத்தில இறந்திட்டாரு. எனக்கு அவரை நல்லாத் தெரியும். சுமோரொம்ப நல்ல பையன். இனிமே நம்மகூடத்தான ; இருப்பான்.” என்றாள்பாட்டி.சுமோ ரினோவையே பார்த்துக் கொண்டிருந்தான். “நீதான் ரினோவா? மூக்கும் முழியுமா பார்க்கிறதுக்கு என்னைவிட நல்லாத்தான் இருக்கே”என்று சொல்லிக்கொண்டே ரினோவை ஒரு முறை சுற்றி வந்து “ஓ..வாலெல்லாம்கூட இருக்கா உனக்கு”. என்றான். அப்பொழுது ரினோசுமோவை வாலில் சுற்றி தலைகீழாகத் தலைக்கு மேலே தூக்கியது.சுமோ கையையும் காலையும் உதறிக் கொண்டு “யப்பா நான் எந்ததப்பும் பண்ணல என்ன ஒண்ணும் செஞ்சிராதே. ஐயோ! குடலெல்லாம்கீழே விழறமாதிரி இருக்குதேஸஐயா ரினோஸஎன்னை கீழவிட்டுருப்பா”என்று புலம்பினான்.
“ரினோ அவனை விட்டுரு. அவன் இங்கதானே இருக்கப்போறான் உன் விளையாட்டை அப்புறம் வச்சுக்கோ. டேய் சுமோ நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கில்ல. வா வா ஆட்டோ வந்தாச்சு சாமான்எல்லாம் எடுத்துவை. ரிஷிஸரினோ ஜாக்கிரதை” என்று சொல்லிவிட்டு கிளம்பப்போனாள் பாட்டி. அப்பொழுது ரிஷி “பாட்டி இந்த சுமோ.. இங்கே..”என்று ஏதோசொல்ல வந்தான். அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரிந்துகொண்ட பாட்டி “ரிஷி சுமோ ரொம்ப நல்ல பையன். அவங்க அப்பாஎனக்கு ஏற்கனவே தெரியும்.
அவங்கிட்ட ரினோவைப் பற்றி எல்லாம்சொல்லியிருக்கிறேன். நான் வர்றவரைக்கும் உங்களுக்கு சமையல் பண்ணிக்கொடுத்திட்டு இங்கேயே இருப்பான். யாருகிட்டேயும் எதுவும் சொல்லமாட்டான். உங்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கமாட்டான். சுமோ.....ரெண்டுபேரையும் நல்லா கவனிச்சுக்க” என்று சொல்லி விட்டு கிளம்பினாள். “நான் இவங்கள கவனிக்கிறோனோ இல்லையோ இவங்க ரெண்டுபேரும் பார்க்கிறத பார்த்தா என்னைத்தான் நல்லா கவனிப்பாங்கன்னுநினைக்கிறேன். நல்லா மாட்டி விட்டுட்டீங்க இவங்ககிட்ட. என்ன பாடுபடப்போறேனோ! முதனாளே தலைகீழா தொங்க விட்டுட்டான். இன்னும்என்னவெல்லாம் செய்யப் போறாங்களோ. எதுக்கும் நான் நல்லா இருக்கேன்னான்னு அடிக்கடி போன் பண்ணிக்கேட்டுக்காங்க” என்று சொல்லிக்கொண்டே ஆட்டோவில் சாமான்களை ஏற்றினான்.
பாட்டி சென்றதும் உள்ளே நுழைந்த சுமோ இருவரிடமும் “என்னப்பா தம்பிகளா. சூப்பரா சூடா டீ போட்டுக் கொண்டுவர்றேன். சீக்கிரம் பல் விளக்கிட்டு வாங்க. அப்புறம் ஒரு விஷயம். நான் உங்களைவிட கொஞ்சம்தான் பெரியவன். என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒருபத்து வயசுதான் கூட இருக்கும்”என்று சொல்லியவனை ரிஷி இடைமறித்து“அதனால் இப்ப என்னண்ணே?” என்று கேட்டான் “பாத்தியா இதுக்குத்தான் சொல்லவந்தேன். நீங்க இனிமேல் என்னை‘அண்ணன்’அப்படின்னு எல்லாம் கூப்பிடவேண்டாம் சுமோன்னே கூப்பிடலாம்”என்றதும் இருவரும் “சரிடா சுமோ” என்றனர்.“ஆ.. சரி ‘டா’ வா! ஆகா உங்கக்கிட்ட ரொம்ப கவனமா இருக்கணும்” என்றான். ரினோ அவனிடம் ஏதாவது குறும்பு செய்து பார்க்கலாம் என்றுநினைத்து “சுடலைமுத்து காலையில குளிச்சியா?” என்று கேட்டது. “ரினோ கண்ணா! சுமோன்னு கூப்பிடக்கூடாதா. சரி பரவாயில்ல. நீஎப்படிக் கூப்பிட்டாலும் நல்லாத்தான் இருக்கும்.
ஆமா என்ன கேட்ட...குளிச்சாச்சான்னா. அட எங்கப்பா! காலையில எழும்பின உடனே பல்கூடவிளக்காம ஓடிவந்துட்டேன். அப்புறம் எங்க குளிக்க?” “அப்படின்னா முதல்ல அந்த வேலையை முடிச்சிட்டு வா” “சரி” என்று சொல்லிவிட்டு சென்றான் சுமோ.பின்னாடியே சென்றது ரினோ. சுமோ பேஸ்டையும் பிரஷ்ஷையும்வைத்துவிட்டு தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தான். ரினோ அந்தபேஸ்டில் சுமோவுக்குத் தெரியாமல் ஓரு இலையின் சாறைப் பிழிந்துவிட்டு வந்துவிட்டது. பிரஷ்ஷை எடுத்து பல்விளக்கிய சுமோ முகத்தைச் சுளித்தான்.ரினோவும் ரிஷியும் தற்செயலாக வருவதுபோல் அங்கு வந்தனர்.“என்ன சுமோ.
மூஞ்சியெல்லாம் ஒருகோணலாப் போகுது” என்றுகேட்டான் ரிஷி. “ கோணலா மட்டுமா போகுது! வாய்க்குள்ள எரியிற எரிச்சல்லஅந்த மூஞ்சியே காணாமப் போயிடும் போல இருக்கு தம்பி” “ஐயய்யோ.. சுமோ என்ன ஆச்சு” என்று மிகவும் பாவமாகக் கேட்டது ரினோ. “அதுவா இந்த பேஸ்ட்டைத்தான் தேச்சேன். ரிஷி அதை கொஞ்சம் நல்லா பாரு அது பேஸ்ட்தானே? இப்படித்தான் ஒரு தடவை எங்கதாத்தா சொரிபுண்ணுக்குப்போட வாங்கி வச்சிருந்த களிம்பை பேஸ்ட்னு நினைச்சு தேச்சுட்டேன்.” என்றான். ரினோ ஒரு இலையைக்கொடுத்து “சுமோஸ இதைச்சாப்பிடு சரியாயிடும்” என்றது. அதை வாங்கிச் சாப்பிட்ட சுமோ “ஆமா சரியாயிடுச்சு” என்று சொல்லிக்கொண்டே ரினோவை சந்தேகத்துடன் பார்த்தான். “தம்பி ரினோ.. எப்படி அவ்வளவு கரெக்டா கையில மருந்துவச்சிருக்கே? இப்பப்புரியுது. இதெல்லாம் உங்க வேலைதானா ஆங்...பாட்டி வர்ற வரைக்கும் எப்படித்தான் உங்க ரெண்டுபேரையும் சமாளிக்கப் போறேனே!” என்றான். சுமோ போட்டுக்கொடுத்த டீயைக் குடித்துப்பார்த்த ரிஷி “சுமோஸ.டீ சூப்பர்” என்றான். ரினோவும் “ஆமா சுமோஸ நிஜமாவே நல்லாத்தான்போட்டிருக்கே” என்றது.“அப்படியா! நல்லா இருக்கா ரொம்ப நன்றிப்பா” என்று சொல்லிவிட்டுஅவனும் டீயைக்குடித்துப் பார்த்தான். ஒருவாய் வைத்துவிட்டு ‘என்னடீ நல்லாத்தானே போட்டோம்!
இவங்களும் ரொம்ப சூப்பர்ங்கிறாங்க!நம்ம வாய்க்குத்தான் ஏதாவது கோளாறா’ என்று நினைத்துக்கொண்டேஇருவரையும் ஒரு மாதிரி பார்த்து “டீ நல்லா இருக்கு? குடிங்ககுடிங்க” என்று தலையை ஆட்டினான். இருவரும் ரசித்துக் குடித்துக்கொண்டே டிவி பார்த்துக்கொண்டிருந்தனர். சுமோவுக்கு ‘அது எப்படி நம்ம டீ மட்டும் இப்படி இருக்கு.ரெண்டுபேரும் ரொம்ப ருசிச்சுக் குடிக்காங்களே’ என்று மண்டைகுடைந்தது. உடனே “ரிஷி. டீ நல்லா இருக்கா?” என்று மீண்டும்கேட்டான்.“ஆமா நல்லா இருக்கு. இந்தா நீ வேணா குடிச்சுப் பாரேன்.”என்று ரிஷி தம்ளரை சுமோவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் டிவியில் மூழ்கினான் . தம்ளரை வாங்கிக் குடித்துப்பார்த்த சுமோ “ ஆமா நல்லாத்தான் இருக்கு. அதெப்படி மூணுபேருக்கும் ஒன்னுபோல போட்டடீ எனக்கு மட்டும் கசாயம் மாதிரி ஆயிடுச்சு.” என்றான். ரினோ “டேஸ்டுக்காக உப்பு மசாலா ஏதாவது சேர்ந்திருக்கும்”என்றது. “சேர்ந்திருக்குமா? சேத்திட்டீங்களா? பாட்டி என்னை இப்படி மாட்டிவிட்டுட்டு போயிட்டேயே!” என்று புலம்பிய சுமோவை ரினோ வாலால் ஒரு அடி குடுத்து












“இங்க பாரு ராக்போவை” என்று டிவியைக்காட்டியது. ராக்போ ஒரு கட்டிடத்தின்மேல் நின்று கொண்டு சிதறி ஓடும் மக்களைப்பார்த்து கத்திக்கொண்டிருந்தான்.

“ஓடாதீர்கள் நான் உங்களைஒன்றும் செய்ய மாட்டேன். என்னை வணங்குங்கள். நான்தான் கடவுள்”என்றான்.இருபது அடி உயரம். உடலெங்கும் ரோமம் நீள நீளமமாகவளர்ந்திருந்தது. பூனையின் கண்கள்போன்று தோற்றமுடைய பெரிய இரு விழிகள் பார்ப்பவர்களைப் பயமுறுத்தியது. பெரிய பெரிய காதுகள். இவன் மனிதனா? மிருகமா? கண்களில் வெறித்தனம் குடியிருந்தது. கைகள் எதையாவது அழிக்கவேண்டும் என்று பரபரப்பில் எப்பொழுதும் அசைந்துக் கொண்டே இருந்தன. குரலில் கொடூரம் தென்பட்டது.கட்டிடத்தின் மேலிருந்து கூச்சலிட்டவன் மக்கள் பயந்து ஓடுவதைப் பார்த்து கீழே பறந்து வந்து நடுரோட்டில் நின்று கத்த ஆரம்பித்தான். அவன் பறக்கும்போது அவன் உடம்பிலுள்ள ரோமங்கள்காற்றில் ஆடியது.

ராக்போ நடுரோட்டுக்கு வந்ததும் மக்கள் அதிக பயத்துடன் அங்கும் இங்கும் சிதறி ஓடினார்கள். யாரும் தன்னுடைய பேச்சைக் கவனிக்காமல் ஓடியது அவனுக்கு பெரும் கோபத்தை வரவழைத்தது. கோபத்தில் கையில் அகப்பட்டவர்களைப் பிடித்து தூக்கி வீசினான்.பல கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் உருட்டித்தள்ளினான். உடைத்தும் எறிந்தான். அவனுடைய அட்டாகாசம் அதிகரித்துக்கொண்டே போனது. அப்பொழுது ஒரு பெரிய போலீஸ் படையே அங்குவந்தது.

ராக்போவைச் சுற்றி நின்று கொண்டு துப்பாக்கியால் அவனைநோக்கி சுட ஆரம்பித்தனர். அதேநேரம் வீட்டில் ரினோ ரிஷியை அவசரப்படுத்திக் கொண்டிருந்தது. “ரிஷி சீக்கிரம் புறப்படு. ராக்போ மக்களைத் துன்பப்படுத்திக்கொண்டிருக்கிறான். அவனை உன்னால் மட்டும்தான் அழிக்கமுடியம். உனக்கு மட்டும் தான் அந்த சக்தி உண்டு.” என்றது.
“இல்லை ரினோ! இதில் மட்டும் நான் உன் பேச்சைக் கேட்கமாட்டேன். உன் உயிரைப் பணயம் வைத்து அவனை அழிக்க வேண்டும்என்றால் அது என்னால் முடியாது.”“ரிஷி தயங்காதே நீ சரியான நேரத்திற்கு திரும்பி வந்து விட்டால் எனக்கு ஒன்றும் ஆகாது. சீக்கிரம் புறப்படு ரிஷி”ரிஷி எதுவுமே சொல்லாமல் அமைதியாக உடகார்ந்து விட்டான்.

“ரிஷி உனக்கு இரக்கமே இல்லையா? அங்கு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ என்னன்னா இப்படி அடம்பிடிக்கிறியே.”

“ரினோஸ எனக்கு முதல்ல நீதான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான்”ரிஷி மட்டும் சென்றால் ரினோவுக்கு அப்படி என்ன ஆபத்து? ரிஷி ஏன் தனியாக செல்ல மறுக்கிறான்? ரிஷியின் பிடிவாதத்தைப் பார்த்த ரினோ “சரி ரிஷி நீ விரும்பியதுபோல் உன்னுடன் நானும் வருகிறேன் புறப்படு” என்று ரினோ சொன்னதும் ரிஷி சந்தோஷமானான். அறையை விட்டு வெளியே வந்தனர்.
சுமோ கண் இமைக்காது டிவி பார்த்துக் கொண்டிருந்தான்.

இவர்களைக்கவனிக்கவில்லை. ரோடாஸ் இருந்த அறைக்குச் சென்றனர். ரிஷி அதில்ஏறி உட்கார்ந்தான். உட்கார்ந்த சில நொடிகளில் அவனுடைய கெட்டப்பே மாறிவிட்டது. வத்ஸாசர் ரினோவிடம் காட்டிய அந்த ஆடை இப்பொழுது ரிஷியின்உடம்பில். அந்த ஆடையிலும் பெரிதாக ‘ரினோ’ என்று எழுதியிருந்தது. ரிஷியின் உடையும் அழகிய கண்ணாடியுடன் கூடிய ஹெல்மட் போன்றதொப்பியும் ரிஷியை வித்தியாசமான மனிதனாக்காட்டியது. அவன் சாதாரணமனிதனல்ல என்று நினைக்கத் தோன்றியது. அவன் இப்பொழுது ரிஷியல்ல. பெயரால் அனைவருக்கும் ரினோவானான். நம்ம ரினோ மட்டும் என்ன குறைச்சலா. இரண்டு கைகளையும்உயரே தூக்கிக்கொண்டு ஏதோ மந்திரம் சொன்னது. உடனே தொப்பியும் கண்ணாடியும் வித்தியாசமன ஆடையுடனும் கலக்கலா மாறிவிட்டது. வால் மட்டும் ஆடைக்கு வெளியே வளைந்து கொண்டிருந்தது ஒற்றைக் கொம்பு தொப்பிக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.

ரினோவும் பறக்கும் தட்டில் ஏறி உடகார்ந்தது. “ரிஷி! ஸ்டார்ட்”என்றது. ரிஷி கைப்பக்கம் இருந்த ஒரு பட்டனை அழுத்தினான். உடனேஇருவரும் ரோடாஸ_டன் மறைந்துவிட்டனர். போலீஸ் துப்பாக்கியால் சுட்டும் துப்பாக்கிக் குண்டுகள் ராக்போவைஒன்றுமே செய்யவில்லை. அதைக்கண்டு திகைத்து நின்றது போலீஸ்படை. ராக்போ அவர்களை நோக்கி கோபமாக நடந்தான். அவன்நடந்துவரும்போது நிலமே அதிர்வது போலிருந்தது. அனைவரும் பயத்தால்ஓடினார்கள்.

அவர்களின் ஜீப்புகளையும் கார்களையும் பைக்குகளையும் ரக்போஉடைத்தெரிந்தான். அவன் மூச்சுவிடுவதே உர் உர்ரென்று உறுமதுவதுபோல் இருந்தது.“கடவுளே! இந்த அரக்கனிடமிருந்து எங்களைக்காப்பற்ற மாட்டியா! ரினோ தப்பு செய்த மனிதர்களை எல்லாம் தண்டிப்பதற்காக உடனேவருவாயே. இப்பொழுது இந்த கொடூரனிடமிருந்து எங்களைக் காப்பாற்ற வரமாட்டியா..” என்று மக்கள் ஒவ்வொரும் மனதில் நினைத்தனர்.

அப்பொழுது இனிய நாதம் போல் ஒரு இசை கேட்டது. ‘இதென்ன.. இனிமையான இசை சத்தம். இது எங்கிருந்து வருகிறது? இந்த ராக்போவிடமிருந்தா? சே! சே! இருக்கமுடியாது. இவன்மூச்சுவிட்டாலே பன்றி உறுமுற மாதிரி இருக்குது. இது வேறு எங்கிருந்தோ வருகிறது’ என்று அனைவரும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்பொழுது அங்கே ரோடாஸில் ரினோவும் ரிஷியும் “ஹாய்ஸஏய்ராக்போ. ஹாய் பிரண்ட்ஸ்”என்று கையை ஆட்டிக்கொண்டே பறந்துவந்தனர்.

அவர்களுடைய ரோடாஸ்தான் அந்த இனிய இசையுடன் பறந்தது.அவர்களைப் பார்த்ததும் மக்கள் முதலில் பயந்தனர். ‘இதென்னவினோத உயிரினங்கள் வேற்றுக் கிரகத்திலிருந்து பூமிக்குப் படையெடுத்துள்ளதா? ஐயோ! இவையெல்லாம் சேர்ந்து நம்மை என்ன செய்யப்போகிறதோ?’ என்று அஞ்சினார்கள்.அவர்களைப் பார்த்து ரிஷியும் ரினோவும் “ஹாய் பிரண்ட்ஸ் பயப்படாதீங்க. நாங்கதான் ரினோ உங்களையெல்லாம் ராக்போவிடம் இருந்துகாப்பாற்றத்தான் நாங்கள் வந்திருக்கிறோம்.” என்றனர்.

அவர்கள் அப்படிச் சொன்னதும் ராக்போவுக்கு கோபம் அதிகரித்தது.“டேய் பொடியன்களாஸ நீள்கள் யார்? இந்த முட்டாள்களை என்ன்pடமிருந்து நீங்கள் காப்பாற்றப் போகிறீர்களா. முதலில் உங்களை யார் காப்பாற்றப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.”என்று கர்ஜித்தான்.“ஏய் ராக்போ உனக்கு சமாதி கட்டுவதுதான் எங்கள் முதல்வேலை.”“டேய் நீங்கள் முதலில் தலை குனிந்து என்னை வணங்குங்கள்.நான்தான் இனி அனைவருக்கும் கடவுள். என்னைத்தான் அனைவரும்வணங்க வேண்டும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும்.”

“ நீ கடவுளா! முட்டாள் நீ சாத்தான். உன்னைத் தலைவணங்க நாங்கள் வரவில்லை. உன் தலையை எடுக்க வந்திருக்கிறோம்.”

“ஹா....ஹா...என்னை உங்களால் ஒன்றும் செய்யமுடியாது. நீங்கள் இன்றோடு ஒழிந்தீர்கள்.” என்று கத்திக்கொண்டே அவர்களை நோக்கிப்பாய்ந்தான் ராக்போ. ரிஷி அவன் அருகில் வரும்வரைக் காத்திருந்து பின் சட்டென விலகினான். அதனால் ராக்போ பாய்ந்த வேகத்தில் ஒரு பெரிய கட்டிடத்தின் மீது மோதினான். ம்....ம்.... என்று உடலை ஒரு உதறு உதறினான். மீண்டும் வெறியோடு ரிஷியை நோக்கிப் பாய்ந்தான். ரிஷி அப்பொழுது ஒரு கட்டிடத்தின்மேல் நின்றிருந்தான். ராக்போபறந்து அருகில் வந்ததும் ரினோ மேலே பறந்து வாலைச் சுழற்றி அவனை அடித்தது. அதே வேகத்தில் ரிஷி ரோடாஸை அவன்மீதுமோதினான். இருவரின் தாக்குதலால் ராக்போ கட்டிடத்தின் மேலிருந்தஒரு தண்ணீர்த்தொட்டியில் போய் மோதினான்.தொட்டி உடைந்து ராக்போவின்மேல் தண்ணீர் கொட்டியது.

ராக்போஉடலெல்லாம் தண்ணீரால் நனைந்தது.அப்பொழுது ரிஷியும் ரினோவும் மக்களைப் பார்த்து கைகளைஆட்டி “பயப்படாதீர்கள். நாங்கள் ராக்போவை அழிக்கவே வந்திருக்கிறோம். நாங்கள் உங்கள் நண்பர்கள் ‘ரினோ’” என்றனர்.உடனே மக்கள் ஆர்ப்பரித்தனர்.

“ரினோ! ரினோ! அந்த ராக்போவைக் கொன்றுவிடுங்கள்”என்று கூச்சலிட்டனர்.இதைக்கேட்டு ராக்போவிற்கு எரிச்சலும் கோபமும் அதிகரித்தது. பற்களை நற நற வென்று கடித்துக்கொண்டே உடம்பை வேகமாக உதறினான். உடம்பிலிருந்து தண்ணீர் பல அடி தூரத்திற்கு தெரித்தது.“டேய்ஸபொடியன்களா நான் உங்களை அழிக்காமல் விடமாட்டேன்.இப்பொழுது செல்கிறேன் மீண்டும் வருவேன்.” என்று கத்திக்கொண்டேபறந்துவிட்டான்.

ரினோவையும் ரிஷியையும் பார்த்து பயந்து ராக்போ ஓடிவிட்டான்என்று நினைத்தமக்கள் “ரினோ! ரினோ1” என்று இருவரையும் பார்த்துகைகளை அசைத்தனர். அவர்களும் கைகளை ஆட்டிவிட்டு ரோடாஸில்பறந்தார்கள்.

“ரினோஸ ராக்போ எங்கு சென்றான்?”என்று ரிஷி கேட்டான்.“தெரியலை ரிஷி.அவன் ரொம்ப வேகமாக பறந்துபோயிட்டான்.”இருவருக்கும் ராக்போவைத் தொடரமுடியாதது ஏமாற்றம் அளித்தது. ரிஷி மீண்டும் பட்டனை அழுத்தினான். சில நொடியில் அறையில் இருந்தனர். ரோடாஸை விட்டு இறங்கியதும் சாதாரண நிலைக்கு மாறினான் ரிஷி. ரினோ அப்படியே அறையைவிட்டு வந்தது. அதைப்பார்த்து ரிஷி“ரினோ என்ன அப்படியே இருக்கே” என்றான்.

“கொஞ்சம் வேடிக்கையைப் பாரு” என்ற ரினோ சுமோவைத்தேடிச்சென்றது.இவ்வளவு நேரமும் டிவி பார்த்துக்கொண்டிருந்த சுமோ அப்பொழுதுதான் சமையலறைக்குச் சென்று “ இந்த ரினோவோட சாகசத்தைப்பாத்துக்கிட்டிருந்ததுல சமையல் பண்ண நேரமாயிடுச்சே. ரிஷியும் ரினோவும் இப்ப வந்துடுவாங்களே!” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டுவேகமாக சமைக்க ஆரம்பித்தான். அப்பொழுது “சுமோ. அந்த ரினோவை எங்கே? அவன் இங்கதான் இருக்கான் எனக்குத் தெரியும். சொல் இல்லைன்னா உன்னைகடிச்சித் தின்னுடுவேன்”என்று ராக்போவின் குரல் கேட்டது.

“ஆ.. இது அந்த படுபாவி ராக்போ பய குரல் மாதிரியில்ல இருக்கு.ரினோ இங்க இருக்கிறது இவனுக்கு எப்படித்தெரியும்? சண்டாளன் கடிச்சித் தின்னுருவேன்னு சொல்றானே. இவன் இப்படி மனுசக் கறியத்தின்னுதான் இப்படி வளர்ந்திருக்கானோ!.

ஐயோ இந்த ரினோவாவது இப்ப வரக்கூடாதா. இந்த ரிஷியைத்தேடி வீதிவீதியா அலைஞ்சு கடைசியில விதி ராக்போகிட்ட அழைச்சிக்கிட்டு வந்துடுச்சே.” என்று சுமோ புலம்பினான். அவன் உடலெல்லாம்பயத்தால் நடுங்கியது.“டேய் என்ன புலம்பறே. இப்ப ரினோ எங்கேன்னு சொல்லப்போறியா இல்ல உன் குரல்வளையில் கடிச்சி ரத்தத்தைக் குடிக்கட்டா.”“ஐயோ! கடிச்சித் தின்னுருவேங்கிறான் ரத்தத்தைக் குடிப்பேங்கிறான்.யப்பா ராக்போஸஅந்த ரினோ யாருன்னே எனக்குத் தெரியாதுப்பா. நீ என்னை வேணும்னா கொல்லு. கடி என்ன வேணும்னாலும் செய்துக்கோ.

நான் இந்த உலகத்துல இருந்து என்னத்த சாதிக்கப் போறேன்.ஆனா ஒண்ணு உன்னை நேரில் பார்க்கிற தைரியம் எல்லாம்எனக்குக் கிடையாது. அதனால நான் கண்ணை மூடிக்கிறேன்.சட்டுப் புட்டுனு கொன்னுறு. இந்தப் பாட்டி என்னை இங்க கூட்டிட்டுவந்து இப்படி கொலைக்களத்தில நிக்க வச்சமாதிரி நிக்க வச்சுட்டாங்களே. எங்க அப்பா அம்மாஇ தாத்தா எல்லாரும் போன இடத்துக்குநானும் போகவேண்டியது தானாஸ. கடவுளே! ம்....நம்ம விதி அவ்வளவுதான்”என்று புலம்பிக் கொண்டே கண்களை இறுக மூடிக்கொண்டான். பயத்தால் உடம்பு நர்த்தனம் ஆடியது.சிறிது நேரம் எந்த சத்தமும் கேட்காததால் “என்ன சத்தமேயில்லை.போயிட்டானா?” என்று லேசா கண்களைத் திறந்தான்.

அப்பொழுது“ப்பே” என்று பயமுறுத்துவது போன்று சத்தம் கேட்டது.ஏற்கனவே ராக்போ பயத்தில் இருந்தவன் இந்த சத்தத்தால்“யம்மா... யப்பா...” என்று அலறிவிட்டான். அங்கே ராக்போ குரலில் பயமுறுத்திக் கொண்டு நின்றது ரினோதான். ரிஷியும் அருகில் சிரித்துக்கொண்டே நின்றிருந்தான்.“ஏய் சுமோ என்னாச்சு? ஏன் அலறினே?” என்று கேட்டது ரினோ.சுமோ அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டு வேகமாக மூச்சுவிட்டுக்கொண்டு ஒன்றுமில்லை என்பதுபோல் கையை அசைத்தான்.அடுத்து தண்ணீர் வேண்டும் என்று சைகையிலேயே கேட்டான்.

ரிஷிதண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததும் அதை வாங்கிக் குடித்துவிட்டுஇ“யப்பாஸஒரு அப்பாவி மனுசனை ஒரு நிமிஷத்துல இப்படி ஆடவைச்சிட்டீங்களே. உங்களுக்கே இது நல்லா இருக்கா? அநியாயமாஒரு உயிரைக் கொல்லப்பார்த்தீங்ளே.” என்று அப்பாவிபோல் கேட்டான்.

“சுமோ நீ ரொம்ப நல்லவன்தான். உன் உயிர் போனாலும் பரவாயில்லைன்னு நினைச்சியே அதுவே உன்னை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருச்சு.” என்றான் ரிஷி.

“நான் நல்லவனான்னு தெரிஞ்சுக்க அப்படி ஒரு சோதனை தேவையா?. சரி அதை விடுங்க. ரினோ ராக்போவை சும்மா புரட்டிஎடுத்துட்டல்ல. ஆனா அந்தப்பய தப்பிச்சட்டானே.” என்று சொல்லிவிட்டு ரிஷியை ஒரு மாதிரி மேலிருந்து கீழாகப் பார்த்தான். அதைக்கவனித்த ரிஷி “ஏய் என்ன என்னை அப்படிப் பார்க்கிறே?” என்று கேட்டான்.

“ஆமா காலையிலிருந்து நீ எங்க போன கம்ப்யூட்டர் கிளாசுக்கா?இதை நான் நம்பணுமாக்கும்? உண்மையைச் சொல். ரினோகூடஇருந்த அந்த ஸ்கைமேன் நீதானே?”“ஸ்கைமேனா! இதென்ன புதுப்பேரு! நீயே பேரு வச்சிட்டியா?”“ஆமா நீ ஸ்கைமேன்தான்! ரிஷி! உண்மையைச்சொல். நீதானேஅது. நீயேதான் இதப்போயி உங்கிட்ட ஏன் கேக்கணும். உன் உதட்டிலஇருக்கிற அந்த மச்சம்தான் சொல்லுதே அது நீதான்னு. கண்ணா..அந்த பறக்கும் தட்டை அதுதாம்பா ரோடாஸ் அதை ஒரே ஒருமுறை எங்கிட்ட காட்டுங்களேன். என்ன பளபளப்பு! என்ன மினுமினுப்பு! நம்ம நகைக் கடக்காரங்க மட்டும் பார்த்தாங்கன்னா உரசி எடுத்து உருக்கிஉருத்தெரியாம பண்ணிடுவாங்க.

நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன்எனக்கு மட்டும் காட்டுங்கப்பா.”
“நீ உரசி எடுத்துரக்கூடாதே.”“ரினோ நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன் ராசாஸ”“ ஆனால் அது அப்பவே மறைஞசிட்டுது. இனி நாளைக்குத்தான்பார்க்க முடியும்”

“அப்படின்னா நீ போட்டிருக்கிற கண்ணாடியையும் தொப்பியையுமாவது தா. நான் கொஞ்சம் போட்டுப் பார்த்துட்டு தர்றேன்.”ரினோ தொப்பியையும் கண்ணாடியையும் கழற்றி சுமோவிடம் நீட்டியது.

சுமோ அதை வாங்கும் பொழுது இரண்டும் மறைந்து விட்டது.“ஆகாஸஉங்களுக்கு மாய மந்திரமெல்லாம் தெரியுமா? ஐய்யா! ராசாக்களா இப்பவாவது நீங்க யாருன்னு சொல்லிடுங்கப்பா. என் மண்டைவெடிக்கிறமாதிரி இருக்கு.”

உடனே ரினோ “சுமோ நாங்க யாருன்னுதானே தெரியணும். சொல்றேன். உனக்கு ஸ்பைடர்மேன் தெரியுமா?” என்று கேட்டது.“வேண்டாம்.. நீங்க சொல்லவே வேண்டாம். நான் இனிமேல் கேட்கவே மாட்டேன். எனக்கு சமையல் கட்டுல வேலையிருக்கு. நான்வர்றேன்”என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.ரிஷி டிவியை ஆன் செய்தான். அனைத்துச் சேனல்களிலும் ரினோராக்போ பற்றிய செய்திகள்தான்.‘ராக்போவைத் தொடர்ந்து மேலும் வாய் பேசக்கூடிய ஒரு வினோதமிருகமும் அதனுடன் மற்றொருவனும் பறக்கும் தட்டு போன்ற வாகனத்தில் வந்தார்கள்.

அவர்கள் தங்களை ‘ரினோ’ என்று சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அந்த வாகனம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. அதில் ‘கல்பாவின் ரோடாஸ்’என்று எழுதியிருந்தது.‘கல்பா’ என்றால் என்ன? ஒருவேளை கல்பா என்ற பெயரில் யாராவது இவர்களுக்குத் தலைவனாக இருக்கக்கூடுமோ? என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த ரோடாஸில் வந்த அந்த வினோத மிருகம்தான் இதுவரை ரினோ என்ற பெயரிலும் தப்புகள் செய்தவர்களை போலீஸில் சரணடையச் செய்தது என்று அதை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.அதனால் இந்த ரினோவால் பொது மக்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது.

இந்த அதிசய மனிதர்கள் இன்றைய விஞ்ஞான உலகத்தில் யாரோஒரு விஞ்ஞானியால் ரகசியமாக உருவாக்கப்பட்ட இயந்திர மனிதர்களாகவும் இருப்பதற்கு சாத்தியமிருப்பதாக சில விஞ்ஞானிகள் கருத்துதெரிவித்தனர்.மேலும் சிலர் இவர்கள் வேற்று கிரகத்து மனிதர்களாகவும் இருக்கலாம் என்கின்றனர். இவர்களைப் பற்றி ஆராய்வதற்காக உலகிலுள்ளவிஞ்ஞானிகள் பலர் சென்னைக்கு வர இருக்கின்றனர்.ராக்போ மிகவும் கொடூரமானவனாக இருக்கிறான். ஆனால் ரினோஅபபடியல்ல. ராக்போவிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வந்திருப்பதாகச்சொல்வதால் ரினோவால் மக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்றுநம்பப்படுகிறது.’டிவி பார்த்துக்கொண்டிருந்த ரிஷியிடம்“ரிஷி உன்னைத் தேடி அந்த இன்ஸ்பெக்டர் ஆனந்த் வந்திருந்தாருப்பா.

நீ வந்த உடனே உன்னை அவர் வீட்டுக்கு வரச்சொன்னார்.”என்று சுமோ வந்து சொன்னவுடன் ரிஷி டிவியை அணைத்துவிட்டு“ இதை ஏன் அப்பவே சொல்லல.” என்று கேட்டான்“நீங்க பண்ணுன களேபரத்துல எங்க அப்பா அம்மா யாருன்னேமறந்திட்டேன். அப்புறம் இது எப்படி ஞாபகம் வரும்.”“ நான் எங்க போயிருக்கேன்னு சொன்னே.?”“ இரு.. இரு நான் முதல்ல இருந்து என்ன நடந்துச்சுன்னு சொல்லிடுறேன். இல்லாட்டி நீ கேள்வி மேல கேள்வியா கேட்பே. நான் குழம்பிப்போய் எதையாவது உளறிடுவேன்.” என்று சொல்லிவிட்டு நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் டிவி பார்த்துக் கொண்டிருந்த சுமோ ‘இது எந்த புண்ணியவான் டிவி பார்க்க விடாம தொந்தரவு செய்யிறது’ என்று சொல்லிக்கொண்டே கதவைத் திறந்தான்.அங்கு ஆனந்த் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும் ‘இவரு எதுக்கு இங்கே வந்திருக்காரு.’என்று யோசித்தான்.ஆனந்துக்கும் ஏற்கனவே சுமோவைத் தெரியும் என்பதால் அவனிடம் “ஏய் நீ இங்கே என்ன செய்யிறே? மற்றவங்களெல்லாம் எங்க?”என்று கேட்டார்.“பாட்டி ஊருக்குப் போயிருக்காங்க. அதனால ரிஷிக்குத் துணையாஎன்னை இங்கே இருக்கச் சொல்லியிருக்காங்க.”“ ரிஷி எங்கே?”“ரிஷி வெளியில போயிருக்கான். ரினோ கம்ப்யூட்டர் கிளாஸ் போயிருக்கான்.”“ரினோவா அது யாரு?”“ஓ.... டிவியை பார்த்துட்டு இருந்தேனா அந்த ஞாபகத்திலே உளறிட்டேன்.

ரிஷிதான் கம்ப்யூட்டர் கிளாஸ் போயிருக்கான். ரினோ அதோகலக்கிட்டு இருக்கான் பாருங்க” என்று டிவியைக் காட்டினான்.“ ரினோ யாரிது? இவங்களை உனக்குத் தெரியுமா?”“எனக்கு மட்டுமா தெரியும் இந்த உலகத்துக்கே நல்லா தெரிந்திருக்குமே.”“இவங்க எங்கிருந்து வந்தாங்க?”“அது யாருக்குத் தெரியும்? அங்க பாருங்க அவங்க அந்த ராக்போ பயலைத் தாக்குறதை. ஆங்.. அப்படித்தான். அடி குத்து” என்றுசொல்லிக் கொண்டு பக்கத்திலிருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தை அடிக்ககையை ஓங்கிவிட்டான். அதற்குள் சுதாரித்துக் கொண்டு“சார் மன்னிச்சிடுங்க டிவியைப் பார்த்திட்டு கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன்.” என்றான்.

“நீ இன்னொரு தடவை உணர்ச்சி வசப்படுறதுக்குள்ள நான்கிளம்புறேன். இல்லை அப்புறம் நானும் உணர்ச்சிவசப்பட்டுருவேன். நீஎன் அடியைத் தாங்கமாட்டே. ரிஷி வந்தவுடன் நான் வரச்சொன்னேன்னு
சொல்லு”.
“சார் டீ போட்டுத்தர்றேன் சாப்பிட்டுட்டுப் போங்க”
“உன்னோட டீயை அந்த ராக்போவுக்குக் கொடு” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.சுமோ சொல்லி முடித்துவுடன் ரிஷி ஆனந்தைப் பார்க்கக் கிளம்பினான். வழியில் மாஷா டீச்சர் அவனைப் பார்த்து “ரிஷிஸ என்ன உன்னைக் கெஞ்ச நாளா பார்க்கவே முடியலியே. பாட்டியையும் காணோம்?”என்று கேட்டாள.;

“பாட்டி ஊருக்குப் போயிருக்காங்க. நான் இங்கேதான் இருக்கேன்.கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போயிட்டிருக்கேன்.”“இப்ப எங்க கிளம்பிட்டே?”“கோபி வீட்டுக்கு”“ரிஷி. நானும் கோபியை ஒரு விஷயமா பார்க்க வேண்டியிருக்கு.அதனால் உங்கூட நானும் வர்றேன்.”‘இவங்க எதுக்கு கோபியைப் பார்க்கணும்?’என்று மனதில் நினைத்தரிஷி “சரி வாங்க” என்றான்.மாஷா டீச்சர் என்னன்னவோ பேசிக்கொண்டே வந்தார். ரிஷி எதுவுமேகாதில் வாங்கவில்லை. அவனது மனம் ‘ஆனந்த் அங்கிள் எதற்காகவரச்சொன்னார். ஒருவேளை தேசிகனை கண்டு பிடித்துவிட்டாரோ?’என்று எண்ணிக் கொண்டிருந்தது.

ஆனால் மாஷா டீச்சர் திரும்ப திரும்ப கோபியின் பெயரையே சொல்வது போல் தெரிந்தது. அப்பொழுதுதான் ரிஷி மாஷா என்ன பேசுகிறார்என்று கவனிக்க ஆரம்பித்தான்.“ரிஷி! கோபி பாவம் அம்மா இல்லாத பையன். அவங்க அப்பாவும்ரொம்ப நல்லவருதான்”இப்படியே போய்க்கொண்டு இருந்தது மாஷாவின் பேச்சு. ரிஷிக்கு ஏதோ புரிவதுபோல் இருந்தது.

‘ஓகோ.. இப்படிப்போகிறதா விஷயம்’என்று நினைத்து மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டான்.ஆனந்த வீட்டில் கோபிதான் இருவரையும் வரவேற்றான். சிறிதுநேரம் கழித்து ஆனந்த் வந்தார். ர்pஷியுடன் வந்த மாஷாவைப் பார்த்துயாரென்று கேட்டார். ரிஷி மாஷாவைப் பற்றி சொல்லிவிட்டு “அங்கிள்இவங்களுக்கு கோபின்னா ரொம்ப இஷ்டம். அவனுக்கு அம்மா இல்லைன்னு தெரிஞ்சதும் ரொம்பவே வருத்தப்பட்டாங்க.”என்றான்.

“ஓஅப்படியா! ஏன் இவங்க அவனுக்கு அம்மாவா இருக்கப்போறாங்களா?” என்று சிரித்துக் கொண்டே மாஷாவைப் பார்த்தார்.மாஷா வெட்கத்துடன் சிரித்தாள். பின்பு ஆனந்த்இ“தப்பா எடுத்துக்காதீங்க சும்மா வேடிக்கைக்குச் சொன்னேன்”என்று சொல்லிவிட்டுஇ“கோபிஸஅவங்ககூடப் பேசிக்கிட்டிரு. ர்pஷிஸ நீ என்கூட வா” என்று ரிஷியை அழைத்துக் கொண்டு தனிமையான இடத்திற்குச் சென்றார்.“என்ன அங்கிள் என்ன விஷயம்? எதற்காக வரச்சொன்னீங்க?”என்று ரிஷி கேட்டான்.

“ரிஷி அந்த ஜான்இகாசி ரெண்டுபேரையும் விசாரித்தோம். ஆனால்அவங்க தேசிகனைப்பற்றி எதுவுமே சொல்ல மாட்டேங்கிறாங்க. தேசிகன்யாருன்னே தெரியாதுங்கிறாங்க.”

“ ஓ அப்படியா! நான் அவங்களைப் பார்க்கலாமா?”“ உங்கிட்ட மட்டும் சொல்லிடுவாங்களா?” ஆனந்தின் கேள்வியில்ஏளனம் தெரிந்தது. ரிஷி அதைக் கண்டு கொள்ளவில்லை.“நிச்சயம் சொல்வாங்க.” என்றான்.

“சரி! அதையும் பார்க்கலாம்”என்று சொல்லிவிட்டு ரிஷியை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார். “அங்கிள் நான் மட்டும் அவங்ககிட்ட போய்க் கேட்கிறேன். நீங்கள்வந்தால் அவங்க எதுவும் சொல்ல மாட்டாங்க.” என்று ரிஷி சொன்னதும் ஆனந்தும் ‘சரி’ என்று சொல்லி விட்டார்.

ரிஷிக்கு அவர் உடனே சம்மதித்தது ஆச்சர்யமாக இருந்தது.ஆனால் அவர் வேறு மாதிரி திட்டம் போடுகிறார் என்பது அவனுக்குத்தெரியாது. இல்லையென்றால் அவனை ஏன் இங்கு அழைத்து வரப்போகிறார்.ரிஷி ஜான்காசி இருந்த செல்லுக்குச் சென்றான். அவர்கள் இருவரும் இவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே.

“என்ன தம்பி பிக்பாக்கட்டா? பார்க்க டீசன்டா படிச்ச பையன் மாதிரி இருக்கே. எப்படிமாட்டினே?” என்று கேட்டார்கள்.ரிஷி அவர்கள் பேச்சை சட்டை செய்யவில்லை. அவனுக்கு அவர்களைப் பார்த்தவுடன் அப்படியே நசுக்கிவிடலாமா என்று தோன்றியது.

இறுக்கமான முகத்துடன்“ தேசிகன் எங்கே இருக்கிறான்?” என்று கேட்டான்.“இங்க பாருடா வந்துட்டாரு கேள்வி கேட்க சிபிஐ ஆபிசர். தம்பி நீ யாருன்னே எங்களுக்குத் தெரியாது. பார்த்தா நல்ல பையனா தெரியுறே. பேசாம போயிடு அப்புறம் நாங்க வெளியில வந்தவுடன் உன்னைத்தான் முதல்ல தேட வேண்டியிருக்கும்.” என்று காசி சொன்னதும் ரிஷிக்கு கோபம் அதிகரித்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் “தேசிகன் எங்கே இருக்கிறான்?” என்று மீண்டும் சற்று அதட்டலுடன் கேட்டான்“ஏய் காசிஸ இவன் உதை வாங்காம போகமாட்டான் போலிருக்கு”என்ற ஜானை முறைத்துப் பார்த்த ரிஷி

“டேய்ஸஎன்னை யாருன்னுஉங்களுக்குத் தெரியாது. ஆனால் உங்களுடைய சரித்திரமே எனக்குத்தெரியும். எல்லாத்தையும் சொல்லவா?” என்றான்.“டேய் நம்ம சரித்திரமே தெரியுமாண்டா. இப்ப இவன் சரித்திரத்தைமுடிச்சருவோமா?” என்று சொல்லிக் கொண்டு இருவரும் ரிஷியைத்தாக்க வந்தார்கள். ரிஷி இரண்டு கைகளாலும் அவர்களின் கழுத்தைப் பிடித்துத்தலைக்கு மேலே தூக்கிக் கொண்டு “நீங்கள் ரெண்டுபேரும் தில்லையோட சேர்ந்து சட்டவிரோதமான காரியங்களைச் செய்தது அடுத்து தேசிகனோட சேர்ந்து தில்லையையும் வத்ஸாசரையும் கொன்னது ரினோவைத் தேடுவது எல்லாம் தெரியும். இப்போ தேசிகன் எங்கே இருக்காங்கிற உண்மையைச் சொல்லலேன்னா தில்லைக்கு ஏற்பட்ட நிலைமைதான் உங்களுக்கும் ஏற்படும்.”என்றான்.

ரிஷி தில்லையையும் வத்ஸாசரையும் நினைவு படுத்தியவுடன் இருவரும் சற்று ஆடித்தான் போய்விட்டார்கள். ‘இவன் யார் இவனுக்குஎப்படி இதெல்லாம் தெரியும்?’ என்று நினைத்தனா.;

“ஏய் நீ யார்? என்ன கதை விடுறே. எங்களுக்கு தேசிகனையும் தெரியாது தில்லையையும் தெரியாது யாரையும் தெரியாது” என்றனர்“அப்படின்னா உங்களோட இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கோங்க இன்னும் சில நொடியில் நீங்களும் பஸ்பமாகப் போறீங்க‌” என்று ரிஷிசொன்னவுடன் இருவரும் அப்படி ஏதும் நடந்துவிடுமோ என்றுபயந்து “சொல்லிவிடுகிறோம்” என்றார்கள்.

“ம்.. சொல்லுங்க. ஆனால் முதல்ல இருந்து எதையும் மறைக்காமசொல்லணும்” என்ற ரிஷி இருவரையும் பொத்தென்று கீழே போட்டான். காசி உணமைகளைச் சொல்ல ஆரம்பித்தான். வத்ஸாசரின் குடிலைவிட்டு வந்தவுடன் தேசிகன் மிகவும் ஏமாற்றமான மனநிலையில் இருந்தான்.

ரினோவைத் தவற விட்டதும் வத்ஸாசரின்கண்டுபிடிப்பு என்ன என்று தெரிந்து கொள்ள முடியாததுமே அவனதுஏமாற்றத்திற்கு காரணம். வத்ஸாசர் தில்லை இருவரின் மரணமும் மனதில் பயத்தை ஏற்படுத்தியதால் மீண்டும் அந்த குடிலுக்குச் செல்ல தேசிகனின் மனதில் தைரியம் ஏற்படவில்லை. இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் “டேய்ஸ.காசி அந்த முகுந்தனையும் ராமுவையும் அழைச்சிட்டு வாங்க” என்றான். இருவரையும் அவன் ஒரு இடத்தில் மறைத்து வைத்திருந்தான்.

சுதர்சனை இவன்தான் கொன்றான் என்பது இருவருக்கும் தெரியும்என்பதாலும் இவர்களை எந்த விதத்திலாவது பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நினைத்ததாலும் அவர்களை வெளியே விடவில்லை.இருவரும் அழைத்து வந்தவுடன். தேசிகன் அவர்களிடம்“என்ன ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க? இப்ப உங்களோடஆசையை நிறைவேற்றலாம்னு நினைக்கிறேன். உங்கள் ஆராய்ச்சியைத்தொடங்க நேரம் வந்து விட்டது.” என்றான்.

“டேய் துரோகி! கொலைகாரா! உன் கபடமான எண்ணத்தைத்தெரிஞ்சிக்காம உன்னைத்தேடி வந்ததுக்கு பரிசா எங்க நண்பனையே கொன்னுட்டியே பாவி. உன் உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்எங்களை விட்டு விடு. நாங்கள் இனிமேல் எங்கள் வாழ் நாளிலேயே இந்த ஆராய்ச்சியைப் பற்றி நினைக்கமாட்டோம்.” என்று ராம் கோபமாகப் பேசினான்.“ஏய்ஸநிறுத்து உன் முடிவை யார்கேட்டது. இனி நான் எடுக்கும்முடிவைத்தான் நீங்க ஏத்துக்கிடணும். நீங்கள் உங்கள் ஆராய்ச்சியைத் தொடங்கணும். அதோ அந்த தொலைபேசியில் உங்க வீட்டிற்குபோன் செய்து ‘ஆராய்ச்சிக்காக வெளியூர்ல இருக்கிறதாச் சொல்லுங்க.வேறு ஏதவும் பேசக்கூடாது.

மீறினால் உங்க குடும்பம் அதை நானேசொல்லவேண்டாம் என்னைப் பற்றித்தான் உங்களுக்கு நல்லா தெரியுமே.என்னோட வாங்க. ” என்று அவங்களை அழைச்சிக்கிட்டு போயிட்டான்.ஆனால் அவன் எங்கே போனான்? இப்போ எங்கே இருக்கிறான்?ஒன்றுமே எங்களுக்குத் தெரியாது. ஏதாவது முக்கியமான விஷயம்என்றால் மட்டும் போனில் பேசுவோம். இப்போ சிலமாதங்களா அவனைத்தொடர்பு கொள்ளவே முடியல.

மத்தவங்ககிட்ட கேட்டா அவன் வெளிநாடு போயிருக்கிறதா சொல்றாங்க..காசி சொல்லிய அனைத்தையும் கேட்டுவிட்டு ரிஷிஇ ஆனந்திடம்திரும்பி வந்தான்.“என்ன ரிஷி...ஏதாவது சொன்னாங்களா?” என்று ஆனந்த் கேட்டார்.

“இல்லை அவங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றாங்க”என்று ரிஷி சொன்னதும் அவனை சந்தேகத்துடன் பார்த்த ஆனந்த்.“ அதுதான் நான் முதலிலேயே சொன்னேனே அவங்க உன்கிட்டஎதுவும் சொல்ல மாட்டாங்கன்னு.” என்றார்“ ஆமா அங்கிள்நீங்கள் சொன்னது சரிதான். நான் வர்றேன்.”என்று சொல்லி விட்டு ரிஷி கிளம்பினான்.
அப்பொழுது...... - கனிஷ்கா கலா

kalpa2011@yahoo.com